பரமா நீயுமா? கைவிட்ட அமெரிக்கா.. இஸ்ரேலுக்கு விழுந்த பேரிடி.. போரில் மிகப்பெரிய திருப்பம் இதுதான்!
நியூயார்க்: இஸ்ரேல் - பாலஸ்தீனம் போரில் அமெரிக்கா எடுத்து இருக்கும் நிலைப்பாடு ஒன்று இஸ்ரேலுக்கு பேரிடியாக மாறி உள்ளது.
இஸ்ரேல் - பாலஸ்தீன போர் உச்சத்தில் உள்ளது. இந்த போர் தொடர்பாக உலக நாடுகள் கடுமையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றன. இந்த போர் தொடங்கியதில் இருந்தே இஸ்ரேலுக்கு ஆதரவாக இருப்போம் என்று அமெரிக்கா கூறியது. இஸ்ரேல் எடுக்கும் நடவடிக்கைகள் அனைத்திற்கும் ஆதரவாக இருப்போம் என்று அமெரிக்கா கூறியது. இந்த போரில் இஸ்ரேல் என்ன செய்தாலும் அதை அமெரிக்கா ஆதரிக்கும் என்று பிடன் கூறி இருந்தார். இஸ்ரேலுக்கு ஆதரவாக அவர போர் கப்பலை கூட அனுப்பி இருந்தார்.
அதன்படி அமெரிக்கா பாதுகாப்பு படையின் ராட்சசன் என்று அழைக்கப்படும் யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர். ஃபோர்டு போர் கப்பல் மத்திய கிழக்கில் கால் பதித்து உள்ளது. இஸ்ரேலுக்கு உதவ உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கி கப்பலும் சில சிறந்த அமெரிக்க போர் விமானங்களும் இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டுள்ளன. தற்போது மத்திய கிழக்கு நாடுகளின் கடல் பகுதிக்குள் இந்த கப்பல் நுழைந்து உள்ளது. ஏற்கனவே இந்த போர் கப்பல் லெபனான் கடல் பகுதிக்கு அருகில் சென்று உள்ளது.

பிடன் கருத்து: இப்படிப்பட்ட நிலையில் இஸ்ரேல் - பாலஸ்தீனம் போரில் அமெரிக்கா எடுத்து இருக்கும் நிலைப்பாடு ஒன்று இஸ்ரேலுக்கு பேரிடியாக மாறி உள்ளது. காசா பகுதியை இஸ்ரேல் ஆக்கிரமிக்க நினைக்க கூடாது. காஸாவை கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம் என்று இஸ்ரேல் நினைத்தால் அது ஒரு "பெரிய தவறு" என்று ஜோ பிடன் இஸ்ரேலை எச்சரித்து உள்ளார். அதே சமயம் ஹமாஸ் படையை அழிக்க போதிய ஆதரவை தருவோம் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து இஸ்ரேலும் வாலை சுருட்டிக்கொண்டு.. காஸாவை ஆக்கிரமிக்கும் எண்ணம் இல்லை என்று பின்வாங்கி உள்ளது . இஸ்ரேல் என்ன செய்தாலும் ஆதரிப்போம் என்று கூறிவிட்டு அமெரிக்கா தற்போது எடுத்துள்ள இந்த நிலைப்பாடு இஸ்ரேலை அதிர வைத்துள்ளது.
பல நாடுகள் எதிர்ப்பு: ஏற்கனவே இந்த போரில் இஸ்ரேலுக்கு எதிராக பல நாடுகள் திரும்பி உள்ளனர். இஸ்ரேலின் இந்த போரால் அவர்களுடன் செய்ய இருந்த வணிக ஒப்பந்தத்தை சவுதி அரேபிய நிறுத்தி உள்ளது. அதேபோல் லெபனான், எகிப்து உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராக உள்ளன.
( மோடி போட்ட போடு..மீனாய் துடிக்கும் இஸ்ரேல் நெதன்யாகு.. எதிர்பார்க்கவே இல்லையே.. உலக அரசியலே மிரளுது )
ஈரான் ஏற்கனவே இஸ்ரேலை தாக்க ரெடியாகிவிட்டது. ஹமாஸ் இயக்கத்திற்கு ஆதரவாக ரகசியமாக ஈரான் படைகளை அனுப்பி உள்ளது. இன்னொரு பக்கம் ஈரானின் நேரடி ஆதரவில் ஹெஸ்புல்லா இயக்கம் இந்த போரில் களமிறங்கி உள்ளது. லெபனானில் இருந்து கொண்டு இந்த அமைப்பு இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை விட்டுக்கொண்டு இருக்கிறது. ஹிஸ்புல்லா, ஹிஸ்பெல்லா என்று பல்வேறு நாடுகளில் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் இயக்கம் லெபனானில் ஹெஸ்புல்லா என்ற பெயரில் இயங்கி வருகிறது. முக்கியமாக இந்த படைக்கு பண நீதியாக, ஆயுத தளவாட ரீதியாக, தொழில்நுட்ப ரீதியாக ஈரான் உதவி செய்வதாக கூறப்படுகிறது. ஈரானின் இந்த செயல் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை டென்ஷனுக்கு உள்ளாக்கி உள்ளது.

ரஷ்யாவும் இந்த விவகாரத்தில் களமிறங்கி உள்ளது. இது தொடர்பாக ரஷ்ய அதிபர் புடின் அளித்துள்ள பேட்டியில், அமெரிக்காவின் மத்திய கிழக்கு பகுதிக்கான கொள்கைகளின் தோல்விகளுக்கு இது ஒரு தெளிவான உதாரணம் என்று இப்போது எல்லோரும் புரிந்து கொள்வார்கள். நான் சொன்ன கருத்துக்கு பலர் என்னுடன் உடன்படுவார்கள் என்று நான் நம்புகிறேன்.
அவர்கள் சமாதான தீர்வை ஏகபோகமாக கொண்டு வர முயன்றனர். தாங்கள் வைத்ததுதான் சட்டம்.. நாங்கள் மட்டுமே அமைதியை கொண்டு வருவோம் என்று அவர்கள் நினைத்தார்கள். அவர்கள் நினைத்தது நடக்கவில்லை, ஆனால் துரதிர்ஷ்டவசமாக இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அமைதிக்கு பதிலாக தற்போது போர்தான் உருவாகி உள்ளது. இரண்டு தரப்பும் அமைதியை இழந்துள்ளது.அதேபோல் இந்தியாவும் கூட இஸ்ரேலை முழுமையாக ஆதரிக்காமல் பாலஸ்தீன தனி நாடே தீர்வு என்றுள்ளது. சீனாவும் பாலஸ்தீன தனி நாடே தீர்வு என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளதால்.. இஸ்ரேல் கொஞ்சம் கொஞ்சமாக தனித்துவிடப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications