கொடைக்கானல் போறவங்க மறந்துடாதீங்க! கலெக்டரிடம் இருந்து பறந்த உத்தரவு! சுற்றுலா பயணிகளுக்கு வார்னிங்
நீலகிரி: மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களை விற்பனை செய்தாலோ அல்லது பயன்படுத்தினாலோ 20 ரூபாய் பசுமை வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கபட்டுள்ளது.
மலைகளின் இளவரசி என கொடைக்கானல் அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள மிகச் சிறந்த கோடை வாசஸ்தலமான கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் வார இறுதி நாட்களிலும், விடுமுறை நாட்களில் அலை மோதும். குறிப்பாக கோடை காலங்களில் மக்கள் வெயிலில் இருந்து தப்பிக்க கொடைக்கானலில் முகாமிடுவார்கள். இதனால் கோடைக்காலங்களில் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும்.

சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவதால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாமல் இருக்க சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் போன்ற சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பொருட்களை கொண்டு வராமல் தடுக்க வனத்துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது.
இதற்காக கொடைக்கானல் செல்லும் மலையடிவாரத்திலும், நகருக்குள் நுழையும் போதும் சுற்றுலா பயணிகளிடம் சோதனை செய்யப்பட்டு பிளாஸ்டிக் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்படுகிறது. இந்த நிலையில் தற்போது 5 லிட்டருக்கும் குறைவான பிளாஸ்டிக் பாட்டிலை கொடைக்கானல் பகுதியில் வைத்திருந்தால், அதாவது விற்பனை செய்தாலோ அல்லது பயன்படுத்தினாலோ இதற்கு வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொடைகானல் பகுதியில் பிளாஸ்டிக் பாட்டில்களை வைத்திருப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களிடம் ரூ.20 பசுமை வரியாக விதிக்கப்படும். இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி கூறுகையில், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கொடைக்கானலில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களை, 5 லிட்டருக்கு குறைவான தண்ணீர் அல்லது குளிர்பான பாட்டில்களை விற்பனை செய்தாலோ, பயன்படுத்தினாலோ ரூ.20 பசுமை வரி விதிக்க தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
எனவே இதனை மீறி பிளாஸ்டிக் பாட்டில்களை வைத்திருப்பவர்களிடம் ரூ.20 பசுமை வரியாக விதிக்கப்படும். இதற்கு பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதன்படி இனிமேல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள் 5 லிட்டருக்கு குறைவான தண்ணீர், குளிர்பான பாட்டில்களை வைத்திருந்தால் 20 ரூபாய் பசுமை வரியாக விதிக்கப்படும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications