பறந்த நோட்டீஸ்.. ஆர்எஸ்எஸ் ஆலோசனைக்கு இடமளித்த ஊட்டி தனியார் பள்ளிக்கு சிக்கல்.. நீலகிரியில் அதிரடி
நீலகிரி: நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆலோசனை கூட்டத்துக்கு இடமளித்த தனியார் பள்ளி சிக்கலை சந்தித்துள்ளது. அதாவது ஆர்எஸ்எஸ் ஆலோசனைக்காக ஒருவாரம் வரை பள்ளிக்கு விடுமுறை வழங்கிய நிலையில் கல்வித்துறை அதிரடி நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது.
இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் ஆர்எஸ்எஸ் அமைப்பு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலும் ஆர்எஸ்எஸ் அமைப்பு இயங்கி வருகிறது. இந்நிலையில் தான் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள தனியார் பள்ளியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் 3 நாள் தேசிய அளவிலான ஆலோசனை மற்றும் மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி இந்த ஆர்எஸ்எஸ் ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான நிர்வாகிகள் வந்து பங்கேற்றனர். நேற்று 2வது நாளாக மாநாடு நடந்தது. இன்று கடைசி நாள் ஆலோசனை நடக்கிறது.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் அகில பாரதிய பிராண்ட் பிரசாரக் பைதக் என்ற பெயரில் இந்த 3 நாள் ஆலோசனை கூட்டம் தொடங்கி நடந்து வருகிறது. இதில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், பொதுச்செயலாளர் தத்தாத்ரேய ஹோசபெலே உள்பட தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்பாடு, அமைப்பு செயல்படுவதில் உள்ள பிரச்சனை, எதிர்கால வியூகம் உள்ளிட்டவை பற்றி விவாதிக்கப்பட்டது. கடைசி நாளான இன்று மோகன் பாகவத், தத்தாத்ரேய ஹொசபெலே உள்ளிட்டவர்கள் முக்கிய அறிவுரைகளை வழங்க உள்ளனர்.
இந்நிலையில் தான் ஆர்எஸ்எஸ் ஆலோசனை கூட்டத்துக்காக பள்ளி நிர்வாகம் மாணவர்களுக்கு ஒரு வாரம் வரை விடுமுறை வழங்கி உள்ளதாக புகார்கள் எழுந்தன. இதுபற்றி கல்வித்துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர். இந்த விசாரணையை தொடர்ந்து தான் தனியார் பள்ளி சிக்கலில் சிக்கி உள்ளது.
அதாவது சம்பவம் தொடர்பாக தனியார் பள்ளிக்கு விளக்கம் கேட்டு மாவட்ட கல்வித்துறை அதிகாரி சார்பில் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நோட்டீசுக்கு பள்ளி விளக்கம் அளிக்க வேண்டும். இந்த விளக்கம் ஏற்றுக்கொள்ளும்படியாக இருந்தால் பிரச்சனையில்லை. மாறாக கல்வித்துறை அதிகாரியால் ஏற்க முடியாத வகையில் இருந்தால் அடுத்தக்கட்ட நடவடிக்கை உறுதியாக இருக்கும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications