நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"நாங்க இருக்கோம் தைவானுக்கு.. நிச்சயம் பாதுகாப்போம்".. சீனாவுக்கு ஜோ பிடன் வார்னிங்

தைவானை பாதுகாப்போம் என்று பிடன் தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

நியூயார்க்: உலகிலேயே அமெரிக்க ராணுவம் எந்த அளவுக்கு சக்தி படைத்தது என்பது ரஷ்யா, சீனாவுக்கு நன்றாக தெரியும் என்று அதிபர் பிடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.. அத்துடன் தைவானை சீனா தாக்கினால் அமெரிக்கா நிச்சயம் பாதுகாப்பு தரும் என்றும் அதிபர் ஜோபிடன் அதிரடியாக அறிவித்துள்ளார்.

தென்சீனாவில் சிறிய தீவு நாடுதான் தைவான்.. இங்கு ஜனநாயக ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.. அமெரிக்கா, இந்தியா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளுடன் சீனா இணக்கமாக உள்ளது. இதற்கு காரணம், ஜனநாயக கொள்கைகளை இந்த நாடுகள் பின்பற்றுவதுதான்.

ஆனால், கடந்த சில வருடங்களாகவே, தனது தேசிய பாதுகாப்புச் சட்டம் மூலமாக சீன கம்யூனிச அரசு தைவானை முழுவதுமாக ஆக்கிரமிக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது... அவ்வப்போது சீன கடற்படையும், விமானப் படையினரும் தைவான் எல்லைக்குள் அத்துமீறி வருகின்றனர்.

பாலியல் புகார் வழக்கு; விசாரணையை தாமதப்படுத்த முன்னாள் சிறப்பு டிஜிபி முயற்சி - அரசு குற்றச்சாட்டுபாலியல் புகார் வழக்கு; விசாரணையை தாமதப்படுத்த முன்னாள் சிறப்பு டிஜிபி முயற்சி - அரசு குற்றச்சாட்டு

பலம்

பலம்

தைவான் தன்னை தற்காத்துக்கொள்ள அமெரிக்காவுடன் ஆயுத ஒப்பந்தம் போட்டுக் கொண்டதுடன், அதிக ராணுவ பலம் கொண்ட சீனாவை தைவான் தொடர்ந்து எதிர்த்து வருகிறது... ஆனாலும் சீனாவின் அச்சுறுத்தலில் இருந்து தப்ப முடியவில்லை. இப்போது இன்னொரு தகவலும் வெளியாகி உள்ளது.. சீன வான் எல்லைக்குள் நுழைந்ததாக ரேடார் தகவல்கள் வருகின்றன.

சமாதானம்

சமாதானம்

தற்போது தைவான் - சீனா இரு நாடுகளிடையே தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த இரு நாளையும் மறுபடியும் சமாதானம் செய்து ஒன்று சேர்க்கும் முயற்சியில் சீன அதிபர் மும்முரமாகி உள்ளார்.. இதேபோல, தைவானுடன் ஒன்றிணையை சீனாவும் ஏற்கனவே விருப்பம் தெரிவித்திருந்தது.. ஆனால், தைவானுக்கு இதில் உடன்பாடு இல்லை.

 ராணுவ பலம்

ராணுவ பலம்

கடந்த சில மாதங்களாகவே சீனாவின் ஆக்கிரமிப்பு குறித்து தொடர்ந்து குற்றம் சாட்டி கொண்டிருக்கிறது.. கடந்த 1949-ல் நடந்த உள்நாட்டு போருக்கு பிறகுதான் தைவான் உருவானது... ஆனால், சீனாவின் ஒருங்கிணைந்த பகுதிதான் தைவான் என்று சீனா சொல்லி கொண்டிருக்கிறது.. தேவைப்பட்டால் தைவானை கைப்பற்றுவோம் என்றும், அதற்காக எங்கள் ராணுவ பலத்தை பயன்படுத்த தயங்கமாட்டோம் என்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறியிருந்தார்..

Recommended Video

    அருமை! AMCA New Update | அடடே US Hypersonic Missile Technology | Defense Updates With Nandhini
     போர் பயிற்சி

    போர் பயிற்சி

    அதற்கேற்றபடி, இப்போதெல்லாம் சீனாவும், தைவானை சுற்றியே தன்னுடைய போர் பயிற்சியை அதிகரித்து கொண்டிருக்கிறது.. கடந்த ஆண்டு செப்டம்பர் 18, 19 ஆகிய தேதிகளில் சீனாவின் சுமார் 40 போர் விமானங்கள் சீனா - தைவான் இடையிலான எல்லையை கடந்ததாகவும், அப்போது முதலே தன்னுடைய படை பலத்தை கொண்டு சீனா அச்சுறுத்துவதாகவும் தைவான் அதிபர் சாய் இங் வென் குற்றஞ்சாட்டி வருகிறார்.

    பேச்சு

    பேச்சு

    இப்படிப்பட்ட சூழலில்தான் அமெரிக்க அதிபர் பிடனின் பேச்சு பெருத்த கவனத்தை உலக நாடுகளில் திருப்பி வருகிறது.. சிஎன்என் நிகழ்ச்சி ஒன்றில் பிடன் கலந்து கொண்டு பேசியபோது, "தைவானுடனான எங்கள் உறவு சமூகமாக உள்ளது.. ஒரு மாற்றமும் இல்லை.. ஒருவேளை சீனா தைவானை தாக்கினால், நாங்கள் கண்டிப்பாக தைவானை பாதுகாப்போம்" என்று திட்டவட்டமாகவும் நம்பிக்கையுடனும் கூறினார்.

    English summary
    US will defend Taiwan if China attacks, says President Joe biden
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X