‛கிரெடிட்' திருட பார்த்த டிரம்ப்.. விடாத மோடி.. இந்தியாவை அமெரிக்கா குறிவைத்தது ஏன்? பகீர் அறிக்கை
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரியை விதித்துள்ளார். இதனால் இருநாடுகளுக்கு இடையேயான உறவில் முறிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் டிரம்ப் இந்தியாவை குறிவைத்து வரி போட்டதன் பின்னணி குறித்து அமெரிக்காவின் மல்டிநேஷனல் முதலீட்டு வங்கி மற்றும் பைனான்சியல் சார்ந்த சேவைகளை வழங்கும் நிறுவனமான ஜெஃப்பெரிஸ் பரபரப்பான அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் உள்ள விவரங்களை விரிவாக பார்க்கலாம்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உலகில் உள்ள பெரும்பாலான நாடுகளுக்கு வரிகளை போட்டுள்ளார். இதில் நம் நாடும் தப்பவில்லை. நம் நாட்டுக்கு டிரம்ப் 50 சதவீத வரியை விதித்துள்ளார். அமெரிக்கா உடனான வர்த்தக பற்றாக்குறை மற்றும் அமெரிக்கா பொருட்களுக்கான நம் நாட்டின் வரி, ரஷ்யாவுடன் கச்சா எண்ணெய் வாங்குவதை சுட்டிக்காட்டி டிரம்ப் இந்த வரியை விதித்துள்ளார்.

இதனால் அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதியை கடுமையாக பாதித்துள்ளது. இதனால் இருநாடுகள் இடையேயான உறவில் விரிசல் தொடங்கி உள்ளது. அமெரிக்காவை நம்பியது போதும் என்று நம் நாடு சீனாவுடன் கைகோர்த்துள்ளது. அதுமட்டுமின்றி அமெரிக்கா என்ன செய்தாலும், இந்தியாவின் நலன் மற்றும் இந்திய மக்களின் நலனை கருத்தில் கொண்டு தான் செயல்படுவோம் என்று மத்திய அரசு தெரிவித்து விட்டது.
அமெரிக்காவில் கிளம்பிய எதிர்ப்பு
அதுமட்டுமின்றி ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தப்போவது இல்லை என்று நம் நாடு அறிவித்துள்ளது. இது டிரம்புக்கு கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கிடையே தான் இந்தியா மீதான வரி விதிப்புக்கு அமெரிக்காவிலேயே கடும் கண்டனம் எழுந்துள்ளது.
டொனால்ட் டிரம்பின் கட்சியை சேர்ந்த பிரபலங்கள், ஜோ பைடன் கட்சியை சேர்ந்தவர்கள், பொருளாதார நிபுணர்கள், அமெரிக்காவின் அரசில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் என பலரும் டிரம்பை விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனால் டிரம்ப் அதனை காதில் போட்டு கொள்ளாமல் அடாவடியாக செயல்பட்டு வருகிறார்.
அமெரிக்க நிறுவனம் அறிக்கை
இதற்கிடையே தான் அமெரிக்காவை சேர்ந்த ஜெஃப்பெரிஸ் (Jefferies) என்ற நிறுவனம் பரபரப்பான தகவலை தெரிவித்துள்ளது. இது அமெரிக்காவின் மல்டி நேஷனல் மற்றும் நிதி சார்ந்த சேவைகளை வழங்கும் நிறுவனமாகும்.
இந்த நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்தியா மீதான வரி விதிப்புக்கு டிரம்பின் ஈகோ தான் காரணம் என்று தெரிவித்துள்ளது. அதாவது, இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக டிரம்ப் கூறி வருவதை இந்தியா ஏற்கவில்லை. இதனால் டென்ஷனான டிரம்ப் இந்தியாவுக்கு 50 சதவீத வரியை போட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையில் இருப்பது என்ன?
இதுதொடர்பாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியா - பாகிஸ்தான் இடையே பல ஆண்டுகளாக பிரச்சனை உள்ளது. சமீபத்தில் இருநாடுகள் இடையே கடும் மோதல் நடந்தது. இதனை முடிவுக்கு கொண்டு வருவதில் முக்கிய பங்காற்ற நினைத்தார். ஆனால் இந்தியா அதற்கு இடம் அளிக்கவில்லை.
டிரம்பின் தலையீட்டை இந்தியா ஏற்கவில்லை. டிரம்புக்கு இது கோபத்தை ஏற்படுத்தியது. இந்த தனிப்பட்ட கோபத்தின் காரணமாக தான் இந்தியாவுக்கு 50 சதவீத வரி போட்டு உள்ளார். அதேபோல், இந்தியாவின் வேளாண் சந்தையை அமெரிக்கா பெரிய அளவில் குறி வைத்தது. தனது வேளாண் பொருட்கள், பால் பொருட்களை மிகப்பெரிய அளவில் இந்தியாவில் சந்தைப்படுத்த நினைத்தது.
ஆனால் இது இந்தியாவின் 25 கோடி விவசாயிகளை நேரடியாக பாதிக்கும். இதனால் இந்தியா அனுமதி வழங்கவில்லை. இது டிரம்பை கோபப்படுத்தியது. இந்தியாவுக்கு 50 சதவீத வரி போட இதுவும் ஒரு காரணம்'' என தெரிவிக்கப்பட்டுள்ளார்.
நம் நாட்டின் நிலைப்பாடு இதுதான்
நம் நாட்டை எடுத்து கொண்டால் ஒரு நிலைப்பாட்டில் மிகவும் தெளிவாக உள்ளது. அண்டை நாடுகள் உடனான பிரச்சனையில் 3வது நாடு தலையீடு கூடாது என்பதில் உறுதியாக உள்ளது. பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளுக்கும், நம் நாட்டுக்கும் பல்வேறு சமயங்களில் ஏற்பட்ட மோதல்களின்போது நம் நாடு எந்த வெளிநாட்டு சக்திகளையும் தலையீடு செய்ய விடவில்லை. சமீபத்தில் பாகிஸ்தான் உடனான போரிலும் இந்தியா அந்த நிலைப்பாட்டை பின்பற்றியது.
ஆனால் டொனால்ட் டிரம்போ இந்தியா - பாகிஸ்தான் மோதலில் தலையீட விரும்பினார். போரை நிறுத்தி அமைதிக்கான நோபல் பரிசை பெற நினைத்தார். ஆனால் இந்தியா அனுமதிக்காத நிலையில் போர் நிறுத்தம் குறித்து பாகிஸ்தான் நம்மிடம் கெஞ்சியபோதே போரை நிறுத்தியதாக சமூக வலைதளத்தில் அறிவித்து கொண்டார்.
அதன்பிறகும் இந்தியா - பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன் என்று தம்பட்டம் அடித்து வருகிறார். வர்த்தக ஒப்பந்தத்தை வைத்து மிரட்டி இரு நாடுகளையும் போரை நிறுத்த வைத்தேன் என்று மேடை தோறும் டிரம்ப் தற்பெருமை பேசி வருகிறரார். இந்தியா - பாகிஸ்தான் போரை டிரம்ப் நிறுத்தவில்லை. பாகிஸ்தான் கெஞ்சியதால் போரை நிறுத்தியதாக நம் நாடு கூறி வருகிறது. இதற்கிடையே தான் அமெரிக்காவின் ஜெஃப்பெரிஸ் நிறுவனம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications