சிக்கலில் போயிங்.. சுனிதா வில்லியம்ஸ் விஷயத்தை வைத்து ஸ்பேஸ் வர்த்தகத்தை கைப்பற்றுகிறார் எலான் மஸ்க்
நியூயார்க்: வெறும் 10 நாட்கள் என திட்டமிடப்பட்ட சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம், 60 நாட்களை கடந்து நீடித்து வருகிறது. இம்மாதம் 18க்கு முன்னர் சுனிதா பூமிக்கு திரும்புவார் என்று தகவல்கள் வெளியான நிலையில், அவரை 2025ம் ஆண்டு ஸ்பேஸ் எக்ஸ் பூமிக்கு அழைத்து வரும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்படி நடந்தால் விண்வெளி வணிகத்தை மொத்தமாக ஸ்பேஸ் எக்ஸ் கைப்பற்றும்
பூமியிலிருந்து ஏறத்தாழ 400 கி.மீ உயரத்தில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்திற்கு அடிக்கடி விண்வெளி வீரர்கள் சென்று ஆய்வு செய்வது வழக்கம். அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாதான் இந்த பணிகளை மேற்கொண்டு வந்தது. சமீபத்தில் இந்த பணிகளை தனியார் வசம் ஒப்படைக்க நாசா முடிவெடுத்தது. இதற்காக போயிங் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது.

போயிங் நிறுவனத்திற்கு விமான தயாரிப்பில் முன் அனுபவம் உண்டு, அதன் அடிப்படையில்தான் இந்த நிறுவனத்தை நாசா தேர்ந்தெடுத்தது. போயிங் நிறுவனம் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்காவின் மற்றொரு விண்வெளி வீரரான புட்ச் வில்மோர், என இருவரையும் சர்வதேச விண்வெளி மையத்திற்கு அழைத்து சென்று, மீண்டும் பத்திரமாக பூமிக்கு கொண்டு வரும் பணியை ஏற்றுக்கொண்டது.
இதற்காக 'ஸ்டார் லைனர்' எனும் ஸ்பேஸ் ஷிப்பையும் தயாரித்தது. இந்த ஷிப் மூலம் கடந்த ஜூன் 5ம் தேதி அமெரிக்காவின் கேப் கனாவெரல் ஏவுதளத்திலிருந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சுனிதாவும், வில்மோரும் அனுப்பி வைக்கப்பட்டனர். இரண்டு நாட்கள் கழித்து, அதாவது ஜூன் 7ம் தேதியன்று ஸ்டார் லைனர் சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்தது.
ஆனால் இந்த பயணத்தை தொடங்குவதற்கு முன்னரே பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டிருந்தன. இரண்டு மூன்று முறை 'ஸ்டார் லைனரின்' பயணம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. இப்படி இருக்கையில் தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து சுனிதா வில்லியம்ஸையும், புட்ச் வில்மோரையும் மீண்டும் பூமிக்கு அழைத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
ஜூன் 7ம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்ற சுனிதா மற்றும் வில்மோர் ஜூன் 14ம் தேதி மீண்டும் பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும். ஆனால், ஸ்டார் லைனரில் ஏற்பட்ட ஹீலியம் வாயு கசிவு மற்றும் உந்து விசை கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு ஆகியவை இந்த பயணத்தை மேலும் ஒரு வாரத்திற்கு தள்ளி போட்டது. இதன்படி ஜூன் 26ம் தேதி இவரும் பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும்.
ஆனால், ஸ்டார் லைனரின் தொழில்நுட்ப கோளாறுகள் இன்னும் சரி செய்யப்படாததால், இன்று வரை இருவரும் பூமிக்கு திரும்பாமல் சர்வதேச விண்வெளி மையத்திலேயே சிக்கி தவிக்கின்றனர். இது நாசா விஞ்ஞானிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து பூமிக்கு திரும்ப 6 மணி நேரங்கள் தேவைப்படும். இந்த 6 மணி நேர பயணத்தில் த்ரஸ்டர் ஃபெயிலியர், வால்வு லீக்கேஜ் ஆகியவை இல்லாமல் இருக்க வேண்டும்.
இப்படி இருக்கையில், இம்மாதம் 18ம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் 4 வீரர்களை அனுப்ப இருக்கிறது. ஆனால் அதற்கு முன்னர் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்ப வேண்டும். இதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், விரைவில் சுனிதா வில்லியம்ஸும், புட்ச் வில்மோரும் பூமிக்கு திரும்புவார் என்று சொல்லப்பட்டது.
ஆனால், சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்ப ஒரு வருட காலம் ஆகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் பூமிக்கு வரவேண்டும் எனில் அதற்கு ஸ்பேஸ் ஷிப் தேவை. இவர்கள் சென்ற ஸ்டார் லைனரில் வர முடியாது. எனவே இந்த மாதம் ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் எனும் ஷிப்பை சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்புகிறது. இதில் 4 பேர் வரை பயணம் செய்ய முடியும். அனால், 2 பேரை மட்டும் அனுப்ப திட்டமிடப்பட்டிருக்கிறது.
இதில் செல்லும் 2 வீரர்கள் 2025ம் ஆண்டு பிப்ரவரி வரை விண்வெளி மையத்தில் தங்கி பணியாற்றுவார்கள். பின்னர் டிராகன் ஷிப் பூமிக்கு திரும்பும் போது காலியாக உள்ள இருக்கைகள் வில்மோர் மற்றும் வில்லியம்ஸுக்கு ஒதுக்கப்படும். இப்படியாக இருவரும் அடுத்த ஆண்டு பூமிக்கு வருவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பயணம் உறுதி செய்யப்பட்டால், போயிங்கின் ஸ்டார் லைனர் ஆளில்லாமல் பூமிக்கு திரும்பிவிடும். அப்படி செய்தால் போயிங் நிறுவனத்தின் ஸ்பேஸ் வர்த்தகத்தை எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் கைப்பற்றிவிடும். ஏற்கெனவே இந்த திட்டத்திற்காக போயிங், $1.6 பில்லியன் தொகையை முதலீடு செய்திருக்கிறது. இவையெல்லாமும் வேஸ்ட் ஆகிவிடுவதோடு, அமெரிக்க விண்வெளித் திட்டத்தின் இன்றியமையாத பங்காளியாக ஸ்பேஸ் எக்ஸ் வளர்ந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications