Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டிரம்புக்கு ஒரு நோபல் பரிசு பார்சல்.. அமெரிக்கா எதிர்பார்த்த நல்ல செய்தி வந்தது.. ஏற்றுக்கொண்ட உக்ரைன்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: ரஷ்யா உக்ரைன் போரை நிறுத்த அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தார். இதன்படி அமெரிக்கா 20 அம்ச திட்டம் கொண்ட அமைதி ஒப்பந்தத்தை உக்ரைன் தயாரித்தது. அதனை முதலில் உக்ரைன் ஏற்க மறுத்தது. இதனால் போர் முடிவுக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டது. டிரம்ப் கூட இது தொடர்பாக ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இந்நிலையில் பெரும்பாலானவற்றை உக்ரைன் ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளது. உக்ரைனின் இறையாண்மை உறுதி செய்யப்படும் என்று நம்பும் அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி 20 அம்ச திட்டம் கொண்ட அமைதி ஒப்பந்தத்தில் பெரும்பாலானவற்றை ஏற்றுக் கொண்டுள்ளார்.

Ukraine us Russia

நேட்டோ படையில் இணைய முயன்ற உக்ரைன் மீது கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி முதல் ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனை நிறுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் எல்லாமே இதுவரையில் தோல்வியில் முடிந்தன. இது ரஷ்யா உக்ரைனை மட்டுமல்ல, ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா உள்ளிட்ட உக்ரைனுக்காக மறைமுகமாக போரில் களம் இறங்கிய நாடுகளுக்கும் சிக்கலாகவே இருந்து வந்தது. இதையடுத்து அமெரிக்காவில் அதிபராக டிரம்ப் தொடர்ந்து தீவிர பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார். எப்படியாவது போரை முடிவுக்கு கொண்டு வர விரும்பினார். அனைத்து ராஜதந்திரங்களையும் அதற்காக டிரம்ப் பயன்படுத்தினார். அதன்படி உருவாக்கப்பட்ட அமைதி ஒப்பந்தத்தை ஏற்பதில் உக்ரைன் தயக்கம் காட்டியது. இதனால் அமைதி ஏற்படவில்லை. இதனால் டிரம்ப் ஒரு கட்டத்தில் புலம்பினார். போரை முடிவுக்கு கொண்டுவர முடியவில்லையே என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தி வந்தார். எனினும் தொடர்ந்து டிரம்ப்பேசிவந்தார்.

அதேபோல் போரை நிறுத்துவதற்கு அமெரிக்க அதிகாரிகள் தொடர்ந்து முயற்சி செய்து வந்தார்கள். இதனடிப்படையில் போர் நிறுத்தம் தொடர்பான 20 அம்சத்திட்டம் தயாரிக்கப்பட்டது. இதில் பெரும்பாலான திட்டங்களுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஒப்புதல் அளித்திருக்கிறார் சில பிராந்திய பிரச்னைகள் மட்டுமே நிலுவையில் உள்ளன. அமெரிக்கா மற்றும் உக்ரைன் ஏற்றுக் கொண்ட நிலையில், அந்த ஒப்பந்தம் ரஷ்யாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த ஒப்பந்தத்தில் என்ன உள்ளது என்பது குறித்த தகவல்கள் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெளியிடவில்லை.

எனினும் போருக்கு பிந்தைய உள்நாட்டு கட்டுமானப்பணிகள் பாதுகாப்பு உறுதிமொழிகள் குறித்து உக்ரைன் மற்றும் அமெரிக்கா இடையே தனியாக இருதரப்பு ஒப்பந்தம் போடவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க தயாரித்துள்ள 20 அம்ச திட்டங்கள் என்னென்ன என்பது பற்றி பார்ப்போம்.

இறையாண்மை உறுதி: உக்ரைனின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்தை அனைத்து நாடுகளும் அங்கீகரிக்க வேண்டும்.

ஆக்கிரமிப்பு தவிர்ப்பு: ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நிபந்தனையற்ற பரஸ்பர ஆக்கிரமிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகும்.

பாதுகாப்பு உத்தரவாதம்: உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் "நேட்டோவின் 5-வது சட்டப்பிரிவுக்கு" இணையான பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்கும்.

ராணுவ பலம்: அமைதிக்காலத்திலும் உக்ரைன் 8,00,000 வீரர்கள் கொண்ட வலுவான ராணுவத்தை வைத்திருக்க அனுமதிக்கப்படும்.

கண்காணிப்பு அமைப்பு: விண்வெளி மற்றும் ஆளில்லா கருவிகள் மூலம் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியை கண்காணிக்க ஒரு சர்வதேச அமைப்பு உருவாக்கப்படும்.

ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்: உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்படும்.

மறுசீரமைப்பு நிதி: போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனை மீண்டும் கட்டியெழுப்ப சுமார் $800 பில்லியன் இலக்காகக் கொண்டு பல்வேறு நிதியங்கள் உருவாக்கப்படும்.

எரிசக்தி முதலீடு: உக்ரைனின் எரிவாயு கட்டமைப்பு மற்றும் இயற்கை வளங்களை மேம்படுத்த அமெரிக்க நிறுவனங்கள் முதலீடு செய்யும்.

தனிப் பொருளாதார மண்டலங்கள்: மோதல் நிலவும் பகுதிகளில் (உதாரணமாக எனெர்ஹோடார்) சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அல்லது ராணுவமற்ற மண்டலங்கள் உருவாக்கப்படும்.

கைதிகள் பரிமாற்றம்: "அனைவருக்கும் அனைவரும்" என்ற அடிப்படையில் அனைத்துப் போர்க்கைதிகளும், கடத்தப்பட்ட குழந்தைகளும் விடுவிக்கப்பட வேண்டும்.

அணுமின் நிலையம்: சர்ச்சைக்குரிய ஜாபோரிஜியா அணுமின் நிலையத்தை உக்ரைன், ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து நிர்வகிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

கடல்வழிப் போக்குவரத்து: கருங்கடல் மற்றும் டினீப்பர் ஆற்றில் உக்ரைனின் வணிகப் போக்குவரத்திற்கு ரஷ்யா தடையாக இருக்கக்கூடாது.

தேர்தல்: அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, பாதுகாப்பான சூழலில் உக்ரைனில் விரைவில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்.

கலாச்சார நல்லிணக்கம்: இரு நாடுகளும் பள்ளி பாடத்திட்டங்கள் மூலம் பரஸ்பர சகிப்புத்தன்மை மற்றும் கலாச்சாரப் புரிதலை ஊக்குவிக்க வேண்டும். போன்ற அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இதில் இன்னும் சில பிராந்திய பிரச்சினைகள் மட்டுமே விவாதிக்கப்படாமல் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே இதை ஜெலன்ஸ்கி ஏற்றுக்கொண்டு உள்ளார். இதையடுத்து அமெரிக்கா மற்றும் உக்ரைன் ஏற்றுக் கொண்ட நிலையில், அந்த ஒப்பந்தம் ரஷ்யாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் போர் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+