நீலகிரி மாவட்டம் குன்னூரில் அதிசயமான பீட்ரூட்.. ஆச்சரியத்தில் அதிர வைத்த தம்பதி
ஊட்டி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்த அருவங்காடு பகுதியை சேர்ந்த ரமேஷ்-வள்ளி என்ற தம்பதிக்கு இயற்கை முறையில் விவசாயம் செய்ய ஆர்வம் காட்டி வந்தார்கள். இதற்காக தோட்டம் அமைத்து பீட்ரூட் சாகுபடி செய்தனர். பீட்ரூட் நன்கு விளைந்ததும் பீட்ரூட்களை அறுவடை செய்தார்கள். ஆனால் பொதுவாக ஒரு கிலோவுக்கு சுமார் 5 பீட்ரூட்டுகள் இருக்கும் நிலையில், இவர்களுடைய தோட்டத்தில் விளைந்த ஒரு பீட்ரூட் சுமார் 1½ கிலோ எடையில் இருந்தது. இதை கண்டு பலர் வியந்து போனார்கள்.
இன்று பலரும் இயற்கை முறையில் விவசாயம் செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள்.ஆனால் மகசூல் பெரிய அளவில் இருக்காது என்பதே பொதுவான கருத்தாக உள்ளது. இந்த சூழலில் நீலகிரி மாவட்டம் குன்னூரில் ஒரு விவசாயி இயற்கை முறையில் பீட்ரூட் விளைவித்துள்ளார். அது யாருமே எதிர்பார்க்காத எடையில் விளைந்திருக்கிறது.

பொதுவாகவே பீட்ரூட் குளிர்ச்சியான காலநிலையை விரும்பும் ஒரு பயிர் ஆகும். குறிப்பாக அக்டோபர் முதல் பிப்ரவரி வரையிலான காலம் இதற்கு மிகச்சிறந்தது என்பதால் இந்த காலக்கட்டத்தில், இயற்கை முறையில் பீட்ரூட் சாகுபடி செய்வது அதிகமாக உள்ளது. பீட்ரூட் வேர் பயிர் என்பதால், மண் இறுக்கமாக இருக்கக்கூடாது.
மணல் கலந்த வண்டல் மண் அல்லது பொலபொலப்பான செம்மண் சிறந்தது. அதில் தான் அதிகம் விளையும். மட்கிய தொழு உரம் அல்லது மண்புழு உரம் இட்டு மண்ணைக் கிளறுவார்கள். இயற்கை முறையில் விவசாயம் செய்யும்போது, நிலத்தை தயார் செய்யும்போது பஞ்சகவ்யா அல்லது ஜீவாமிர்தம் தெளிப்பது மண்ணின் நுண்ணுயிர் பெருக்கத்திற்கு உதவுவார்கள்.
பீட்ரூட்டில் பொதுவாக பூச்சித் தாக்குதல் குறைவு. ரசாயன உரங்கள் இன்றி வளர்க்கப்படும் பீட்ரூட் அதிக இனிப்புச் சுவையுடன் இருக்கும் என்கிறார்கள். தற்போது இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகளுக்கு நகரங்களில் நல்ல விலை கிடைக்கிறது. இதனால் பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்த அருவங்காடு பகுதியை சேர்ந்த ரமேஷ்-வள்ளி என்ற தம்பதிக்கு இயற்கை முறையில் விவசாயம் செய்ய ஆர்வம் காட்டி வந்தார்கள். இதற்காக தோட்டம் அமைத்து பீட்ரூட் சாகுபடி செய்தனர். பீட்ரூட் நன்கு விளைந்ததும் பீட்ரூட்களை அறுவடை செய்தார்கள். ஆனால் பொதுவாக ஒரு கிலோவுக்கு சுமார் 5 பீட்ரூட்டுகள் இருக்கும் நிலையில், இவர்களுடைய தோட்டத்தில் விளைந்த ஒரு பீட்ரூட் சுமார் 1½ கிலோ எடையில் இருந்தது
இதுகுறித்து அந்த தம்பதி கூறுகையில், நாங்கள் எந்த வித வீரிய விதைகள் மற்றும் ரசாயன உரங்கள் பயன்படுத்தாமல், இயற்கை முறையில் சாகுபடி செய்தோம். ஒரு பீட்ரூட் 1½ கிலோ எடையில் விளைந்து இருப்பது எங்களுக்கு ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது
நாங்கள் விளைவித்த பீட்ரூட்டுகளை விற்பனைக்கு கொடுக்காமல் உறவினர்கள், தெரிந்தவர்கள், அண்டை வீட்டுக்காரர்களுக்கு கொடுத்து வருகிறோம். மேலும் இயற்கை முறையில் பெரிய அளவில் விவசாயம் செய்ய திட்டமிட்டிருக்கிறோம். அதில் பீட்ரூட் மட்டுமல்லாமல் அனைத்து காய்கறிகளையும் பயிரிட முடிவு செய்துள்ளோம். ரசாயன பயன்பாட்டை குறைத்து இயற்கை முறையில் விவசாயம் செய்ய அனைவரும் முன்வர வேண்டும் என்றார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications