Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

20 வருட போர்.. 2996 பேரின் கொடூர மரணத்திற்கு.. காரணமாக அமைத்த சின்ன "பாக்கெட் கத்தி".. 9/11 பின்னணி

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: 20 வருடமாக அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் நடத்திய மிக நீண்ட போருக்கும், அமெரிக்காவில் 9/11 தாக்குதலில் 2996 பேர் கொல்லப்பட்டதற்கும் பின்னணியில் சின்ன சின்ன பாக்கெட் கத்திகள்தான் காரணமாக இருந்தது என்று சொன்னால் நம்புவீர்களாக.. ஆம் அமெரிக்கா என்ற வல்லரசு தேசத்தை உலுக்கிய 9/11 தாக்குதலுக்கு பின்பாக இருந்தது துப்பாக்கிகளோ, அதி நவீன ஆயுதங்களோ கிடையாது.. சின்ன பாக்கெட் கத்திகள்தான்!

Recommended Video

    America-வின் கருப்பு பக்கத்தை எழுத காரணமாக அமைந்த சின்ன கத்தி.. எப்படி நடந்தது?

    2001 செப்டம்பர் 11ம் தேதி.. சரியாக 20 வருடம் முன் அமெரிக்காவில் அடுத்தடுத்து தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டு 2996 பேர் கொல்லப்பட்டனர். விமானங்களை கடத்தி அல்கொய்தாவின் தீவிரவாதிகள் அமெரிக்காவின் ட்வின் டவர் மற்றும் பென்டகன் ஆகியற்றை குறி வைத்து தாக்கினார்கள். பின் லேடன் நடத்திய இந்த தாக்குதல்தான் அமெரிக்காவை ஆப்கானிஸ்தானுக்கு எதிராக போர் தொடுக்க செய்தது. பின் லேடனுக்கு அடைக்கலம் கொடுத்த தாலிபானுக்கு எதிராக அமெரிக்கா போருக்கு சென்றது.

    20 வருடங்கள் ஆப்கானிஸ்தானில் நடந்த மிக நீண்ட போரில் தாலிபான் ஆட்சி அகற்றப்பட்டு, 20 வருட மோதலுக்கு பின் மீண்டும் தற்போது தாலிபான்கள் ஆட்சி ஆப்கானிஸ்தானில் மலர்ந்துள்ளது. அமெரிக்க படைகள் 2011லேயே பாகிஸ்தானில் ஒசாமாவை கொன்றுவிட்டு நிலையில், தற்போது ஆப்கானிஸ்தானிலும் போரை முடித்துக்கொண்டு அமெரிக்கா நாடு திரும்பி உள்ளது. அமெரிக்காவை உலுக்கிய இந்த தீவிரவாத தாக்குதல் குறித்தும்.. ஒரு கத்தி எப்படி பெரிய பயணிகள் விமானத்தை கடத்த உதவியது என்றும் பார்க்கலாம்!

    என்னென்ன விமானங்கள்

    என்னென்ன விமானங்கள்

    2001 செப்டம்பர் 11ம் தேதி இந்த தாக்குதல் நடந்தது. அல் கொய்தாவின் 19 தீவிரவாதிகள் அமெரிக்காவின் நான்கு வெவ்வேறு விமானங்களை கடத்தி சென்று வெவ்வேறு இடங்களில் மோதி வெடிக்க வைத்து தாக்குதல் நடத்தினார்கள்.

    அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் 11: இது போயிங் 767 விமானம். லாஸ் ஏஞ்சலஸ் நோக்கி 87 பயணிகளோடு சென்ற விமானம் ஆகும். இதில் பயணிகள் போக 5 தீவிரவாதிகள் இருந்தனர். இதுதான் இரட்டை கோபுரத்தில் முதலில் இடது கோபுரத்தில் மோதியது.

    யுனைட்டட் ஏர்லைன்ஸ் விமானம் 175: இதுவும் போயிங் 767 விமானம் ஆகும். லோகன் விமான நிலையத்தில் இருந்து லாஸ் ஏஞ்சலஸ் நோக்கி சென்றது. இதில் 60 பயணிகள் இருந்தனர். இதிலும் 5 தீவிரவாதிகள் இருந்தனர். இதுதான் இரட்டை கோபுரத்தில் இரண்டாவதாக வலது கோபுரத்தை தாக்கியது.

    அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் 77: இது போயிங் 757 விமானம். வாஷிங்டனில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நோக்கி சென்ற விமானம். இதில் 59 பயணிக்கள் இருந்தனர். இதிலும் 5 தீவிரவாதிகள் இருந்தனர். பென்டகன் மீது இந்த விமானம் தாக்கியது.

    யுனைட்டட் ஏர்லைன்ஸ் விமானம் 93: இது போயிங் 757 விமானம். நியூ ஜெர்சியில் உள்ள நியூ - ஆர்க் விமான நிலையத்தில் இருந்து சான் பிரான்சிஸ்கோ சென்ற விமானம். இதில் 40 பேர் இருந்தனர். 4 தீவிரவாதிகள் இந்த விமானத்தை கடத்தினார்கள்.

    டார்கெட் மிஸ்

    டார்கெட் மிஸ்

    இதில் முதல் இரண்டு விமானங்கள் அடுத்தடுத்து இரட்டை கோபுரங்களை தாக்கியது. இந்த தாக்குதலில் உட்புறம் வெடித்து, தீ பிடித்து மொத்தமாக இரண்டு கோபுரங்களும் தரைமட்டமாகி விழுந்தது. மூன்றாவது விமானம் அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையமான பென்டகன் மீது மோதியது. நான்காவது விமானமான யுனைட்டட் ஏர்லைன்ஸ் விமானம் 93 வெள்ளை மாளிகை அல்லது கேப்பிட்டல் கட்டிடம் அல்லது கேம்ப் டேவிட் நோக்கி வந்தது. ஆனால் உள்ளே இருந்த பயணிகள் தீரமாக மோதி தீவிரவாதிகளிடம் சண்டை போட்டதில் இந்த விமானம் இலக்கை தாக்காமல் பென்சில்வேனியாவில் விழுந்து நொறுங்கியது. நான்காவது மிகப்பெரிய தாக்குதல் விமானத்தில் இருந்த 40 பயணிகளின் தீரத்தால் தடுக்கப்பட்டது.

     யார் எல்லாம்?

    யார் எல்லாம்?

    இந்த தாக்குதலை நடத்த காலித் ஷேக் முகமது என்ற தீவிரவாதிதான் ஒசாமா பின்லேடனுக்கு திட்டம் போட்டு கொடுத்தது. இதன் பொருட்டு 2000ம் ஆண்டு ஜனவரியில் இருந்தே நவாப் அல் ஹாஸ்மி, காலித் அல் மிஹ்தார் உள்ளிட்ட அல் கொய்தா தீவிரவாதிகள் கொஞ்சம் கொஞ்சமாக அமெரிக்கா வந்து குடியேறினர். தங்கள் கடத்த போகும் விமானம் உள்ள விமான நிலையங்களுக்கு அருகிலேயே குடியேறி மாத கணக்கில் அங்கு தனியார் மையங்களில் விமான பயிற்சி, ஆங்கில பயிற்சிகளை மேற்கொண்டனர். சிலர் ஏற்கனவே விமானம் கற்றுக்கொண்டு அமெரிக்காவிற்கு கடைசி நொடியில் வந்தனர். விமானம் ஓட்ட தெரியாதவர்கள் muscle hijackers என்று அழைக்கப்பட்டனர். அதாவது இவர்கள் விமானத்திற்கு உள்ளே மக்களை கட்டிப்போடுவது, அடிப்பது, மக்களை கட்டுப்படுத்துவது போன்ற சண்டை வேலைகளுக்காக தயார் செய்யப்பட்டனர்.

    மரணம்

    மரணம்

    இந்த தாக்குதலில் மொத்தம் 2996 பேர் பலியானார்கள். 6000க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். 4 விமானங்களில் இருந்து மட்டும் 265 பேர் பலியானார்கள். இதில் யாரும் உயிர் பிழைக்கவில்லை. இரட்டை கோபுரத்தில் இருந்த 2606 பேர் பலியானார்கள். பென்டகனில் இருந்த 125 பேர் பலியானார்கள். 340 தீயணைப்பு வீரர்கள் பலியானார்கள். 72 காவல் அதிகாரிகள் பலியாகினர். 55 ராணுவ வீரர்கள் பலியானார்கள். இந்த திட்டத்தை அரங்கேற்றிய 19 தீவிரவாதிகளும் இதில் பலியானார்கள்.

    தேதிக்கான சுவாரசியம்

    தேதிக்கான சுவாரசியம்

    9/11 என்ற இந்த தேதியை பின்லேடன் தாக்குதலுக்கு தேர்வு செய்ய நிறைய காரணங்கள் தொடக்கத்தில் கூறப்பட்டாலும் பின்தான் இதன் உண்மையான காரணம் வெளியானது. 1683 செப்டம்பர் 11ல்தான் இஸ்லாமியர்களின் அரபு பேரரசான ஓட்டமன் ஆட்சி வீழ்ச்சியை நோக்கி சென்றது. போலந்தின் போர் தொடுப்பில் ஓட்டமன் படைகள் அன்றுதான் பின்வாங்க தொடங்கியது. இஸ்லாமியர்களின் ஓட்டமன் ஆட்சி வீழ்ந்ததை மையமாக வைத்து இந்த தேதி ஒசாமாவால் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா இஸ்லாமிய நாடுகள் பலவற்றில் மேற்கொண்ட அத்துமீறல்களுக்கும், இஸ்ரேல் உடன் சேர்ந்து பாலத்தீனம் உள்ளிட்ட நாடுகளில் மேற்கொண்ட அத்துமீறல்களுக்கும் பதிலடியாக ஒசாமா இந்த தாக்குதலை மேற்கொண்டார்.

    சரி எப்படி நடந்தது?

    சரி எப்படி நடந்தது?

    அதெல்லாம் சரி இந்த தாக்குதல் எப்படி நடந்தது? எப்படி 4 விமானங்களை ஒரே நாளில் சிறிய பாக்கெட் கத்திகளின் உதவியோடு கடத்தினார்கள் என்று கேள்வி உங்களுக்கு எழலாம். இப்போது இருப்பது போல அப்போது விமான நிலையங்களில் கடும் சோதனைகள் எல்லாம் கிடையாது. இப்போது செக் இன் செய்ய பல மணி நேரம் எடுப்பது போல அப்போது கிடையாது. விமானம் கிளம்பும் ஐந்து நிமிடத்திற்கு முன் கூட வந்து பெரிய சோதனைகள் இன்றி விமானத்தில் ஏற முடியும். அப்போது போர்டிங் பாஸ், ஐடி சோதனைகள் இல்லை. டிக்கெட் இருந்தாலே போதும். அதோடு பல இடங்களில் மெட்டல் சோதனைகளை பெரிதாக கண்டுகொள்ள மாட்டார்கள்.

    கத்தி

    கத்தி

    அதோடு சிறிய அளவிலான கத்திகளை பாக்கெட்டுகளில் வைத்துக்கொள்ள அனுமதியும் இருந்தது. இப்பொதெல்லாம் விமான நிலைய பரிசோதனையில் பெல்ட் தொடங்கி பர்ஸ் வரை தனியாக எடுத்துவிட்டு சோதனை செய்கிறார்கள். இதெல்லாம் 9/11க்கு பின் வந்த விதிமுறைகள். அதற்கு முன் இருந்த இந்த சோதனை குறைபாடுகளை பயன்படுத்திதான் 19 தீவிரவாதிகளும் சிறிய அளவிலான கத்திகளை விமானம் உள்ளே கொண்டு வந்துள்ளனர்.

    சோதனை

    சோதனை

    இதில் சில தீவிரவாதிகள் சோதனையில் சிக்கி உள்ளனர். சிலரின் பேக்குகள் இரண்டு முறை சோதனை செய்யப்பட்டுள்ளது. சிலர் மெட்டல் சோதனையில் சிக்கி உள்ளனர்.ஆனால் இந்த சோதனைக்கு பின்பும் சிலர் வெறும் கத்தி வைத்திருந்த காரணத்தால் எஸ்கேப் ஆகியுள்ளனர். சிலர் மெட்டல் சோதனையில் சிக்கிய பின்பும் பெரிய சிக்கல் எதுவும் இன்றி தொடர்ந்து பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர். உடலில் துப்பாக்கி, குண்டு இல்லாத காரணத்தால் இவர்கள் எல்லோருமே பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    தப்பித்தனர்

    தப்பித்தனர்

    அப்போது விமான நிலையத்தில் 4 இன்ச் கத்திகள் பயணத்தின் போது அனுமதிக்கப்பட்டது. இந்த 4 இன்ச் கத்திகளை வைத்துதான் தீவிரவாதிகள் 19 பேர் சேர்ந்து 4 விமானங்களை கடத்தினார்கள். அந்த கத்திகள்தான் 2996 பேரின் உயிரை வாங்கியதோடு.. மொத்தமாக விமான பயண போக்குவரத்தையே மாற்றியது.. 20 வருட போருக்கு காரணமாக அமைந்தது.. அமெரிக்காவின் மொத்த பாதுகாப்பு திட்டங்களையும் அடியோடு புரட்டி போட்டு.. சர்வதேச அரசியலையே மாற்றியது!

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+