படு மோசம்.. கொரோனா பார்ட்டி நடத்தும் மாணவர்கள்.. அமெரிக்காவின் விபரீதமான விளையாட்டு.. ஷாக்!
வைரஸ் சம்பந்தமாக பார்ட்டி வைத்து அமெரிக்க மாணவர்கள் விளையாடி உள்ளனர்
நியூயார்க்: வடிவேலு படத்தில் ஒரு டயலாக் வருமே.. "செத்து செத்து விளையாடலாமா" என்று... கிட்டத்தட்ட அப்படிப்பட்ட ஒரு விபரீத விளையாட்டை மாணவர்கள் கையிலெடுத்து உள்ளனர்.. சுருண்டு சுருண்டு செத்து மடிவது ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தால், யாருக்கு முதலில் கொரோனா வரும் என்பதை கண்டுபிடிக்க ஒரு பார்ட்டி நடத்தி, விடிய விடிய கூத்தடித்தும் வருகிறார்கள்.. தொற்றில் உலக நாடுகளிலேயே முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவில்தான் இந்த விளையாட்டும் நடந்துள்ளது.
இப்போதைக்கு அமெரிக்காவில்தான் தொற்று அதிகம்.. பாதிக்கப்பட்டவர்களும், தொற்றால் உயிரிழந்தவர்களும் இங்குதான் அதிகம்.. இருந்தாலும் இப்போது வரை கெத்து குறையாமல் பேசி வருகிறார் அதிபர்... அதனால்தானோ என்னவோ அந்நாட்டு மக்களுக்கு இன்னும் சீரியஸ்தன்மை வரவில்லையோ என்று தோன்றுகிறது. இதை பற்றி தலைமை மருத்துவர் அந்தோணி ஃபாசியும் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இங்கு அலபாமாவில் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் சேர்ந்து ஒரு விளையாட்டு நடத்தி உள்ளனர்.. அதன்படி, கொரோனா பாதிப்பு உறுதி அடைந்த ஒருவரை அழைத்து வந்து அவர்களுடன் சேர்ந்து நெருங்கி பழகுவது, ஒட்டி உரசுவது, அந்நபருடன் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவது.. இதில் யாருக்கு தொற்று முதலில் வரும் என்பதை கண்டுபிடிப்பதுதான் அந்த விளையாட்டு.
இதற்காகவே பார்ட்டியை கல்லூரி மாணவர்கள் நடத்தி உள்ளனர்.. இதற்கு பந்தயம் கட்டியும் விளையாடி உள்ளனர்.. அந்த பார்ட்டியில் ஒரு பாத்திரம் வைத்திருக்கிறார்கள்.. அந்த பாத்திரத்தில் பந்தய தொகயை போட வேண்டும்.. யாருக்கு முதலில் கொரோனா வருகிறதோ, அவருக்கு அந்த பணம் முழுவதும் கொடுக்கப்படும்.
இதை பற்றி அந்நகர நகராட்சி கவுன்சிலர் சோன்யா மெக்கின்ஸ்டிரி என்பவர் சொல்லும்போது,
இந்த பிள்ளைங்களுக்கு கொஞ்சம்கூட புரிதல் இல்லை.. அதனால்தான் இப்படி செய்து வருகிறார்கள்.. இதெல்லாம் வேணும்னே செய்யற காரியம்" என்று கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
அலபாமாவை தவிர, மட்டுமல்லாது வேறு சில முக்கியமான காலேஜ்களிலும் இருந்து மாணவர்கள் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது.. ஆனால், இந்த மாணவர்கள் எந்த கல்லூரி, எந்த பல்கலையை சேர்ந்தவர்கள் என்பதை அதிகாரிகள் சொல்ல மறுத்துவிட்டனர்.
இந்த விளையாட்டு அனைவருக்குமே பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது.. தனிமனித இடைவெளி குறித்து கடந்த 5 மாதமாக உலகமே கதறி வருகிறது.. நோயின் தீவிரம் இனிமேல்தான் தீவிரமாகும் என்றும், அதனை அனைவரும் எதிர்க்க தயாராக வேண்டும் என்றும் சுகாதார நிறுவனம் எச்சரித்து வருகிறது.. அப்படி இருக்கும்போது இந்த மாணவர்கள் கொஞ்சம்கூட பயமில்லாமல், சீரியஸ்தன்மையை உணராமல் இப்படி விளையாடி கொண்டிருப்பதை அந்நாட்டு அதிகாரிகள்தான் தடுத்து நிறுத்தி, விழிப்புணர்வு தர வேண்டும்.
-
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications