காசாவில் நடப்பது இன அழிப்புதான்.. ஐநா நிபுணர்கள் குழு அறிக்கை!
நியூயார்க்: பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 45,000ஐ தொட்டிருக்கிறது. இஸ்ரேலின் தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஐநா நிபுணர்களின் சிறப்பு குழு போர் குறித்து ஆய்வு செய்தது. ஆய்வில், இஸ்ரேல் பட்டினியை காசா மக்களுக்கு எதிரான போர் முறையாக பயன்படுத்தியதாகவும், இது இனி அழிப்பு முறையை ஒத்திருக்கிறது எனவும் தெரிவித்திருக்கிறது.
பாலஸ்தீனத்தில் ஒரு பகுதியாக இஸ்ரேல் உருவானதிலிருந்து, தனது எல்லையை இஸ்ரேல் தொடர்ந்து விரிவுப்படுத்தி வருகிறது. இதற்கு எதிராக போராடும் பாலஸ்தீன மக்கள், இஸ்ரேல் ராணுவத்தால் குறி வைக்கப்பட்டிருந்தனர். எனவே பாலஸ்தீனத்தில் விடுதலை இயக்கங்கள் உருவாகின. இதில் ஒன்றுதான் ஹமாஸ். ஆயுதம் ஏந்தி போராடும் இந்த அமைப்பு, அரசியல் தளத்திலும் செறிவுடன் இயங்கி வருகிறது. ஆனால், ஆயுதம் ஏந்தி இருப்பதால், இது தீவிரவாத அமைப்பாக அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளால் முத்திரை குத்தப்பட்டிருக்கிறது.

இந்த அமைப்பை சேர்ந்தவர்கள்தான் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் மீது திடீர் தாக்குதலை நடத்தினர். இதில் பெரிய பாதிப்பு ஏதும் இல்லை என்றாலும் கூட, இஸ்ரேலுக்கு இந்த தாக்குதல் பெரும் கவுரவ குறைவாக பார்க்கப்பட்டது. எனவே ஹமாஸை ஒழிப்பதே நோக்கம் என்று இஸ்ரேல் போரை அறிவித்தது. போர் ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், இதில் சுமார் 45,000 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்த எண்ணிக்கையில் சரிபாதி குழந்தைகள் மற்றும் பெண்கள் அடங்குவர்.
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலை நிறுத்த சொல்லி ஐநா மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இஸ்ரேல் இந்த தீர்மானத்தை ஏற்கவில்லை. இன்று வரை போர் நீடித்து வருகிறது. இப்படி இருக்கையில் இஸ்ரேல் சர்வதேச போர் விதிகளை மீறியிருப்பதாகவும், காசாவில் இன அழிப்பு நடப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தன. இது குறித்து விசாரிக்க ஐநா சிறப்பு நிபுணர்கள் குழு ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வின் முடிவுகள் தற்போது அறிக்கையாக வெளியாகியுள்ளன.
அதில், இஸ்ரேல் பட்டினியை காசா மக்களுக்கு எதிரான போர் முறையாக பயன்படுத்தியுள்ளதாகவும், இது போன்ற நடைமுறைகள் இன அழிப்பு முறையை ஒத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications