பெகாசஸ்.. ஐபோன் ஒட்டு கேட்பு..மக்களை அச்சுறுத்தும் பாஜக..அமெரிக்காவில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு
நியூயார்க்: தனது ஐபோன் ஒட்டுக்கேட்கப்படுவதை தான் ஏற்கெனவே அனுமானித்திருந்ததாக ராகுல்காந்தி கூறியுள்ளார். இந்தியாவில் மக்களை அச்சுறுத்தக்கூடியதாக பாஜக அரசு உள்ளது என்று அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். 10 நாள் பயணமாக அமெரிக்காவுக்கு சென்றுள்ள ராகுல்காந்தி நேற்று ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் தொழில்முனைவோருடன் பேசிய போது இதனை தெரிவித்துள்ளார்.
ராகுல்காந்தி அமெரிக்கா பயணத்தில் வால் ஸ்ட்ரீட் நிர்வாகிகள், அமெரிக்க வாழ் இந்தியர்கள், அமெரிக்காவின் நாடாளுமன்ற பிரதிநிதிகள் மற்றும் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடனும் ராகுல் காந்தி கலந்துரையாடுகிறார். ஜூன் 4ம் தேதி பொதுக் கூட்டம் மாதிரியான மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியையும் நடத்துகிறார்.
நேற்று கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சாண்டா கிளாராவில் இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'மொஹபத் கி டுகான்' எனும் நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பேசியிருந்தார். இது பாஜகவினரிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இதனைத் தொடர்ந்து வாஷிங்டனில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் தொழில்முனைவோருடன் கலந்துரையாடினார். இதில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், மனித குலத்தின் மீது அவற்றின் தாக்கம், இந்திரங்களின் நவீன வளர்ச்சி போன்றவை குறித்து விவாதித்தார்.

அப்போது பேசிய அவர், "இந்தியாவில் எந்தவொரு தொழில்நுட்பத்தையும் பரப்ப விரும்பினால், அதிகாரம் பரவலாக்கப்பட்ட அமைப்பை கொண்டிருக்க வேண்டும். அதேபோல டேட்டா பாதுகாப்பில் பொருத்தமான விதிமுறைகள் இருக்க வேண்டும். விதிமுறைகள் இத்தனை இருந்தாலும் கூட பெகாசஸ் ஸ்பைவேர் போன்ற பிரச்னைகள் இருக்கிறது. இருப்பினும் இது குறித்து கவலைப்படவில்லை. ஒரு கட்டத்தில் எனது ஐபோன் ஒட்டுக்கேட்கப்படுவது எனக்கு தெரிந்தது.
எனவே புதியதாக தொழிலுக்கு வரும் நிறுவனங்கள் டேட்டா பாதுகாப்பு குறித்த உறுதியான கொள்கைகளை கொண்டிருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அரசு உங்களுடைய தொலைப்பேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்க முடிவு செய்துவிட்டால் அதை யாராலும் தடுக்க முடியாது" என்றும் கூறியுள்ளார்.
இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனம் தயாரித்த 'பெகசாஸ்' உளவு மென்பொருளை பயன்படுத்தி, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் அரசுகள், முக்கிய பிரமுகர்களின் செல்போன்களை உளவு பார்த்ததாக சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. குறிப்பாக, இந்தியாவில் எதிர்க்கட்சித் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட முக்கியப் பிரமுகர்களின் செல்போன்கள் உளவு பார்க்கப்பட்டதாக தகவல் வெளியானது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த மென்பொருள் மூலம் உளவு பார்த்ததாக எழுந்த புகார் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி கண்காணிப்பில் குழு ஆய்வு செய்ய தொழில்நுட்ப நிபுணர் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு தனது அறிக்கையில் விசாரணைக்கு மத்திய அரசு ஒத்துழைக்கவில்லை என்று தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications