9 வயது சிறுமி.. ஜாமீனில் வந்தும் சேட்டை.. பாலியல் பலாத்காரம் செய்த கயவனுக்கு 32 ஆண்டுகள் சிறை தண்டனை
நீலகிரி: 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு 32 ஆண்டு சிறை தண்டனை விதித்து உதகை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
புதுச்சேரியில் 9 வயது சிறுமி, அப்பகுதியைச் சேர்ந்த 2 கொடூரர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர வைத்துள்ளது. சிறுமியைச் சிதைத்த காமுகன்களை தூக்கில் போட வேண்டும் என புதுச்சேரி மக்கள் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். இந்நிலையில், தமிழ்நாட்டில் அடுத்தடுத்து 2 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த கயவனுக்கு 32 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டம் உதகை அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த அஜித் குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட அஜித், மனநிலை பாதிப்பு இருப்பதாக கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியே வந்தார்.
ஜாமீனில் வெளியே வந்த அஜித் குமார் மீண்டும் ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் கூலி தொழிலாளி தம்பதியரின் 9 வயது மகள், தனியார் பள்ளியில் படித்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் அங்குள்ள கோயிலில் நடைபெற்ற திருவிழாவில் தோழிகளுடன் கலந்து கொண்டு, மாலை சிறுமி வீடு திரும்பிக் கொண்டிருந்தார் அந்தச் சிறுமி. அப்போது, அஜித், அந்தச் சிறுமியை வழிமறித்து பாலியல் பலாத்காரம் செய்து விட்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
சிறுமியை பொதுமக்கள் மீட்டு உதகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதற்கிடையே, பொதுமக்கள் சிலர் விரட்டிச் சென்று அஜித்தை பிடித்து தாக்கி, புதுமந்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, புது மந்து காவல் நிலைய போலீசார், போக்சோ உட்பட 6 பிரிவுகளில் அஜித் மீது வழக்கு பதிவு செய்து அவரை மீண்டும் கைது செய்தனர். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், அஜித் குமார் 2022ல் பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பான வழக்கு விசாரணை உதகை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. போச்கோ சட்டத்தில் கைதான அஜித் குமாருக்கு இன்று தண்டனை அறிவித்தது உதகை மகளிர் நீதிமன்றம். 9 வயது சிறுமியை பலாத்காரம் செய்த அஜித் குமாருக்கு 32 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் மற்றொரு சிறுமியை அஜித் குமார் பலாத்காரம் செய்த வழக்கு வரும் ஏப்ரல் 2ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications