800 கோடியை கடந்த உலக மக்கள் தொகை! ஆனாலும் எச்சரிக்கும் விஞ்ஞானிகள்.. பின்னால் இருக்கும் ஷாக் காரணம்
நியூயார்க்: உலகின் ஒட்டுமொத்த மக்கள் தொகை 800 கோடியை கடந்திருப்பதாக அமெரிக்காவின் மக்கள் தொகை கணக்கெடுப்பு மையம் தெரிவித்திருக்கிறது. ஆனால் சமீப காலமாக பெண்களின் கருவுறுதல் விகிதம் குறைந்திருப்பதையும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
உலகம் தோன்றியது முதல் ஏற்பட்ட பேரழிவுகளில் கிட்டதட்ட 90 சதவிகிதத்திற்கும் அதிகமான உயிர்கள் அழிந்துவிட்டதாகவும், மீதம் உள்ள 10 சதவிகித உயிர்களைதான் நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த 10 சதவிகித உயிர்களில் ஒன்றாக இருக்கும் மனிதர்கள் தோன்றி சுமார் 10 லட்சம் வருடங்கள்தான் ஆகியுள்ளன. அதிலும் நாம் குரங்கிருந்து பரிணமித்து வெறும் 3 லட்சம் வருடங்கள்தான் ஆகியுள்ளன.

ஆனால் இந்த குறைந்த காலத்தில் நாம் ஒட்டுமொத்த உலகையே ஆட்டிப்படைக்க தொடங்கிவிட்டோம். மட்டுமல்லாது சமீப காலமாக நம்முடைய எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. இப்படி இருக்கையில், தற்போது உலகில் உள்ள ஒட்டுமொத்த மனிதர்களின் எண்ணிக்கையும் 800 கோடியை கடந்திருப்பதாக அமெரிக்காவின் மக்கள் தொகை கணக்கெடுப்பு மையம் கூறியுள்ளது. கடந்த 2000ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த 23 ஆண்டுகளில் மக்கள் தொகை 200 கோடி உயர்ந்திருக்கிறது.
மிகச்சரியாக சொல்வதெனில் கடந்த செப்டம்பர் மாதமே 800 கோடியை நாம் நெருங்கி விட்டோம் என்றும், ஆனால் பல்வேறு நாடுகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து பின்பற்றப்பட்டு வரும் வேறுபட்ட முறைகள் காரணமாக இது தாமதமாக உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதேபோல மனிதர்கள் வாழும் சராசரி வருடங்களும் 32ஆக உயர்ந்திருக்கிறது. இது 2060ம் ஆண்டில் 39ஆக அதிகரிக்கும்.
ஆனால் கடந்த 23 ஆண்டுகளுடன் தற்போதைய சூழலை ஒப்பிட்டு பார்த்தால் மக்கள் தொகை அவ்வளவு வேகமாக ஒன்றும் வளரவில்லை என்பது தெரிய வருகிறது. அதாவது 1960களில் தொடங்கி 2000ம் ஆண்டு வரை 2 மடங்கு வேகமாக மக்கள் தொகை அதிகரித்தது. ஆனால் தற்போது இந்த வேகம் குறைந்திருக்கிறது. இதற்கு பெண்களின் கருவுறுதலில் இருக்கும் பிரச்னைகள்தான் காரணம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
நகரங்களின் வளர்ச்சி, மாறிவரும் வாழ்க்கை சூழல், நிரந்தரமில்லாத வருமானம், மருத்துவ வசதிகள் தனியார் வசம் சென்றது போன்ற காரணங்களால் பெண்களின் கருவுறுதல் குறைந்திருக்கிறது. கடந்த காலங்களை விட தற்போது ஆண்களின் விந்தணுக்களில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இவை எல்லாம் சேர்த்து உலக மக்கள் தொகையை பாதித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications