நீலகிரியில் விடாமல் பெய்த கனமழை.. திடீரென கேட்ட சத்தம்.. கதவை திறந்த ஆசிரியைக்கு நிகழ்ந்த சோகம்!
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி ஜெயலட்சுமி என்ற பெண் உயிரிழந்தார். வீட்டின் மீது மண் சரிவு ஏற்பட்டத்தில், வாசலில் நின்ற ஜெயலட்சுமி என்ற ஆசிரியை மண் சரிவில் சிக்கி உயிரிழந்தார். வீட்டில் இருந்த ஜெயலட்சுமியின் கணவர், 2 குழந்தைகள் ஆகியோர் காயமின்றி மீட்கப்பட்டனர்.
தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நேற்று மழை பெய்தது. குறிப்பாக நீலகிரி மற்றும் துாத்துக்குடி மாவட்டங்களில் நேற்று இரவு கனமழை பெய்தது. கன்னியாகுமரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று மழை பெய்தது. நீலகிரி மாவட்டம் குன்னூரில் கன மழையால் மண்சரிவு ஏற்பட்ட போது வீட்டின் கதவை திறந்த ஆசிரியை விஜயலட்சுமி என்பவர் மண்ணில் புதைந்து உயிரிழந்தார்.

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே கடந்த 2 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கிருஷ்ணாபுரம் பகுதியில் பெய்த மழையால் நேற்று இரவு 10:30 மணியளவில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இந்த மண் சரிவு அருகில் உள்ள ஜெயலட்சுமி என்பவர் வீட்டின் மீது விழுந்தது.
மண் சரிவு காரணமாக ஏற்பட்ட பயங்கர சத்தத்தால் பதற்றமடைந்த ஆசிரியை ஜெயலட்சுமி வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது ஜெயலட்சுமி மீது மண் சரிவு விழுந்த நிலையில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையறிந்த அப்பகுதி மக்கள் இச்சம்பவம் குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மண் சரிவில் சிக்கி உயிரிழந்த ஜெயலட்சுமியை 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்டனர்.
மேலும் வீட்டில் இருந்த ஜெயலட்சுமியின் கணவர் ரவி மற்றும் 2 குழந்தைகளையும் பத்திரமாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து, இந்த பகுதியில் வேறு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக என்று தீயணைப்பு துறையினர் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications