Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேதி குறிச்சிட்டாங்க! இஸ்ரேலின் பயங்கர திட்டம்! அமெரிக்காவிற்கு போன உளவாளிகள் எச்சரிக்கை! என்ன ஆகும்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: ஈரான் மீது பதிலடி தாக்குதல் நடத்துவதற்கான நாளை இஸ்ரேல் குறித்துவிட்டதாக அமெரிக்கா கூறி வருகிறது. நவம்பர் 5 ஆம் தேதி நடக்க உள்ள அதிபர் தேர்தலுக்கு முன்னதாக இஸ்ரேல் ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் என்று அமெரிக்க உளவு அதிகாரிகள் அந்நாட்டு அரசிடம் தெரிவித்து உள்ளார்களாம்.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னதாக இந்த தாக்குதல் நடக்கும். இஸ்ரேல் கண்டிப்பாக பதிலடி கொடுக்கும். ஈரானில் எண்ணெய் அல்லது அணுசக்தி நிலையங்களை தாக்குவதை விட ராணுவ தளவாடங்களை தாக்குவதற்கு தயாராக இருப்பதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க அதிபர் பிடனிடம் தெரிவித்து உள்ளார். முழு அளவிலான போரைத் தடுக்கும் நோக்கில் மிகப்பெரிய பதிலடியை கொடுக்காமல்.. மிதமான பதிலடியை கொடுக்க வேண்டும் என்று பிடன் நெதன்யாகுவிடம் தெரிவித்து இருந்தார்.

israel palestine israel palestine war international

ஆனால் பிடனின் இந்த கோரிக்கையை நெதன்யாகு ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக ராணுவ தளவாடங்களை தாக்குவதற்கு தயாராக இருப்பதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க அதிபர் பிடனிடம் தெரிவித்து உள்ளார்.

பல ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையே நீடிக்கும் இந்த நிழல் யுத்தம் ஒரு நேருக்கு நேர் இராணுவ மோதலாக வெடிக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது. அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கும் குறைவான நேரம் உள்ள நிலையில்.. இஸ்ரேல் - ஈரான் இடையே போர் வெடிக்க போவதாக வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இஸ்ரேல் தாக்குதலுக்கு ஆதரவு தருவோம்.. ஆனால் அணுசக்தி தளங்கள் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை ஆதரிக்கப் போவதில்லை என்று அதிபர் ஜோ பிடன் பிரதமர் நெதன்யாகுவிடம் பகிரங்கமாக தெரிவித்துள்ளாராம். பிடன் மற்றும் நெதன்யாகு சமீபத்தில் போனில் பேசியபோது, இதை பற்றி ஆலோசனை செய்துள்ளனர்.

ஈரான்; ஈரானுடன் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் அமெரிக்க சார்பாக இஸ்ரேலுக்கு ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு வழங்கப்பட்டு உள்ளது. அமெரிக்கா இஸ்ரேலுக்கு மேம்பட்ட ஏவுகணை எதிர்ப்பு அமைப்பான THAAD அமைப்பை வழங்கி உள்ளது. இது தொடர்பான அறிவிப்பை பென்டகன் வெளியிட்டு உள்ளது.

பென்டகன் தலைவர் லாயிட் ஆஸ்டின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இஸ்ரேல் நாட்டின் வான் பாதுகாப்பை அதிகரிக்க உதவும் டெர்மினல் ஹை ஆல்டிடியூட் ஏரியா டிஃபென்ஸ் (THAAD) அந்த நாட்டிற்கு அனுப்பிட்டு உள்ளது. THAADயை இயக்கம் பேட்டரி உள்ளிட்ட உபகரணங்கள் அதனுடன் தொடர்புடைய அமெரிக்க ராணுவ வீரர்களை இஸ்ரேலுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது. இதற்கான அங்கீகாரத்தை அமெரிக்க பாதுகாப்புத் துறை அளித்துள்ளது.

THAAD ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு இஸ்ரேலின் ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு அமைப்பை அதிகரிக்கும். இந்த நடவடிக்கை, இஸ்ரேலை பாதுகாப்பதற்கும், இஸ்ரேலில் உள்ள அமெரிக்கர்களை ஈரானின் எதிர்கால பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதற்கும் THAAD உதவும் என்று பென்டகன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் THAAD அமைப்பு இஸ்ரேலுக்கு எப்போது செல்லும்.. எப்போது களத்தில் பயன்படுத்தப்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. THAAD அமைப்புடன் சுமார் 100 படை வீரர்கள் அதை இயக்குவதற்காக அமெரிக்காவில் இருந்து இஸ்ரேல் நாட்டிற்கு செல்வார்கள் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக ஈரானிய வெளியுறவு மந்திரி அப்பாஸ் அராக்சி அமெரிக்காவின் இந்த முடிவை கடுமையாக விமர்சனம் செய்தார். அமெரிக்க ஏவுகணை அமைப்புகளை இஸ்ரேலில் இயக்குவதால் மூலம் ஈரானுக்கும், இந்த பிராந்தியத்திற்கும் பாதுகாப்பு ரீதியான குறைபாடுகள், சிக்கல்கள் ஏற்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+