ஈரானுக்கு அமெரிக்கா இறுதி வார்னிங்.. 1973, 1979, 2022-ஐ விட உலகில் மோசமான நிலை வரலாம்
நியூயார்க்: ஈரான் உடனான அமெரிக்காவின் போர் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ள கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டது கடந்த 1973, 1979 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட அனைத்து நெருக்கடிகளையும் விட மிக மோசமானது என்று சர்வதேச எரிசக்தி முகமை எச்சரித்துள்ளது. இன்று இறுதி எச்சரிக்கையை டிரம்ப் விடுத்த நிலையில் இந்த தகவலை சர்வதேச எரிசக்தி முகமை தலைவர் கூறியுள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து மோதல் புதிய சிக்கலை உலகத்திற்கு ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் தாக்குதலுக்கு பதிலடியாக, உலக எரிசக்தி விநியோகத்தின் முக்கியப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் தற்காலிகமாக மூடியது. உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் மற்றும் எரிவாயு இந்தப் பாதை வழியாகவே செல்வதால், உலகப் பொருளாதாரமே ஸ்தம்பித்துள்ளது.

கச்சா எண்ணெய் விலை உயர்வு
இந்தப் போர் சூழலால் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 110 டாலர் ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் லைட் குரூட் விலை 115 டாலர் வரை எகிறியிருக்கிறது.இதனால் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் பெட்ரோல், டீசல் மற்றும் உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து பணவீக்கம் ஏற்படும் என்று சர்வதேச நாணய நிதியம் கவலை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் நிலைமை மோசம்
இந்தியாவில் வீட்டு சிலிண்டர் முன்பதிவுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. வணிக சிலிண்டர் கடைகளுக்கு சப்ளை சுத்தமாக இல்லை.. பல்வேறு ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளன. கேஸ் சார்ந்து இயங்கும் பல தொழில்கள் முடங்கி உள்ளன. இந்தியா மட்டுமல்ல மொத்த உலகமும் ஹார்முஸ் பாதை துண்டிப்பால் பெரிய சிக்கலில் சிக்கி உள்ளன. பாகிஸ்தானில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை, வங்கதேசம் என பல ஆசிய நாடுகள் எரிபொருள் தட்டுப்பாட்டால் முடங்கி வருகின்றன.
அமெரிக்காவின் நோக்கம்
இதனால் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரானை கடுமையாக எச்சரித்து வந்தார். ஏனெனில் ஹார்முஸ் ஜலசந்தியைத் திறந்து உலகளாவிய எரிசக்தி விநியோகத்தைச் சீர்செய்ய வேண்டும் என்பதே அமெரிக்க அதிபரின் தற்போதைய பிரதான நோக்கமாக உள்ளது. ஈரானின் பிடிவாதத்தால் உலகப் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதைத் தடுக்க, அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளிட்ட அடிப்படை உள் கட்டமைப்பை ஒரே இரவில் தகர்க்கப் போவதாக டிரம்ப் எச்சரித்துள்ளார்.
டிரம்பின் இறுதி எச்சரிக்கை
அதிபர் டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கையில், "ஒரு முழு நாகரீகமே இன்று இரவு மடியப் போகிறது, அது மீண்டும் ஒருபோதும் திரும்பாது. அது நடப்பதை நான் விரும்பவில்லை, ஆனால் பெரும்பாலும் அது நடக்கும். ஒரே இரவில் ஒட்டுமொத்த நாடும் நிர்மூலமாக்கப்படலாம், அந்த இரவு ஒருவேளை நாளை இரவாக இருக்கலாம்." செவ்வாய் இரவு 8 மணிக்குள் (அமெரிக்க நேரம்) ஈரான் ஒரு உடன்பாட்டிற்கு வராவிட்டால், மிகக் கடுமையான தாக்குதல்களைச் சந்திக்க நேரிடும் என்று டிரம்ப் இறுதி கெடு விதித்துள்ளார். இன்னும் அரை மணி நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது.
1970களை விட மோசமாகும்
இதனிடையே ஹார்முஸ் நீரிணை அடைக்கப்பட்டதால் ஏற்பட்ட எண்ணெய் மற்றும் எரிவாயு நெருக்கடியானது, "1973, 1979 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட நெருக்கடிகள் அனைத்தையும் சேர்த்தால் வருவதை விடவும் மிகவும் தீவிரமானது" என்று சர்வதேச எரிசக்தி முகமையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
போங்க தம்பி.. டிரம்ப்-க்கு மீண்டும் பல்பு கொடுத்த ஈரான்.. அடுத்தது என்ன நடக்கும்? -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
அமெரிக்காவில் ஹைதராபாத் இளைஞர் ஜாலி சுற்றுலா.. 3 பேரை காப்பாற்றியவருக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications