Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரியல் யுத்தம் தொடங்குது! ஈரானை நோக்கி புறப்பட்ட 'ஆர்மடா'.. மொத்த மத்திய கிழக்கும் அதிர்ந்து நிற்குதே

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: ஈரான் மீதான ராணுவ அழுத்தத்தை அதிகரிக்கும் வகையில், அமெரிக்காவின் பிரம்மாண்டமான போர்க்கப்பல் படையான 'ஆர்மடா' (Armada) பாரசீக வளைகுடாவை நோக்கி விரைவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடந்த உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தை முடித்துவிட்டுத் திரும்பும்போது இந்த அதிரடித் தகவலை அவர் வெளியிட்டார்.

Israel Iran

ஈரானில் சமீபத்தில் நடந்த அரசு எதிர்ப்புப் போராட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

"ஆர்மடா" - ஈரானை நிலைகுலையச் செய்யும் படை

அமெரிக்க ஊடகங்களின் தகவல்படி, தென் சீனக் கடலில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த யு.எஸ்.எஸ் ஆபிரகாம் லிங்கன் (USS Abraham Lincoln) விமானம் தாங்கிக் கப்பல் மற்றும் அதன் போர்க்கப்பல் குழுக்கள் உடனடியாக மத்திய கிழக்கு நோக்கித் திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளன.

இது குறித்து ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப்:

"நாங்கள் ஈரானைக் கூர்ந்து கவனித்து வருகிறோம். எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்பதற்காகவே ஒரு பெரிய போர்க்கப்பல் படை (Armada) அந்தத் திசையில் சென்று கொண்டிருக்கிறது. எதையும் செய்யக்கூடாது என்பதுதான் எனது விருப்பம், ஆனால் ஈரானின் நடவடிக்கைகளை நாங்கள் மிக நெருக்கமாகக் கண்காணிப்போம்," என்று எச்சரித்தார்.

837 தூக்கு தண்டனைகள் நிறுத்தம்?

ஈரானில் போராட்டம் நடத்தியவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனைகளை ஈரான் அரசு நிறுத்தி வைத்துள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. தனது ராணுவ மிரட்டல் காரணமாகவே, ஈரானில் வழங்கப்பட்டிருந்த 837 தூக்கு தண்டனைகளை அந்த நாடு நிறுத்தி வைத்துள்ளதாக டிரம்ப் மீண்டும் உறுதிப்படுத்தினார். இருப்பினும், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவும் தான் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

ஈரான் போராட்டங்கள்: 3,117 பேர் உயிரிழப்பு?

ஈரான் அரசு கடந்த புதன்கிழமை வெளியிட்ட அதிகாரப்பூர்வத் தகவலின்படி, டிசம்பர் இறுதியில் தொடங்கிய போராட்டங்களில் இதுவரை 3,117 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால், மனித உரிமை அமைப்புகள் இந்த எண்ணிக்கை 4,000 முதல் 15,000 வரை இருக்கலாம் என்று அஞ்சுகின்றன.

கடந்த ஜூன் மாதம் இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது நடத்திய 12 நாள் தாக்குதலுக்குப் பிறகு, தற்போது மீண்டும் ஒரு நேரடி ராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்கா தயாராகி வருவது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது

ஏற்கனவே புறப்பட்ட போர்க்கப்பல்

அமெரிக்கா - ஈரான் பதற்றம் தீவிரமடைந்த சூழலில், அமெரிக்காவின் USS ஆபிரகாம் லிங்கன் (CVN-72) குழு மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்பப்பட்டது. தற்போது ஈரானை இந்த கப்பல் படை குழு நெருங்கி வருகிறது.

மலாக்கா நீர்சந்தி வழியாக அரேபிய கடலை நோக்கிச் சென்ற இந்த போர்க்கப்பலின் அருகே, ஈரானிய சரக்கு கப்பல் அர்வின் பயணித்ததாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில்தான் USS ஆபிரகாம் லிங்கன் படைக்குழு கடலில் கண்ணாமூச்சி ஆடி வருவதாக கூறப்படுகிறது.

அதன்படி அந்த அமெரிக்கக் கப்பல் தனது தானியங்கி அடையாள அமைப்பான (AIS) சிக்னலை நிறுத்தி உள்ளது. இது விவாதங்களுக்கு வழிவகுத்தது. கண்காணிப்பைத் தவிர்க்கவும், தயார்நிலையை உணர்த்தவும், ஆபத்தான பகுதிகளில் இது ஒரு பொதுவான ராணுவ நடைமுறையே என்றாலும் ஈரானை நெருங்கியதும் இந்த கப்பல் டிராக்கிங் சிஸ்டத்தை நிறுத்தி இருப்பது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. ஈரான் மீது அமெரிக்கா எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்று கூறப்படும் நிலையில் அமெரிக்காவின் இந்த முடிவு கவனம் பெற்றுள்ளது.

அமெரிக்கா - ஈரான் இடையே நிலையில் கடும் பதட்டங்களுக்கு பதிலளிக்கும் விதமாக எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை, மத்திய கிழக்கில் புதிய கவலைகளை எழுப்பியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+