நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"நான் சொன்னது சரியாகிவிட்டது".. சீறி வந்த டிரம்ப்.. கசிந்த 10,000 மெயில்கள்.. பரபரக்கும் வுஹான் லேப்

Google Oneindia Tamil News

நியூயார்க்: வுஹான் வைரஸ் ஆராய்ச்சி மையம் குறித்தும் "சீன வைரஸ்" குறித்தும் நான் சொன்னது சரியாகிவிட்டது என்று அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுக்க 2019ல் கொரோனா பரவல் ஏற்பட்ட போது, அதில் சீனாவை வெளிப்படையாக அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் குற்றஞ்சாட்டி இருந்தார். சீனாவில் இருந்துதான் இந்த வைரஸ் தோன்றியது.இது சீன வைரஸ்.

 மேலும் 1 வாரம் ஊரடங்கு நீட்டிப்பா.. தளர்வுகள் அறிவிக்கப்படுமா.. அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஸ்டாலின் மேலும் 1 வாரம் ஊரடங்கு நீட்டிப்பா.. தளர்வுகள் அறிவிக்கப்படுமா.. அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஸ்டாலின்

வுஹான் ஆராய்ச்சி மையத்தில் இருந்துதான் வைரஸ் கசிந்துள்ளது. சீனாவை விசாரிக்க வேண்டும் என்று டிரம்ப் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தார். ஆனால் உலக சுகாதார மையம் நடத்திய வந்த ஆராய்ச்சியில் இந்த வைரஸ் லேபில் இருந்து கசிந்து இருக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்பட்டது.

ஆனால்

ஆனால்

அமெரிக்க அதிபர் தலைமை சுகாதாரத்துறை ஆலோசகர் ஆண்டனி பவுச்சியும், இந்த வைரஸ் லேபில் இருந்து கசியவில்லை. இது இயற்கையாக உருவாகி இருக்கவே அதிக வாய்ப்புள்ளது. இது லேபில் இருந்து கசிந்தது என்பது பொய்யான, தவறான தியரி என்றும் குறிப்பிட்டு இருந்தார். முன்னாள் அதிபர் டிரம்ப்பையும் பவுச்சி கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார்.

என்ன

என்ன

இந்த நிலையில்தான் பவுச்சி ஒருவேளை சீனாவிற்கு சாதகமாக செயல்பட்டு, டிரம்ப்பை எதிர்த்தாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இவரின் இமெயிலில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன் 10 ஆயிரம் மெயில்கள் கசிந்தன. வாஷிங்க்டன் போஸ்ட் உள்ளிட்ட சர்வதேச ஊடகங்கள் இந்த மெயில்களை வெளியிட்டன. அதில் வுஹான் ஆராய்ச்சி மைய அதிகாரிகளுடன் பவுச்சி நெருக்கமாக செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

நெருக்கம்

நெருக்கம்

சீனாவின் நோய் கட்டுப்பாட்டுத்துறை இயக்குனர் காவோ மற்றும் வுஹான் ஆராய்ச்சி மையத்தில் முதலீடு செய்த பலருடன் பவுச்சி நெருக்கமாக பேசி வந்து இருக்கிறார். வுஹான் ஆராய்ச்சி மையத்தில் இருந்து கொரோனா வரவில்லை என்று கூறியதற்காக பவுச்சிக்கு சில சீன நிறுவனங்கள் மெயில் அனுப்பி நன்றியும் தெரிவித்து இருக்கின்றன. இதனால் சீனாவுடன் நெருக்கமாக செயல்பட்டு, வுஹான் மையத்தை குற்றச்சாட்டில் இருந்து தப்பிக்க வைத்தாரோ என்று பவுச்சி மீது கேள்வி எழுந்துள்ளது.

பவுச்சி

பவுச்சி

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பிற்கும், பவுச்சிக்கும் இடையில் இரண்டு வருடமாக மோதல் உள்ளது. அப்போதே பவுச்சி சீனாவிற்கு ஆதரவாக இருப்பதாக டிரம்ப் கூறி இருந்தார். இந்த நிலையில் மீண்டும் தூக்கத்தில் இருந்து எழுந்து வந்த முன்னாள் அதிபர் டிரம்ப் புதிய குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். அதில், இந்த வைரஸ் சீனாவில் இருந்துதான் வந்துள்ளது.

சீனா வுஹான்

சீனா வுஹான்

சீனாவின் வுஹான் லேபில் இருந்து இந்த சீன வைரஸ் கசிந்தது உறுதியாகி உள்ளது. இது கண்டிப்பாக லேப் கசிவு தான். சீனா குறித்து நான் சொன்னது உண்மையாகிவிட்டது. சீனா மீது இதற்காக கண்டிப்பாக அபராதம் விதிக்க வேண்டும். உலகம் முழுக்க ஏற்பட்ட பிரச்சினைகளுக்கும், மரணங்களுக்கும் சீனாவை தண்டிக்க வேண்டும்.

ஒப்புக்கொண்டனர்

ஒப்புக்கொண்டனர்

என்னுடைய எதிரிகள் கூட இப்போது நான் சொன்னதை ஏற்றுக்கொண்டுள்ளனர். அப்போது என்னை கிண்டல் செய்தனர். பவுச்சி - சீனா இடையே நடந்த மெயில் உரையாடல் நிறைய சந்தேங்கங்களை எழுப்புகிறது. 10 டிரில்லியன் டாலர்களை சீனா உலகிற்கும் அமெரிக்காவிற்கும் கொடுக்க வேண்டும். உலக மரணங்கள் அனைத்திற்கும் சீனா பொறுப்பேற்க வேண்டும் என்று டிரம்ப் கூறியுள்ளார்.

பவுச்சி

பவுச்சி

தற்போது வுஹான் ஆராய்ச்சி மையம் மீண்டும் விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் கொரோனாவின் தோற்றம் குறித்து 90 நாட்களில் விசாரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். பவுச்சியும் இந்த வைரஸ் இயற்கையானதுதான். ஆனால் இது லேபில் இருந்து வந்ததற்கான வாய்ப்பும் உள்ளது. இதனால் அதை பற்றி விசாரிக்கலாம் என்று பல்டி அடித்துள்ளார்.

English summary
Wuhan Lab leak: Trump accuses China again for spreading the Coronavirus and attacks Anthony Fauci too.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X