எலான் மஸ்க் பகிர்ந்த ஒரு போட்டோ.. யார் அது? சிஐஏவா? உலக நாடுகளின் உளவுத்துறையே ஆடிப்போயிடுச்சே

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: DOGE தலைவர் எலான் மஸ்க் கடந்த சில நாட்களாக சிஐஏ அமைப்புடன் நெருக்கமாக மாறி வருகிறார். கிட்டத்தட்ட சிஐஏ அமைப்பின் செல்லப்பிள்ளையாக அவர் மாறிவிட்டார். அமெரிக்காவில் யார் அதிபராக இருந்தாலும் சிஐஏதான் ஆட்சி செய்கிறது என்ற வாதம் உள்ளது. சிஐஏ கட்டுப்பாட்டில்தான் deepstate உள்ளது. அவர்கள்தான் உலக அரசியலை கட்டுப்படுத்துகிறார்கள் என்ற வாதம் உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் எலான் மஸ்க் சிஐஏவிற்கு நெருக்கம் ஆகி உள்ளார்.

சமீபத்தில் கூட அமெரிக்கர் ராணுவ ரகசியங்கள் பல பென்டகன் மூலம் எலான் மஸ்க்கிற்கு தெரிவிக்கப்பட்டதாக சிஐஏ வட்டாரங்கள் தெரிவித்தது. இந்த நிலையில் எலான் மஸ்க் மீண்டும் சிஐஏ அலுவலகத்திற்கு விசிட் செய்துள்ளார். அங்கே அவர் நேற்று நீண்ட நேரம் ஆலோசனைகளை செய்தார். அரசின் தற்காலிக பதவியில் இருக்கும் ஒருவர் அமெரிக்காவின் உயரிய சிஐஏ அமைப்பில் என்ன ஆலோசனைகளை செய்கிறார் என்ற பரபரப்பு உலக அளவில் ஏற்பட்டு உள்ளது. அவர் உலகின் நம்பர் 1 பணக்காரர், மக்களால் தேர்வு செய்யப்பட்டவர் அல்ல.. அதோடு மூர்க்கமாக முடிவுகளை எடுக்க கூடியவர். அப்படிப்பட்டவர் சிஐஏ அலுவலகத்தில் என்ன செய்கிறார் என்ற கேள்வி.. விவாதம் எழுந்துள்ளது.

Why is Elon Musk photo in the CIA office sparking debate

பென்டகன் விளக்கம்

இந்த நிலையில்தான் சீனாவுடன் அமெரிக்கா போர் செய்வதாக இருந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்று DOGE தலைவர் எலான் மஸ்க்கிடம் விளக்கப்பட்டதாக பென்டகன் வட்டாரங்கள் தெரிவித்த நிலையில் அமெரிக்க அதிபர் எலான் மஸ்க் அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

1. பென்டகன் உடன் நேற்று முதல்நாள் டிரம்ப் ஆலோசனை மேற்கொண்டார். அதில் அமெரிக்காவின் பல துறைகள், போர் திட்டங்கள், ஆயுதங்கள் உற்பத்தி பற்றி ஆலோசனை செய்யப்பட்டது.

2. அதே சமயம் சீனா உடன் போர் நடத்துவது பற்றியும் ஆலோசனை செய்யப்பட்டதாக.. இதை பற்றிய ஆவணங்கள் மஸ்க்கிடம் வழங்கப்பட்டதாக செய்திகள் வந்தன.

3. மேலும் அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் ஆலோசனை நடத்துவதற்கு முன் என்னவெல்லாம் ஆலோசனை செய்யலாம் என்றும் மஸ்க் உடன் ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

ஆனால் இதை டிரம்ப் மறுத்துள்ளார். இந்த விவகாரம் பெரிதானதும் அலறியடித்து பதில் சொன்ன டிரம்ப்.. அப்படி ஆலோசனை நடக்கவில்லை என்று கூறி உள்ளார். அதே சமயம் பென்டகன் அளித்த விளக்கத்தில் பென்டகன் உடன் நேற்று முதல்நாள் டிரம்ப் ஆலோசனை மேற்கொண்டார். அதில் அமெரிக்காவின் பல துறைகள், போர் திட்டங்கள், ஆயுதங்கள் உற்பத்தி பற்றி ஆலோசனை செய்யப்பட்டது. ஆனால் சீனாவின் போர் பற்றி எல்லாம் விவாதிக்கப்படவில்லை என்று கூறி உள்ளார்.


முக்கிய பொறுப்பு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.. எலான் மஸ்க்கிற்கு அரசாங்கத் திறன் துறை ("DOGE") தலைவர் பொறுப்பை வழங்கி உள்ளார். எலான் மஸ்க் இந்த முறை நேரடியாக டிரம்பிற்கு தேர்தலில் ஆதரவு கொடுத்தார். ஒரு காலத்தில் தீவிர ஜனநாயக கட்சி ஆதரவாளராக இருந்தவர் எலான் மஸ்க். கடந்த சில வருடங்களாக அவரின் அரசியல் கொள்கை வலதுசாரியாக் மாறிவிட்டது.

முக்கியமாக பல விஷயங்களில் தற்போதைய அதிபர் பிடனுக்கும்.. அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸுக்கும் எதிரான முடிவுகளை எலான் மஸ்க் எடுத்துள்ளார். இவர்களை கடுமையாக எலான் மஸ்க் எதிர்த்து வந்துள்ளார். இந்த முறை டிரம்ப்பை எலான் மஸ்க் ஆதரித்துள்ளார். அதோடு தேர்தல் செலவிற்கான நிதி உதவிகளையும் எலான் மஸ்க் கொட்டிக்கொடுத்துள்ளார். இந்த நிலையில்தான் இவருக்கு டிரம்ப் அமைச்சரவை பதவி வழங்கி உள்ளார். ஆட்சியை சிறப்பாக நடத்துவதற்கான புதிய அமைச்சரவை உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த அமைச்சரவைதான் DOGE ஆகும். அதாவது அரசாங்கத் திறன் துறை அல்லது Department of Efficiency ஆகும்.

இந்த பொறுப்பு ஏன் முக்கியம்

அரசாங்க அதிகாரத்தில் நடக்கும் முறைகேடுகளை அகற்றுவதற்கும், அதிகப்படியான விதிமுறைகளைக் குறைப்பதற்கும், வீண் செலவுகளைக் குறைப்பதற்கும், ஃபெடரல் ஏஜென்சிகளை மறுகட்டமைப்பதற்கும் வழி வகுக்கும் வகையில்.. தேவையற்ற நேரம், பணம் வீணாவதை தடுக்கும் விதமாகவும் இந்த துறை உருவாக்கப்பட்டு உள்ளது. இவர் பட்ஜெட் தாக்கல் தொடங்கி பல முக்கிய முடிவுகளில் நேரடியாக பங்கேற்பார். அரசின் நேரடி துறை இது என்றாலும்.. இது நியமன துறைதான். அரசின் அதிகாரபூர்வ துறை கிடையாது. ஆனாலும் மஸ்க்கிற்கு பெரிய பவர் அளிக்கப்பட்டு உள்ளது.

Take a Poll

கட்டுப்படுத்துகிறாரா?

அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் டிரம்ப்தான் அதிகாரபூர்வமாக அதிபர் என்றாலும்.. டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்தான் பெரும்பாலான முடிவுகளில் தலையிடுகிறார்.. பெரும்பாலும் நிழல் உலக அதிபர் போல இவர் செயல்படுகிறார் என்று கூறப்படுகிறது.

ஒரு நாடு இருக்கிறது.. அதற்கு ஒரு தலைவர் இருக்கிறார்.. ஆனால் அவர் எடுக்கும் முடிவு எல்லாம் ஒரு பிஸ்னஸ்மேனின் நலனுக்காக என்று வைத்துக்கொள்ளுங்கள். கேட்டதும் உங்களுக்கு வேறு ஏதும் நாடு நினைவிற்கு வந்தால் நாங்கள் பொறுப்பல்ல.. நாங்கள் இங்கே பேசுவது அமெரிக்கா பற்றி!

அதிபர் டொனால்ட் டிரம்ப் பொதுவாக மற்றவர்கள் பேச்சை கேட்பவர் கிடையாது. உலகிலேயே ஒரு விஷயம் ஒருவருக்கு அதிகம் தெரியும் என்றால் அது எனக்குத்தான் என்று அடிக்கடி டிரம்ப் பல மேடைகளில் கூறுவது உண்டு. அந்த அளவிற்கு டிரம்ப் தான்தான் எல்லாம் என்று நினைக்க கூடியவர். ஆனால் அப்படிப்பட்ட டிரம்ப் இரண்டாவது ஆட்சி காலத்தில் அதிகமாக மஸ்க் பின்னாடி சுற்றிக்கொண்டு இருக்கிறார்.

முக்கியமாக டொனால்ட் டிரம்பின் 2024 அதிபர் தேர்தல் பிரச்சாரத்திற்கு ஆதரவாக எலோன் மஸ்க் கணிசமான நிதி உதவிகளை செய்தார். மஸ்க் குறைந்தபட்சம் 277 மில்லியன் டாலர்களை நன்கொடையாக அளித்து 2024 தேர்தலில் கேம் சேஞ்சராக இருந்தார். தனக்கு நெருக்கமான பல பிஸ்னஸ்மேன்களை அரசியல் நிதி உதவி கொடுக்க வைத்தார்.

டிரம்ப் அரசியல் மாற்றம்

இப்படிப்பட்ட நிலையில்தான் டிரம்ப் அரசியல் ரீதியாக எலான் மஸ்க்கிற்கு கட்டுப்பட்டு இருக்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. எலான் மஸ்க் வெள்ளை மாளிகையில் டிரம்ப் பிரீமியம் அட்வைஸர் என்ற பெயரை பெற்றுள்ளார். இதன் மூலம் மஸ்க் அரசு தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்க முடியும். அரசின் கொள்கைகளை மாற்ற முடியும்.

மஸ்க் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் வேலையை விட்டு தூக்கலாம்.. அதிபர், துணை அதிபர், அமைச்சர்கள் தவிர யாரை வேண்டுமானாலும் நீக்கலாம். கிட்டத்தட்ட அதிபருக்கு இணையான பவர் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+