காப்பாத்துங்க! சவுதி இளவரசரையே நடுங்க வைத்த எலான் மஸ்க்.. கோடிகளை கொட்டிய வான்கார்ட்.. இதுதான் பவர்
நியூயார்க்: ட்விட்டர் நிறுவனத்தை வாங்க எலான் மஸ்க் எடுத்திருக்கும் முடிவு பல்வேறு பெரு நிறுவனங்களை, ட்விட்டர் பங்குதாரர்களை பதற வைத்துள்ளது. ஏன் என்று தெரியுமா? வாருங்கள் பார்க்கலாம்!
ட்விட்டர் நிறுவனத்தை மொத்தமாக வாங்க டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் முடிவு செய்துள்ளார். ஏற்கனவே ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவிகித பங்குகளை மஸ்க் வாங்கினார். இந்த நிலையில் ட்விட்டரை மொத்தமாக 43 பில்லியனுக்கு வாங்கும் ஆபரை மஸ்க் கொடுத்துள்ளார்.
ட்விட்டர் நிறுவனத்தின் மொத்த மதிப்பு கிட்டத்தட்ட 37 பில்லியன் ஆகும். இந்த நிலையில் 6 பில்லியன்டாலர் கூடுதலாக கொடுத்து அந்த நிறுவனத்தை வாங்க மஸ்க் முடிவு செய்துள்ளார்.

எலான் மஸ்க்
எலான் மஸ்க்கின் இந்த முடிவு அந்த நிறுவனத்தில் இருக்கும் போர்ட் மெம்பர்களை பதற வைத்துள்ளது. ஏனென்றால் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்குகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் அப்படி வாங்கும் பட்சத்தில் அதை பிரைவேட் கம்பெனியாக மாற்றுவார். அதோடு நிறுவனத்தில் இருக்கும் போர்ட் மெம்பர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வாய்ப்புகள் உள்ளன.

ட்விட்டர் நிறுவனம்
அதோடு இப்போது ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவேன்.. இதுதான் கடைசி ஆபர் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இதை ட்விட்டர் நிறுவனம் ஏற்காத நிலையில் அது பெரும்பான்மை பங்குதாரர்களுக்கு எதிரான முடிவாக இருக்கும். ஏனென்றால் மஸ்க் தற்போது 9 சதவிகித பங்குகளை வைத்தார். பெரும்பான்மை பங்குகளை அவர்தான் வைத்து இருந்தார் (நேற்று வரை).

கட்டாயம்
இதனால் அதிக பங்குகளை வைத்திருக்கும் எலான் மஸ்க் போன்ற பங்குதாரர்களின் கோரிக்கைகளை ட்விட்டர் நிறுவனம் ஏற்க வேண்டும். ஒருவேளை மஸ்க் கொடுத்த ஆபரை ட்விட்டர் நிறுவனம் ஏற்காத பட்சத்தில் அது பங்கு ரீதியாக அந்த நிறுவனத்திற்கு சரிவை ஏற்படுத்தலாம். ஏன் மஸ்க் கூட தனது பங்குகளை விற்றுவிட்டு எஸ்கேப் ஆகும் வாய்ப்புகளும் உள்ளன. அபப்டி செய்தால் ட்விட்டர் நிறுவனம் பெரிய அளவில் சரிவுகளை சந்திக்கும் வாய்ப்புகளும் உள்ளன.

பங்குதாரர்கள் எச்சரிக்கை
இந்த நிலையில்தான் ட்விட்டர் நிறுவனத்தில் தங்கள் பங்குகளை அதிகரிக்கும் முடிவுகளை மற்ற பெரிய பங்குதாரர்கள் இறங்கி உள்ளனர். எலான் மஸ்க் அதிக பங்கு வைத்து இருப்பதால்தானே அவர் இப்படி கண்டிஷன்களை விதிக்கிறார். அதை மாற்ற வேண்டும் என்று முடிவு செய்து ட்விட்டர் நிறுவனத்தின் பங்குதாரர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்காக ட்விட்டர் நிறுவனத்தின் கூடுதல் பங்குகளை வாங்க அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

எவ்வளவு பங்குகள்
அதாவது ட்விட்டர் நிறுவனத்தில் மஸ்க் வைத்து இருக்கும் 9 சதவிகித பங்குகளை விட கூடுதல் பங்குகளை வாங்க மற்ற பெரிய நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதற்காக பல்வேறு நிறுவனங்கள் பல கோடிகளை வாரி இறைக்க தொடங்கி உள்ளது. முன்னதாக இந்த நிறுவனத்தில் வான்கார்ட் குழு வைத்திருந்த 8.8 சதவிகித பங்குதான் அதிகபட்ச பங்காக இருந்தது. அதன்பின் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவிகித பங்குகளை மஸ்க் வாங்கினார்.

போட்டி அதிகரிப்பு
இந்த நிலையில் மஸ்க்கை முந்தும் வகையில் தற்போது வான்கார்ட் குழு மீண்டும் பங்குகளை உயர்த்தி உள்ளது. தற்போது வான்கார்ட் நிறுவனம் தனது மொத்த பங்குகளை 10 சதவிகிதமாக உயர்த்தி உள்ளது. ட்விட்டர் நிறுவனத்தை மஸ்க் கைக்கு செல்லாமல் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இப்படி பெரிய நிறுவனங்கள் களம் குதித்துள்ளன. வான்கார்ட் குழுமம் 7.50 ட்ரில்லியன் டாலர் மதிப்பு கொண்ட மிகப்பெரிய நிறுவனம் ஆகும்.

வான்கார்ட் தீவிரம்
ட்விட்டர் நிறுவனத்தை மஸ்க் வாங்காமல் காப்பாற்றும் வகையில் வான்கார்ட் தீவிரம் காட்டி காட்டி வருகிறது. இன்னொரு பக்கம் ட்விட்டர் நிறுவனத்தில் பங்குகளை வைத்து இருக்கும் சவுதி இளவரசர் அல்வாலீத் பின் தலால் மஸ்க் கருத்தால் பதறிப்போய் இருக்கிறார். அதன்படி ட்விட்டர் நிறுவனத்தை மஸ்க் வாங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தலால் நேரடியாக குறிப்பிட்டுள்ளார். இவர் சுமார் 4.5 சதவிகித பங்குகளை வைத்து இருக்கிறார்.
Recommended Video

கேஎச்சி நிறுவனம்
இவரின் கேஎச்சி நிறுவனம்தான் ட்விட்டரில் இருக்கும் இன்னொரு பெரிய பங்குதாரர். வான்கார்ட் நிறுவனம் ட்விட்டர் நிறுவனத்தை மஸ்க் வாங்குவதை மறைமுகமாக எதிர்த்துள்ள நிலையில் தலால் நேரடியாக எதிர்த்துள்ளனர். உலகின் நம்பர் 1 பணக்காரர் மஸ்க். தன்னுடைய பொருளாதார ரீதியான பவர் மூலம் சவுதி இளவரசர் தொடங்கி டாப் நிறுவனம் வரை பலரையும் மஸ்க் ஒரே ஆபர் மூலம் பதற வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications