ஆப்கான் பெண் சுதந்திரத்திற்கும், பாதுகாப்பிற்கும் தாலிபானே பொறுப்பு: ஜி7 மாநாட்டில் கூட்டு அறிக்கை
நியூயார்க்: ஆப்கானிஸ்தான்னில் பெண் சுதந்திரத்திற்கும், பாதுகாப்பிற்கும் தாலிபானே பொறுப்பு என்று ஜி7 மாநாட்டின் முடிவில் கூட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபான் வெற்றி குறித்தும், அங்கிருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறுவது குறித்தும் ஜி7 நாடுகள் நேற்று ஆலோசனை மேற்கொண்டன. ஜி7 என்பது கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பு ஆகும்.
சர்வதேச அளவில் நடக்கும் பிரச்சனைகள் குறித்து இந்த வலுவான கூட்டமைப்பு விவாதிப்பது வழக்கம். இந்த நிலையில் தாலிபான் வெற்றி குறித்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அழைப்பின் பெயரில் அவசர ஜி7 ஆன்லைன் கூட்டம் நேற்று நடைபெற்றது.

அறிக்கை
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் 7 நாடுகளும் ஒன்றாக கூட்டு அறிக்கை வெளியிட்டது. அதில், ஆப்கானிஸ்தானின் சுதந்திரத்திற்கும், அங்கு மக்களின் உரிமைக்கும், தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கும் தாலிபான்கள் முழு பொறுப்பு ஏற்க வேண்டும். ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற விரும்பும் மக்களுக்கு தாலிபான்கள் பாதுகாப்பான வழி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

மக்கள்
சிறுபான்மையினர், பெண்களின் பாதுகாப்பிற்கும் இவர்களே பொறுப்பேற்க வேண்டும். இப்போது ஜி7 நாடுகளின் முக்கிய குறிக்கோள் மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதே. இந்த பணிகளை நாங்கள் தொடர்ந்து
மேற்கொள்வோம். மருத்துவ உதவிகள், பாதுகாப்பு உதவிகளை ஜி 7 நாடுகள் தொடர்ந்து வழங்கிடும். அகதிகளின் மீள் குடியேற்றம்தான் இப்போது எங்களின் குறிக்கோள்.

குறிக்கோள்
ஆப்கான் மக்கள் நிம்மதியாக, பாதுகாப்பாக வாழ வேண்டும். அவர்களுக்கான மருத்துவ, பொருளாதார உதவிகள் வழங்கப்பட வேண்டும். ஆப்கானிஸ்தான் மீண்டும் தீவிரவாதிகளின் சொர்க்கமாக மாறிவிட கூடாது. ஆப்கானை மையமாக வைத்து தீவிரவாத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட கூடாது. ஜி7 நாடுகளும், எங்களின் நட்பு நாடுகளும், ஜி 20 நாடுகளும், ஜநாவும் இதற்காக ஒன்றாக இணைந்து பணியாற்றும்.

தீவிரவாதம்
ஜி7 என்பது உலகின் மிகப்பெரிய வலுவான கூட்டமைப்பு. பொருளாதார ரீதியாக ஜி7 நாடுகள் வலிமை வாய்ந்தது. இதனால் நாங்கள் கொடுக்கும் அழுத்தம் அரசியல் ரீதியாக, பூகோள ரீதியாக ஆப்கானிஸ்தானில் எதிரொலிக்கும் என்று நம்புகிறோம். அங்கு இருந்து வெளியேற விரும்பும் மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதே எங்களின் இப்போதைய குறிக்கோள் என்று ஜி7 கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications