ஆட்டத்தை ஆரம்பித்த அமெரிக்கா.. ஈரானால் சிக்கலில் இந்திய நிறுவனங்கள்! லிஸ்ட் பெருசா போகுதே.. ஷாக்!
நியூயார்க்: ஈரானுடன் எண்ணெய் விற்பனை மற்றும் இறக்குமதி வாணிபம் செய்ததாகக் கூறப்படும் இந்திய தொழிலதிபர்கள் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது கடுமையான பொருளாதாரத் தடையை அமெரிக்கா விதித்துள்ளது.
அமெரிக்க உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், "ஈரான் தனது அணுசக்தி திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்தி வருவது, இஸ்ரேல் மீது தாக்குதல்களை ஆதரிப்பது ஆகியவை உலக அமைதிக்கு ஆபத்தானவை" எனக் கூறி, அதனை ஆதரிக்கும் அல்லது அதனுடன் வாணிபம் செய்யும் நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடையின் காரணமாக, சம்பந்தப்பட்ட நபர்கள் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள முடியாது. மேலும், அவர்களின் நிறுவனங்கள் அமெரிக்க நிறுவனங்களுடன் எந்த வகையான வணிக உறவுகளும் வைத்திருக்க முடியாது.

அமெரிக்கா தடைகள்
இந்த நடவடிக்கையின் தாக்கம் இந்தியாவிலும் உணரப்படும் வகையில் உள்ளது. ஏனெனில், அமெரிக்காவின் இந்தப் புதிய தடையிலில் 8 இந்திய தொழிலதிபர்கள் மற்றும் பல நிறுவனங்கள் பெயர் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, Indisol Marketing Pvt Ltd மற்றும் அதன் உரிமையாளர் நிதி உன்மேஷ் பட், Chemovic Pvt Ltd நிறுவன உரிமையாளர் பியூஷ் மகன்லால் ஜாவியா, Haresh Petrochemical Pvt Ltd நிறுவன நிர்வாகிகள் கம்லா கனயாலால் கசட், குணால் கனயாலால் கசட் மற்றும் பூனம் கசட், Vega Star Ship Management Pvt Ltd உரிமையாளர் சோனியா ஸ்ரேஷ்டா ஆகியோர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
ஈரான் வர்த்தகம்
அதோடு, Marshall Islands நாட்டைச் சேர்ந்த Porta Shipping மற்றும் AV Lines கப்பல் நிறுவனங்களும் தடைப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் வருண் புலா மற்றும் ஐயப்பன் ராஜா என அமெரிக்கா வெளியிட்ட பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவைச் சேர்ந்த PK Sales Corporation, CJ Shah & Co, Modi Chem, Parichem Resource, Shiv Texchem போன்ற நிறுவனங்களும் ஈரானுடன் திரவ பெட்ரோலியம் எரிவாயு (LPG) மற்றும் பெட்ரோலியம் பொருட்கள் விற்பனை தொடர்பில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
பொருளாதார தாக்கம்
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை உலக சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. ஏற்கனவே ஈரானுக்கு எதிராக அமெரிக்கா பல பொருளாதாரத் தடைகள் விதித்து வருகிறது. இப்போது இந்திய நிறுவனங்களும் அந்தப் பட்டியலில் இணைக்கப்பட்டிருப்பது இந்தியா-அமெரிக்க உறவுகளில் சற்று பதற்றத்தை ஏற்படுத்தும் என சர்வதேச வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன.
ரஷ்யா எண்ணெய்
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்திய பின்னரும், இந்தியா ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கி வந்தது. இதனால், இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதற்காக ட்ரம்ப் நிர்வாகம், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் துணிகள், எஃகு மற்றும் உணவுப் பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்தது. ஆனால், அதே சமயம் இந்தியாவின் அண்டை நாடான சீனாவும் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கி கொண்டிருந்தது. சீனாவை எதிர்த்து எந்த கடுமையான நடவடிக்கையும் எடுக்காத அமெரிக்கா, இந்தியாவை மட்டும் குறிவைத்தது பாகுபாடான அணுகுமுறை என விமர்சிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது சீனாவுக்கு எதிராக 100% வரியை விரித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தற்போது ஈரானுடன் வர்த்தகம் செய்ததாக இந்திய தொழில் நிறுவனங்களுக்கு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது












Click it and Unblock the Notifications