பூமியை நெருக்கமாக கடந்து செல்லும்.. 2 கால்பந்து மைதானம் சைஸ் அளவுள்ள விண்கல்! விஞ்ஞானிகள் ஷாக்
நியூயார்க்: விண்கற்கள் மூலம் பூமிக்கு ஆபத்து இருக்கிறது என்று விஞ்ஞானிகள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். இப்படி இருக்கையில், அடுத்த சில நாட்களில் பூமிக்கு நெருக்கமாக 720 அடி அளவு கொண்ட விண்கல் ஒன்று கடந்து செல்ல இருப்பதாக நாசா கூறியுள்ளது.
உலகம் முழுவதும் விண்வெளி துறையின் மீதான முதலீடுகள் சமீப காலங்களாக அதிகரித்து வருகிறது. ஆனால் ஏன் நாம் விண்வெளி துறையின் மீது அதிக கவனம் செலுத்துகிறோம்? என்று அடிக்கடி பலரும் கேள்வி எழுப்புகின்றனர். நாட்டில் பஞ்சம், பசி, பட்டினி, வறுமை, வேலையின்மை இதெல்லாம் இருக்கும்போது ஏன் விண்வெளி துறைக்கு கோடி கோடியாக அள்ளி கொடுக்கிறோம் என்று கேள்வி எழுந்தது. அதற்கான பதிலை விஞ்ஞானிகள் இவ்வாறு கூறினர்.

அதாவது, "நாம் இருக்கும் உலகம் ஏராளமான பேரழிவுகளை சந்தித்து வந்திருக்கிறது. இதில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமான உயிர்கள் அழிந்துவிட்டன. மீதம் இருக்கும் உயிரினங்களில் நாமும் ஒன்று. இனியும் ஒரு அழிவு வராது என்று சொல்ல முடியாது. நிச்சயம் ஏதேனும் ஒரு விண்கல் பூமியை தாக்கினால் ஒட்டு மொத்த உலகமும் அழிந்துவிடும். எனவே இதிலிருந்து நாம் தற்காத்துக்கொள்ள புதிய வழிமுறையை கண்டுபிடிக்க வேண்டி இருக்கிறது. அதனால்தான் விண்வெளி துறைக்கு அதிக முதலீடுகள் அவசியமாகிறது" என்று பல்வேறு விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இவர்கள் கூறியதை போல எதிர் காலத்தில் விண்கற்கலால் பூமிக்கு ஆபத்து அதிகம் இருக்கிறது என ஆய்வுகள் தெளிவுப்படுத்தி உறுதி செய்திருக்கின்றன. இந்நிலையில், இன்று பூமிக்கு நெருக்கமாக 720 அடி அளவு கொண்ட 2024 ON எனும் விண்கல் ஒன்று கடந்து செல்ல இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதனை நியூயார்க் போஸ்ட் உறுதி செய்திருக்கிறது.
இந்த விண்கல் சுமார் இரண்டு கால்பந்து மைதானம் சைஸில் இருக்கும் என்றும், இது 10 லட்சம் கி.மீ தொலைவில் பூமியை கடந்து செல்ல இருக்கிறது. இந்த தூரம் அதிகமானதாக தெரியலாம்.. ஆனால், நிலவுக்கும் பூமிக்கும் இடையேயான தூரத்தை விட இது வெறும் 2 மடங்கு தொலைவுதான். இது மிகச்சரியாக செப்.15ம் தேதியன்று பூமியை கடக்கும் என்று நியூயார்க் போஸ்ட் கூறியுள்ளது. ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை இந்த விண்கல் பூமிக்கு நெருக்கமாக செல்லும்.
இது ஏறத்தாழ 38,499 கி.மீ வேகத்தில் பூமியை கடந்து செல்கிறது. இதன் பாதையில் சிறு மாற்றம் ஏற்பட்டால் கூட அது பூமியை தாக்கும் வாய்ப்பு இருக்கிறது. அப்படி பூமியை தாக்கினால்.. 3000 சக்தி வாய்ந்த அணு குண்டுகள் வெடித்தால் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துமோ, அந்த அளவுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும்.
இந்த கல் விழுந்த இடத்தில் சுமார் 8 கி.மீ விட்டத்திற்கும், 3 கி.மீ ஆழத்திற்கும் பெரும் பள்ளம் உருவாகும். இதன் தாக்கத்தால் 10 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உருவாகும். அதேபோல சுனாமியும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications