நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

10 வருட பழைய ட்விட்.. இஸ்லாமியர்கள் பற்றி புது ட்விட்டர் சிஇஓ சொன்ன கருத்து.. கொதிக்கும் வலதுசாரிகள்

Google Oneindia Tamil News

நியூயார்க்: ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓவாக பராக் அக்ரவால் 10 வருடங்களுக்கு முன் இஸ்லாமியர்கள் பற்றி செய்த ட்விட் ஒன்று வைரலாகி வருகிறது.

Recommended Video

    Who Is Parag Agrawal? | Twitter New CEO | Oneindia Tamil

    ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓவாக பராக் அக்ரவால் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அதன் சிஇஓ மற்றும் நிறுவனர் ஜாக் பணியில் இருந்து விலகியதால் தற்போது சிடிஓவாக இருந்த பராக் அக்ரவால் சிஇஓ ஆகி உள்ளார்.

    இந்த நிறுவனம் தனியாக செயல்பட வேண்டிய நேரம் இது. அதன் நிறுவனர்கள் இதை கண்காணிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதனால் நான் பதவி விலகுகிறேன், என்று ஜாக் அறிவித்துள்ளார்.

     மும்பை ஐஐடி டூ ட்விட்டர் சிஇஓ.. ட்விட்டரின் புதிய சி.இ.ஓ ஆகும் இந்தியரான பராக் அகர்வால்.. யார் இவர் மும்பை ஐஐடி டூ ட்விட்டர் சிஇஓ.. ட்விட்டரின் புதிய சி.இ.ஓ ஆகும் இந்தியரான பராக் அகர்வால்.. யார் இவர்

    சிஇஓ

    சிஇஓ

    இந்த நிலையில் சிஇஓவாக அறிவிக்கப்பட்ட முதல் நாளே நேற்று பராக்கின் பழைய ட்விட்களை நெட்டிசன்கள் வெளியே தோண்டி எடுத்து டிரெண்ட் செய்து கொண்டு இருந்தனர். சச்சின் டெண்டுல்கரின் மும்பை இந்தியன்ஸ் கேப்டன்சியை பராக் விமர்சனம் செய்தது, ஷ்ரேயா கோஷலிடம் பராக் கடலை போட்டது என்று பல விஷயங்களை தோண்டி எடுத்து நெட்டிசன்கள் டிரெண்ட் செய்து வருகிறார்கள்.

    சர்ச்சை

    சர்ச்சை

    இந்த நிலையில்தான் அவர் செய்த ட்விட் ஒன்று பெரிய அளவில் சர்ச்சையானது. 2010 அக்டோபரில் பராக் செய்திருந்த ட்விட் ஒன்றில், உங்களால் இஸ்லாமியர்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் வேறுபாட்டை காண முடியவில்லை என்றால் நாங்கள் வெள்ளையர்களுக்கும் நிற வெறியர்களுக்கும் இடையில் வேறுபாட்டை காண மாட்டோம் என்று குறிப்பிட்டு இருந்தார்.

    நிற வெறி

    நிற வெறி

    அதாவது இஸ்லாமியர்கள் எல்லோரும் தீவிரவாதிகள் என்று சொல்வீர்கள் என்றால், வெள்ளையர்கள் எல்லோருமே நிறவெறியர்கள்தான் என்று நாங்களும் கூற நேரிடும் என்று அர்த்தத்தில் அந்த ட்விட் செய்யப்பட்டு இருந்தது. ஆனால் இது இவரின் சொந்த கருத்து கிடையாது. ஆசிப் மண்டாவி என்று காமெடியன் Daily Show என்ற நிகழ்ச்சியில் சொன்ன காமெடியான கருத்து ஆகும் இது.

    இஸ்லாமியர்கள்

    இஸ்லாமியர்கள்

    எங்களை தீவிரவாதி என்று சொன்னால் உங்களை நிறவெறியர் என்று சொல்வோம் என்று இஸ்லாமியர் குற்றஞ்சாட்டுவது போல இந்த காமெடியை 2010ல் அவர் செய்து இருந்தார். இதைத்தான் பராக் ட்விட் செய்து இருந்தார். அதோடு இதை பற்றி பராக் தனது ரிப்ளேயில் விளக்கம் கொடுத்து இருந்தார். ஆனால் இப்போது இது சர்ச்சையாகி உள்ளது.

    வலதுசாரி

    வலதுசாரி

    அதன்படி இவர் வலதுசாரிகளுக்கு எதிரானவர். பராக் இஸ்லாமியர்களுக்கு ஆதரவானவர். முக்கியமாக வெள்ளையின மக்களுக்கு எதிரானவர். ஜாக் இப்படிதான் வலதுசாரியான டிரம்பிற்கு எதிராக இருந்தார். அவரின் கணக்கை நீக்கினார்.

    பராக்

    பராக்

    இப்போது பராக் அதேபோல் வலதுசாரிகளுக்கு எதிராக இருக்கிறார். இஸ்லாமியர்களுக்கு ஆதரவான அந்த கருத்து அவரின் சொந்த கருத்து இல்லை என்றாலும் ஏன் அதை ட்விட் செய்ய வேண்டும் என்று வலதுசாரி கொள்கை கொண்ட நெட்டிசன்கள் பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

    English summary
    Twitter CEO Parag Agrawal's old tweet on Islam goes viral after 10 years.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X