ஈரானை தாக்கியது அமெரிக்கா.. 3 அணு மையங்கள் மீது குண்டு போட்ட அதிபர் டிரம்ப்.. தொடங்கியது போர்!
டெஹ்ரான்: ஈரான் மீது அமெரிக்கா வான்வெளி தாக்குதல் நடத்தி உள்ளது . போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தி உள்ளது. ஈரான் நாட்டில் உள்ள 3 அணு மையங்கள் மீது தாக்குதல் நடத்தியதை அதிபர் டிரம்ப் உறுதி செய்தார். இதனால் உலகப்போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய மூன்று அணு அமைப்புகள் மீது வெற்றிகரமாக தாக்குதல் நடத்தி முடிக்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.
டிரம்ப் வெளியிட்ட அறிக்கை
டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில், "ஈரானில் உள்ள மூன்று அணு sites மீது நாங்கள் வெற்றிகரமாக தாக்குதல் நடத்தி முடித்துவிட்டோம். ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய இடங்களிலும் தாக்குதல் நடத்தப்பட்டது. அனைத்து விமானங்களும் தற்போது ஈரான் வான்வெளியை விட்டு வெளியேறிவிட்டன.

ஃபோர்டோவில் உள்ள முக்கியமான தளத்தில் முழு அளவிலான வெடிகுண்டுகள் வீசப்பட்டன. அனைத்து விமானங்களும் பத்திரமாக திரும்புகின்றன. இந்த சாதனையை நிகழ்த்திய அமெரிக்க வீரர்களுக்கு எனது வாழ்த்துகள். உலகில் இதை செய்யக்கூடிய ராணுவம் வேறு எந்த நாட்டிலும் இல்லை. அமைதிக்கு இதுவே சரியான நேரம்! இந்த விஷயத்தில் நீங்கள் காட்டிய கவனத்திற்கு நன்றி" என்று கூறியுள்ளார். டொனால்ட் டிரம்ப் அவர்களின் இந்த அறிக்கை சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
தாக்குதல் நடத்தப்பட்டது எப்படி?
அமெரிக்கா ஈரான் அணு உலை மற்றும் ஆராய்ச்சி அமைப்புகள் மீது வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியது. ஈரானின் அணுசக்தியை முடக்கும் நோக்கில் இந்தத் தாக்குதல்கள், ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ஏவுகணை உள்கட்டமைப்பைக் குறிவைத்து நடத்தப்பட்டு உள்ளது. ஃபோர்டோ போன்ற ஆழமாகப் சுரங்க பகுதிகளில் அமைக்கப்பட்டு உள்ளன அணுசக்தி வசதிகளை அமெரிக்காவால் அழிக்கப்பட்டு உள்ளது.
ஸ்டெல்த் வகை விமானங்களான B-2 stealth bombers பயன்படுத்தி.. 30,000-lb எடை கொண்ட குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. "பங்கர் பஸ்டர்" எனப்படும் குண்டுகள் ஆகும் இவை. இதன் மூலம் ஈரானின் சுரங்க அணு ஆயுத அமைப்புகள் அழிக்கப்பட்டு உள்ளன.
ஈரானின் அணு அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் பதிலடி கொடுக்கும் என்று ஈரான் மீண்டும் ஏற்கனவே எச்சரித்துள்ளது. ஈரான் மீதான தாக்குதல்களில் அமெரிக்காவின் ஈடுபாடு "மிகவும் ஆபத்தானது" என்று வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி முன்பு கூறியிருந்தார். இஸ்தான்புல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரான் மக்கள் குண்டுவீச்சை எதிர்கொண்டு இருக்கும்போது அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட முடியாது என்றார்.
நேற்று மாலையே அமெரிக்கா 3-4 B-2 stealth bombers விமானங்களை ஈரான் நோக்கி அனுப்பியது. குண்டுகளுடன் சென்ற இந்த விமானம் நடுவழியில் எரிபொருள் நிரப்பியது. அப்போதே இரவு தாக்குதல் நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஈரானின் ஃபோர்டோ மீது பங்கர் பாஸ்டர் எனப்படும் பதுங்கு குழி வெடிகுண்டுகளை வீசி அதை முற்றிலுமாக அழித்தது உறுதி செய்யப்பட்டு உள்ளது பி 2 ஸ்டெல்த் வெடிகுண்டு விமானங்கள் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. மற்ற இரண்டு முக்கிய அணுசக்தி தளங்களான நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் ஆகியவை அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து ஏவப்பட்ட 30 டோமாஹாக் ஏவுகணைகளால் அழிக்கப்பட்டன.
இரண்டு வாரங்கள் டைம்
முன்னதாக இஸ்ரேல்-ஈரான் மோதல் அதிகரித்து வரும் நிலையில், ஈரான் மீது ராணுவத் தாக்குதல் நடத்துவதா இல்லையா என்பது குறித்து அதிபர் டொனால்ட் டிரம்ப் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் முடிவெடுப்பார் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. டிரம்பின் செய்தியை மேற்கோள் காட்டி வெள்ளை மாளிகை செய்திச் செயலாளர் கரோலின் லெவிட் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஈரானுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்புள்ளது. எனவே அடுத்த இரண்டு வாரங்களில் டிரம்ப் ஒரு முடிவை எடுப்பார்" என்றார். ஆனால் அவர் அப்படி குறிப்பிட்ட 2 நாட்களில் இந்த தாக்குதல் அவசர அவசரமாக நடத்தப்பட்டு உள்ளது.
இந்த போரில் அமெரிக்க நேரடியாக களமிறங்கியதன் மூலம் இந்த போர் ஈரான் இஸ்ரேல் போர் என்பதை தாண்டி சர்வதேச போராக வெடிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
-
ஈரான் மீது முழு வீச்சில் தாக்குதலை ஆரம்பித்த அமெரிக்கா.. ஹார்முஸ் ஜலசந்தியும் க்ளோஸ்.. ஒரே பதற்றம் -
"ஹார்முஸை நெருங்கினாலே சரமாரி தாக்குதல் நடத்துவோம்.." அச்சுறுத்தும் ஈரான்.. அமைதி ஒப்பந்தம் காலி -
ஈரானுக்கு இனி கெட்ட காலம்.. பீட் ஹெக்செத் பேச்சால் பரபரப்பு..! Hormuz இனி எங்க கண்ட்ரோல்! -
மீண்டும் டிரம்ப் அடித்த பல்டி! "எல்லாம் நல்லா போகுது.. தாக்குதல் கேன்சல்!" உற்று பார்க்கும் ஈரான் -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
திடீரென மனசு மாறிய டிரம்ப்.. ஈரான் மீதான தாக்குதலை நிறுத்தி உத்தரவு! காரணம் இதுதான் -
நாட்டில் 21 இடங்களுக்கு குறி.. பதம் பார்த்த ஈரான் IRGC ராணுவ படை.. அலறிய அமெரிக்கா! -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
பேரழிவு வர போகுது.. ஈரானுக்கு நேரடியாக டிரம்ப் தந்த மரண வார்னிங்.. மீண்டும் வெடிக்கும் போர் -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
கடலோர மக்களுக்கு குடிநீர் இல்லை.. ஏரிகளை தகர்த்தது அமெரிக்கா.. ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டு -
"பதிலடி கொடுப்போம்.." நள்ளிரவில் ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த எச்சரிக்கை.. மீண்டும் வெடிக்க போகுது போர்












Click it and Unblock the Notifications