பூமியை நெருங்கும் விண்கல்.. காத்திருக்கும் பேராபத்து! கடைசி நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்!
நியூயார்க்: பூமியை விண்கல் ஒன்று 2029ம் ஆண்டு மிக நெருக்கத்தில் கடக்க இருப்பதாக விஞ்ஞானிகள் கணித்திருக்கிறார்கள். இப்போது வரை இந்த விண்கல்லால் பாதிப்பு இல்லை என்று கூறியுள்ள விஞ்ஞானிகள், ஒருவேளை பாதிப்பு ஏற்படுவதற்கும் சான்ஸ் இருக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.
இரவு நேரத்தில் கையில் இருக்கும் செல்போனை கொஞ்சம் கீழே வைத்துவிட்டு வானத்தை பார்த்தால் தெரியும், இந்த பிரபஞ்சத்தில் பூமி மட்டுமே கிடையாது என்று. பொதுவாக வானத்தில் பெரிய மாற்றங்கள் ஏதும் நிகழ்வதாக தெரியவில்லை என்றாலும் கூட, நம் கண்ணுக்கே தெரியாமல் இங்கு ஏராளமான மாற்றங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இதில் முக்கியமானது விண்கற்கள் நகர்வு. பூமிக்கு நெருக்கமாக தினந்தோறும் ஏராளமான விண்கற்கள் வந்து செல்கின்றன.

அந்த வகையில் 2029ம் ஆண்டு 1,100 அடி விட்டம் கொண்ட 'Apophis' எனும் விண்கல் ஒன்று பூமிக்கு மிக, மிக நெருக்கமாக வந்து செல்ல இருக்கிறது. வெறும் 32,000 கி.மீ தூரத்தில் இது பூமியை கடக்கிறது. அதுபாட்டுக்கு வந்து.. அப்படியே வந்த வழியை பார்த்துக் கொண்டு போய்விட்டால் ஓகேதான். ஆனால், பூமியின் ஈர்ப்பு விசை சும்மா இருக்காதே! ஒரு கல்லை மேலே தூக்கி போடும் போது திரும்பவும் கீழே வந்து விழுவதுதான் ஈர்ப்புவிசை. இந்த ஈர்ப்பு விசைதான் 35000 கி.மீ உயரத்தில் கடக்கும் கல்லை பிடித்து இழுத்து கொண்டுவந்துவிடுமோ என்கிற அச்சம் எழுந்திருக்கிறது.
வேலியில போகிற ஓணானை மடியில் கட்டிய கதையாக மாறிவிடுமோ என்று விஞ்ஞானிகள் பயந்துக்கொண்டிருக்கிறார்கள். இதற்காக நாசா விஞ்ஞானிகள் செயற்கையாக சில ஆய்வுகளை செய்து பார்த்திருக்கிறார்கள். அதில், விண்கல் பூமியை நோக்கி வரும்போது அதிலிருந்து சில கற்கள் உடைந்து பூமியின் மீது விழுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது என்பது தெரிய வந்திருக்கிறது. ஓரடி, இரண்டடி அளவுள்ள கற்கள் எனில் பிரச்னை இல்லை அதுவே சைஸில் பெரியதாக இருந்தால் பூமிக்கு ஏழரைதான் என்றும் விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
அதாவது பூமியின் சக்திவாய்ந்த ஈர்ப்பு விசை காரணமாக, விண்கல் பூமிக்கு நெருக்கமாக வரும்போது அதில் நிலநடுக்கம் ஏற்படும். இது பாறைகளை உடைத்து சிறு சிறு கற்களாக மாற்றும். இந்த கற்கள்தான் பூமியை தாக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இந்த பாதிப்பிலிருந்து தப்பிக்க முடியாது என்றும், பூமியின் எந்த பகுதியில் இந்த சிறு விண்கற்கள் விழும் என்பது தெரியாது எனவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ஆனால் இது எல்லாமே வெறும் கணக்குதான். உண்மையில் இப்படி நடக்கலாம்.. அல்லது நடக்காமலும் போகலாம்.












Click it and Unblock the Notifications