ரூ.300, 500.. ஒருபக்கம் எடப்பாடி பேச.. மறுபக்கம் பணப் பட்டுவாடா! அதிமுக நிர்வாகி மீது வழக்குப்பதிவு!
நீலகிரி: நீலகிரி லோக்சபா தொகுதியில் பணப் பட்டுவாடா செய்த அதிமுக நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடக்க உள்ளது. இதையொட்டி, அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இதற்கிடையே, பல்வேறு பகுதிகளில் பறக்கும் படையினர் பணப் பட்டுவாடாவை தடுப்பதற்காக தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீலகிரி தொகுதியில் திமுக சார்பில், ஆ.ராசா, பாஜக சார்பில் எல்.முருகன், அதிமுக சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வனை ஆதரித்து நேற்று தேர்தல் பிரச்சார, மேற்கொண்டார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
ஊட்டியில் திறந்த வேனில் நின்றபடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் எடப்பாடி பழனிசாமி. எடப்பாடி பழனிசாமி ஒருபக்கம் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருக்க, மறுபுறம், அதிமுக நிர்வாகி ஒருவர், பிரச்சாரக் கூட்டத்திற்கு வந்த கட்சியினர் மற்றும் பொதுமக்களுக்கு பணப் பட்டுவாடா செய்து கொண்டிருந்த வீடியோ வெளியானது.
பிரச்சார கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு அதிமுக ஒன்றிய செயலாளர் பெள்ளி என்பவர், ரூ.300, ரூ. 500 என பங்கு பிரித்து பணம் கொடுத்த வீடியோ வெளியான நிலையில், இது தொடர்பாக தேர்தல் பறக்கும் படை அதிகாரி தனலட்சுமி, ஊட்டி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
தேர்தல் பறக்கும் படை அதிகாரி அளித்த புகாரின் பேரில் அதிமுக ஒன்றிய செயலாளர் பெள்ளி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பட்டப் பகலில் பிரச்சாரக் கூட்டத்தில் பணப் பட்டுவாடா செய்யப்பட்டதால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
10 வருடங்களில் 5 கட்சி.. மதுரை டாக்டர் சரவணன் கடந்து வந்த அரசியல் கட்சிகள் லிஸ்ட்! -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
“தவெக ஆச்சரியக்குறிகளே.. விஜய்யை தலைவராக வச்சுக்கிட்டு எதுக்கு இதெல்லாம்?” அதிமுக காட்டமான பதிலடி -
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
"3 எம்.எல்.ஏக்களின் பதவி விலகலை 5 நிமிடத்தில் ஏற்றது ஏன்?” சபாநாயகருக்கு அதிமுக MP இன்பதுரை கேள்வி! -
தலைக்கு மேல் தொங்குது கத்தி.. வேதனையில் வேலுமணி டீம்! விடாப்பிடியாய் எடப்பாடி.. விஜய் கொடுத்த ஆஃபர் -
எடப்பாடி செய்த அந்த 3 தவறுகள்.. "முக்குலத்தோர் கோபம்.." உடைந்து சிதற போகுது கட்சி? அடுத்து என்ன -
ஆமை புகுந்த வீடான அதிமுக.. ஆசை காட்டி மோசம் செய்த லீமா? வேதனையில் வேலுமணி.. ரெடியான சிவி சண்முகம்! -
கீழ்தளத்தில் ராஜினாமா, மேல்தளத்தில் தவெகவில் இணைப்பு! குதிரை பேர கலாச்சாரம்! எடப்பாடி கண்டனம் -
மூஞ்ச பாத்து ஓட்டு போட்டுருந்தா தெரிஞ்சுருக்கும்.. பாவம்! தவெகவை பங்கம் செய்த அதிமுக ஜெயக்குமார் -
தவெகவில் இணையப் போகிறீர்களா?.. 25 எம்.எல்.ஏக்களில் இப்போது 17 பேர் தான்.. டென்ஷனாகிய சி.வி.சண்முகம் -
அமித்ஷா ஆரம்பித்த அரசியல் ஆட்டம்! எஸ்பி வேலுமணிக்கு கதவை மூடிய டெல்லி? எடப்பாடி பழனிசாமி ஏறும் மவுசு












Click it and Unblock the Notifications