நீலகிரியை கொத்தோடு அள்ளிய திமுக.. பாஜக எல். முருகனை வீழ்த்தி, ஆ. ராசா செய்த அடுத்த சக்ஸஸ் இதுதான்

Subscribe to Oneindia Tamil

ஊட்டி: நீலகிரி தொகுதியில் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில், திமுக வேட்பாளர் ஆ.ராசா அபாரமான வெற்றியை பெற்றுள்ளார்.. இந்த வெற்றியை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நீலகிரி தொகுதியை பொறுத்தவரை, வெளியூர் வேட்பாளர்களே அதிகமுறை வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பதால், இந்த முறையும், வெளியூர் வேட்பாளர்களே நிறுத்தப்பட்டனர்.

Nilgiris Lok Sabha Election results DMK A Raja BJP L Murugan

திமுக சார்பில் ஆ.ராசா, பாஜக சார்பில் எல்.முருகன், அதிமுக சார்பில் முன்னாள் சபாநாயகர் தனபால் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் களமிறங்கியதுமே, நீலகிரி தொகுதி, பரபரக்கும் "ஸ்டார்" தொகுதியாகிவிட்டது.

காங்கிரஸ்: நீலகிரி தொகுதியை எடுத்துக் கொண்டால் இது ஆரம்பத்தில், "காங்கிரஸின் மண்" என்றே பெயர் பெற்றது.. காரணம் இதுவரை 7 முறை காங்கிரஸ் இங்கு வெற்றி பெற்றுள்ளது. ஆனால், 1998, 1999 தேர்தல்களில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றிருக்கிறது என்றாலும், இன்று பலம் பெற்று மேலெழுந்து வளருகிறது தாமரை கட்சி.

இதற்கெல்லாம் காரணம், நீலகிரியில் படுகர் இன மக்களின் வாக்கு வங்கி அதிகமாகவே உளளது.. 1998-ல், படுகர் இனத்தை சேர்ந்த மாஸ்டர் மாதன், பாஜக சார்பில் போட்டியிட்டு, 322818 வாக்குகளும், 1999-ல், 369828 வாக்குகளும், 2004-ல் 257619 வாக்குகளும் பெற்றிருந்தார். இதற்கு பிறகுதான் பாஜகவின் வாக்கு சதவீதம் உயர ஆரம்பித்தது.

படுகர்கள்: கடந்த 2019 தேர்தலை எடுத்துக் கொண்டால், அதிமுகவும், பாஜகவும் இணைந்தே தேர்தலை சந்தித்தன.. அப்போது நீலகிரியில் கடுமையான போட்டி நிலவியது என்றாலும், 73.79% வாக்குகள் பதிவாகியிருந்தன.. ஆனால், இந்த முறை அதிமுக, பாஜக தனித்தனியாக களம் கண்டிருக்கின்றன. இதனால், ஓட்டுக்கள் பிரிந்து, திமுகவுக்கு சாதகமாகும் சூழல் உருவாகலாம் என்று பெரும்பாலான கருத்து கணிப்புகள் கூறியிருந்தன.

ஊட்டி, குன்னூர் இரண்டுமே திமுக, காங்கிரசுக்கு சாதகமாக உள்ளதாகவும், கூடலூர் பாஜகவுக்கு சாதகமாகவும் உள்ளதாக கணிப்புகளில் கூறப்பட்டிருந்தது. இதில், பாஜகவை பொறுத்தவரை, உள்ளடங்கிய மலைப்பகுதிகளில் தங்கள் பிரசாரத்திற்கு நல்ல பலன் கிடைக்கும் என்றே நம்பி களப்பணியாற்றியது.. மேலும், குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வசிக்கும் படுகர் இன மக்களும் தங்களுக்கு பெருவாரியாக வாக்களிப்பார்கள் என்றும் கணக்கு போட்டுள்ளது..

நிஜமான டஃப்: எனினும், பாஜக - அதிமுக இரண்டுமே கூட்டணி வைத்து போட்டியிட்டிருந்தால், திமுகவுக்கு நிஜமாகவே டஃப் தந்திருப்பது போலாகியிருக்கும் என்று அரசியல் நிபுணர்கள் கருத்து கூறியிருந்தார்கள்.

அதாவது, பாஜகவுடன் அதிமுக எப்படியும் கூட்டணியை வைத்துவிடும் என்றும், இதையடுத்து திமுகவை நீலகிரியில் வீழ்த்திவிடலாம் என்ற நம்பிக்கையில்தான், எல்.முருகன் ஒரு வருடத்துக்கு முன்பிருந்தே நீலகிரியில் களப்பணியில் இறங்கியிருந்தாராம். ஆனால், எடப்பாடியின் கூட்டணி பிடிவாதம் காரணமாக அது நடக்காமல் போய்விட்டதாம்.

அதிமுகவின் கோட்டையாக கருதப்படுவது இந்த மேற்கு மண்டலங்கள்தான்.. எனினும், நீலகிரியை மட்டும் அப்படி சொல்ல முடிவதில்லை.. எனினும், நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகள் 6-ல் 4 தங்கள் வசம் இருப்பதால், வெற்றி நிச்சயம் என்று உற்சாகமாக சொல்லி கொண்டிருக்கிறார்கள் அதிமுக தரப்பினர்.

வாய்ப்பு யாருக்கு: அதுமட்டுமல்ல, ஆ. ராசா, எல்.முருகன் ஆகிய 2 பேருமே நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்றாலும், தொகுதிக்கு எதுவுமே செய்யவில்லை. அதனால் எங்களுக்குதான் வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்று தொடர்ந்து நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் அதிமுகவினர்..!!

இந்த ஜாம்பவான்களுக்கு நடுவில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெயக்குமாரும் களமிறங்கியிருக்கிறார்.. தொழிலாளர்களுடன் இணைந்து, உருளைக் கிழங்கு மூட்டைகளை, தோளில் சுமந்து உருளைக்கிழங்கு மண்டியில் இறக்கி வைத்தபடி, மைக் சின்னத்துக்கு ஓட்டு கேட்டபோதே பலரது கவனத்தையும் பெற்றிருந்தார் ஜெயக்குமார். எனினும் மும்முனை போட்டியாகவே நீலகிரி பார்க்கப்பட்டு வருகிறது..

அபிப்பிராயம்: அதன்படி தற்போதைய கள நிலவரம் என்னவென்றால், பாஜக எம்பி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மீது பாசிடிவ் அபிப்பிராயமே மக்கள் மத்தியில் உள்ள நிலையில், சிட்டிங் எம்பியாக இருக்கும் ஆ.ராசா மீது மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுவதாக தெரிகிறது.. அதேசமயம், அதிமுக வேட்பாளர் டி.லோகேஷ் மீதும் எந்த அதிருப்தி காரணங்களும் தொகுதி மக்களுக்கு இல்லை..

ஆனாலும், பாஜக, அதிமுக வேட்பாளர்களைவிட, ஆ.ராசா சீனியர்.. கள அனுபவங்களை பலமுறை நேரடியாக பெற்றவர்.. எனவே, மற்றவர்களைவிட, ஆ.ராசாவே முதன்மை இடத்தை பெறக்கூடிய வாய்ப்பு நிறைய உள்ளது என்கிறார்கள்.

இந்நிலையில், தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட்டு வருகின்றன.. இதில் ஆரம்பத்திலிருந்தே திமுகவே முன்னிலை பெற்று வருகிறது.. அதிமுக 2வது இடத்தை பெற்று வருகிறது.. நீலகிரியை பெரிதும் நம்பியிருந்த பாஜக, இப்போது 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருவதால், முடிவுகள் எப்படியும் மாறலாம்.

தொடர்ந்து முன்னிலை: இந்நிலையில், தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட்டு வருகின்றன.. இதில் ஆரம்பத்திலிருந்தே திமுகவே முன்னிலை பெற்று வருகிறது.. அதிமுக 3வது இடத்தை பெற்று வருகிறது.. நீலகிரியை பெரிதும் நம்பியிருந்த பாஜக, இப்போது 2வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருவதால், முடிவுகள் எப்படியும் மாறலாம்.

காலை 10.30 மணி நிலவரப்படி, 11133 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார் ஆ.ராசா.. அதாவது, திமுக 24,110 வாக்குகளையும், பாஜக 12977 வாக்குகளையும், அதிமுக 9644 வாக்குகளையும் பெற்றிருந்தது.. நாம் தமிழர் கட்சி 2334 வாக்குகளை பெற்று 4வது இடத்திலும் இருந்தது.

1 மணி நிலவரப்படி, திமுக வேட்பாளர் ஆ.ராசா 1,39,307 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் இருந்தார்.. இதற்கு அடுத்தபடியாக பாஜக வேட்பாளர் எல்.முருகன் 75,897 வாக்குகளை பெற்று 2வது இடத்திலேயே இருந்தார்.. அதிமுக வேட்பாளர் லோகஷ் தமிழ்ச்செல்வன் 59,017 வாக்குகள் பெற்று 3வது இடத்தில் இருந்தார்..

2.30 மணி நிலவரப்படி, ஆ.ராசா 2,13,059 வாக்குகளை பெற்று முதலிடத்தில் உள்ளார்.. எல்.முருகன் 1,12,378 வாக்குகளை பெற்று 2வது இடத்தில் பின்தங்கி உள்ளார்.. அதிமுக வேட்பாளர் 92,196 வாக்குகளை பெற்று 3வது இடத்தை பெற்றிருக்கிறார்

4.30 மணி நிலவரப்படி 100681 வாக்குகள் வித்தியாசத்தில் இருந்தார் ஆ.ராசா.. அதன்படி திமுக பெற்ற வாக்குகள் 21,3059 ஆகும்.. பாஜக 11,2378 வாக்குகளையும், அதிமுக 71963 வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி 23796 வாக்குகளையும் பெற்றிருந்தது.

லட்சக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்களில் ஆ.ராசாவும் ஒருவர் ஆவார்.. அதேசமயம், கடந்த மக்களவைத் தேர்தலில் பெற்ற வாக்கு வித்தியாசத்தை விட இந்தத் தேர்தலில் கூடுதல் வித்தியாசத்துடன் வெற்றி பெற்றுள்ளார் ஆ.ராசா. 2.40 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் எல்.முருகனை வீழ்த்தியதுடன், 3வது முறையாக நீலகிரி மக்ளவை தொகையின் உறுப்பினரானார் ஆ.ராசா. இது நீலகிரி தொகுதி திமுகவுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+