அதிபரானதும் இதுதான் முதல் வேலை.. கொரோனா தடுப்பை கையில் எடுத்த பிடன்.. ஆரம்பமே அதிரடி வாக்குறுதி
நியூயார்க்: அமெரிக்க அதிபராக தேர்வானதும் முதல் வேலையாக கொரோனாவிற்கு எதிரான தடுப்பு பணிகளை மேற்கொள்வேன் என்று ஜனநாயக கட்சி வேட்பாளர் பிடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் பிடன் தற்போது பென்சில்வேனியா, ஜார்ஜியா உள்ளிட்ட மாகாணங்களில் முன்னிலை வகித்து வருகிறார். வெற்றிபெறுவதற்கு இன்னும் 6 எலக்ட்ரல் வாக்குகளே தேவை என்ற நிலையில்.. ஜனநாயக கட்சி வேட்பாளர் பிடனின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
இதுவரை வெளியாகி உள்ள முடிவுகளின்படி 264 வாக்குகளுடன் பிடன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். குடியரசு கட்சி வேட்பாளர் அதிபர் டிரம்ப் 214 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.

அறிக்கை
அதிபர் தேர்தலில் வெற்றிக்கு அருகில் இருக்கும் ஜோ பிடன் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், நாம் வெற்றிக்கு மிக அருகில் இருக்கிறோம். ஆனால் அதற்குள் நாம் கொண்டாட்டங்களை தொடங்க கூடாது. ஆனால் தற்போது இருக்கும் நிலவரத்தின்படி நம்முடைய வெற்றி உறுதியாகிவிட்டது.

முன்னிலை
நாம் இந்த தேர்தலில் வெற்றிபெற போகிறோம். நேற்று காலையில் இருந்து என்ன நடந்தது என்று பாருங்கள், 24 மணி நேரத்தில் எல்லாம் மாறிவிட்டது. ஜார்ஜியா, பென்சில்வேனியாவில் இப்போது நாம்தான் முன்னிலையில் இருக்கிறோம். நாம் இங்கே வெற்றிபெற போகிறோம்.

அரிசோனா
அரிசோனா, நெவாடாவிலும் நாம் வெற்றிபெற போகிறோம். 300 எலக்ட்ரல் வாக்குகளை நோக்கி நாம் சென்று கொண்டு இருக்கிறோம். கிளியர் மெஜாரிட்டி உடன் நாம் இதை வெற்றிபெற போகிறோம். அதிபர் பதவி ஏற்றதும் கொரோனாவை கட்டுப்படுத்துவதே முதல் வேலை. முதல் நாளில் இருந்து கொரோனாவை தடுப்பதற்காக திட்டங்களை வகுப்பேன்.

கேஸ்கள்
அமெரிக்காவில் கொரோனா கேஸ்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிபராக பதவி ஏற்றதும் அதை கட்டுப்படுத்தும் நோக்கில் முதல் நாளில் இருந்து திட்டங்களை வகுப்பேன். மக்களை இந்த கொடிய கொள்ளை நோயில் இருந்து மீட்டு எடுப்பதே அரசின் முதல் கடமையாக இருக்கும், என்று பிடன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் எப்படி
அமெரிக்காவில் தேர்தல் நடந்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு கொரோனா கேஸ்களும் அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் மொத்தமாக இதுவரை 10,058,586 பேருக்கு கொரோனா வந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1.4 லட்சம் பேருக்கு கொரோனா வந்துள்ளது.

பலி எண்ணிக்கை
242,230 பேர் அமெரிக்காவில் கொரோனாவிற்கு பலியாகி உள்ள நிலையில் டிரம்ப் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டது.. இந்த நிலையில் கொரோனா பரவலை தடுப்பேன் என்று பிடன் உறுதி அளித்துள்ளார். அமெரிக்காவில் கொரோனா பரவலை தடுக்க இவர் என்ன மாதிரியான யுக்திகளை மேற்கொள்வார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications