அமெரிக்காவின் பொற்காலம் தொடங்கிவிட்டது.. ஒருநாளும் ஓய்வெடுக்க மாட்டேன்.. டொனால்ட் டிரம்ப் வெற்றி உரை
நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்று 47வது அதிபராகும் டொனால்ட் டிரம்ப் வெற்றி உரை நிகழ்த்தி உள்ளார்.
டொனால்ட் டிரம்ப் நிகழ்த்திய வெற்றி உரையில், நாம் அமெரிக்காவின் எல்லையை பாதுகாக்க போகிறோம். இது அமெரிக்க வரலாற்றில் இதுவரை காணாத மிகப்பெரிய வெற்றி. அமெரிக்காவை மாற்ற போகிறோம்.. அமெரிக்காவின் ஒவ்வொரு விஷயங்களையும் மாற்றி நமது நாட்டை சரி செய்ய போகிறோம்.

நான் இந்த நாட்டு மக்களுக்காக தினமும் போராட போகிறேன். நான் ஓய்வெடுக்க போவது இல்லை. அமெரிக்காவின் பொன்னான காலமாக இது இருக்க போகிறது. இந்த வெற்றி அமெரிக்காவை மீண்டும் மிகப்பெரிய நாடாக மாற்ற போகிறது. make america great again என்ற தத்துவத்திற்கு ஏற்றபடி அமெரிக்காவில் ஆட்சி செய்வோம். நார்த் கரோலினா.. ஜார்ஜியா, விஸ்கான்சின் மாகாணங்கள் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்துள்ளன. அந்த மாகாணங்களுக்கு என்றும் நன்றியை உரித்தாக்குகிறேன். வலிமை, வளமான அமெரிக்காவை உருவாக்குவோம், என்று டிரம்ப் குறிப்பிட்டு உள்ளார்.
நாம் இதுவரை வரலாற்றில் பார்க்காத மிகப்பெரிய நிகழ்வு இது. இது மிகப்பெரிய அரசியல் இயக்கமாக.. அலையாக அமெரிக்காவில் உருவெடுத்து உள்ளது. இதற்கு முன் அமெரிக்காவில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது இல்லை. இனியும் நடக்குமா என்பது சந்தேகம்.
அமெரிக்காவை புதிய உயரத்திற்கு இந்த நிகழ்வு கொண்டு செல்லும். நாட்டின் பிரச்சனைகளை சரி செய்வோம். வரலாறு படைத்து உள்ளோம். வரலாற்றில் இது முக்கியமான நிகழ்வு. மிகப்பெரிய தடைகளை நாம் தகர்த்து உள்ளோம், என்று டிரம்ப் குறிப்பிட்டு உள்ளார்.
அதிபர் தேர்தல் வெற்றி: அமெரிக்க அதிபர் தேர்தலில் அமெரிக்க முன்னாள் அதிபரும் குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் வெற்றிபெற்றுள்ளார். துணை அதிபர் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் கடுமையான தோல்வியை சந்தித்துள்ளார். டொனால்ட் டிரம்ப் மெஜாரிட்டிக்கு தேவையான 270க்கும் அதிகமான எலக்ட்ரல் வாக்குகளை பெற்று வெற்றி பெறும் நிலையில் உள்ளார். தற்போது வரை 267 எலக்ட்ரல் வாக்குகளை வென்றுள்ளார். இதன் மூலம் டிரம்ப் வெற்றி உறுதியாகி உள்ளது. கமலா ஹாரிஸ் 214 வாக்குகளை வென்றுள்ளார். மொத்தமாக 538 எலக்ட்ரல் வாக்குகளில் 270 யாருக்கு கிடைக்கிறதோ அவர்தான் அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவார். அந்த வகையில் டிரம்ப் வென்று மீண்டும் அதிபராகிறார்.
அமெரிக்காவில் மக்கள் வாக்குகளை வைத்து நேரடியாக வெற்றியாளரை தேர்வு செய்ய மாட்டார்கள். மாறாக எலக்ட்ரல் வாக்குகள் பயன்படுத்தப்படும். அமெரிக்காவில் மொத்தம் 538 எலக்ட்ரல் வாக்குகள் உள்ளன. இதில் 270 வாக்குகளை அதிபர் வேட்பாளர் பெற வேண்டும். அமெரிக்காவில் ஒவ்வொரு மாகாணத்திற்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் எலக்டர்ஸ் இருப்பார்கள். அந்த மாகாணத்தில் இருக்கும் செனட் மற்றும் பிரதிநிதிகள் எண்ணிக்கையை பொறுத்தே எலக்டர்ஸ் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும்.
மாகாணத்தில் இருக்கும் செனட் மற்றும் பிரதிநிதிகள் எண்ணிக்கையை பொறுத்தே எலக்டர்ஸ் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும். ஒவ்வொரு மாகாணத்திற்கு சம பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும்.. கறுப்பின மக்கள்.. அமெரிக்காவின் அனைத்து மாகாணத்திலும் இருக்கும் பிற சமூக மக்களுக்கும் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும்.. மக்கள் தொகை அதிகம் உள்ள மாகாணங்கள் மட்டும் தேர்தல் முடிவை தீர்மானிக்க கூடாது என்பதற்காக இந்த எலக்ட்ரல் வாக்கு முறை அமெரிக்காவில் கடைபிடிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications