ஊட்டி ரோட்டில் பார்த்தீங்களா.. எலும்பை உறைய வைக்கும் உறைபனி.. குளிரும் குன்னூர்.. தமிழ்நாடே "உதறுது"
ஊட்டி: கடந்த 2 நாட்களாகவே நீலகிரி மாவட்டத்தில் உறைபனி சூழ்ந்துள்ள நிலையில், பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகி உள்ளார்கள்.
சென்னை வானிலை மையம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், தமிழகம் முழுவதுமே அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் அதிகாலை நேரங்களில் லேசான பனிமூட்டம் இருக்கும் என்றும், நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இரவு நேரத்தில் ஓரிரு இடங்களில் உறைபனி பொழியும் என்று கூறியிருந்தது.

நீலகிரி: அதன்படியே, நீலகிரி மாவட்டத்தில் கடும்பனி நிலவி கொண்டிருக்கிறது.. கடந்த 2 மாத காலமாகவே, பனிப்பொழிவும், சாரல் மழையும் பெய்தபடியே உள்ளது.. வழக்கமாக, நவம்பர் மாத துவக்கத்திலேயே, குளிர் அதிகமாகிவிடும்.. டிசம்பர் மாதம் முழுவதுமே நீலகிரியில் கடும் பனி பாதித்தது.. மாவட்ட மக்கள் பெரும் அவதிக்கு ஆளானார்கள்.
இந்த ஒரு வார காலமாக, இந்த உறைபனி அதிகரித்துள்ளது.. விடிகாலை 5 மணியிலிருந்து காலை 8 மணி வரையில், பனி விலகாமல், சாலைகளில் உறைபனி விழுந்துகிடக்கிறது. இதனால், சாலைகளில் வரும் வாகனங்களும், பனிமூட்டத்தில் தெரிவதில்லை. அதனால் வண்டிகளில் லைட்டுகளை எரியவிட்டு வாகன ஓட்டிகள் செல்கிறார்கள்..
சாம்பல் நிறம்: நீலகிரி மாவட்ட பூங்காக்களில் புல்வெளிகள் சாம்பல் நிறத்தில் பூத்து போயுள்ளன.. தார் ரோடுகளில் வெள்ளை கம்பளம் போர்த்தியது போல காணப்படுகிறது.. இரவு நேரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களில் உறைபனி கொட்டி கிடக்கிறது.. காணப்படவில்லை.. மலைக்காய்கறிகளும் உறைபனியில் மூழ்கிவிடுகிறது.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் உறைபனியால், உள்ளூர் மக்கள் முதல் சுற்றுலா பயணிகள் வரை அவதிக்கு ஆளாகி உள்ளனர். பனி, குளிர் காரணமாக, மாவட்ட மக்கள் வீட்டுக்கு வெளியே தீ மூட்டி குளிர் காய்ந்து வருகிறார்கள். சுற்றுலா பயணிகள் தங்கும் இடங்களிலிருந்து வெளியே வராமல் முடங்கி கிடக்கிறார்கள்.
சாரல் மழை: மற்றொருபக்கம் சாரல் மழையும் பெய்துவருவதால், போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது.. இந்த முறை, நீலகிரியில் புத்தாண்டு கொண்டாட்டமும் அவ்வளவாக காணப்படவில்லை.. புத்தாண்டு முடிந்து சொந்த ஊர்களுக்கு கிளம்பி செல்வதால், உறைபனியால் வாகனங்கள் வேகமாக செல்ல முடியவில்லை.. எப்படியும் இந்த மாத இறுதிவரை மாவட்டத்தில் உறைபனி நீடிக்கலாம் என தெரிகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications