கொடநாடு.. எடப்பாடிக்கு சிக்கல்?.. கதிகலங்கும் அதிமுக.. சயானின் வாக்குமூல அறிக்கை தாக்கல்.. பரபரப்பு
கொடநாடு விவகாரம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது
ஊட்டி: கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் குறித்த, சயான் அதிர்ச்சி வாக்குமூலம் தந்துள்ள நிலையில், இது தொடர்பான மறுவிசாரணை இன்று ஊட்டி கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அதிமுக புள்ளிகள் கதிகலங்கி போயுள்ளனர்.
கொடநாடு பங்களாவில் அதிமுகவின் மிக முக்கிய ஃபைல்கள், டாக்குமென்ட்டுகள் வைக்கப்பட்டிருந்தன.. ஆனால், ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு, இந்த கொடநாடு எஸ்டேட் சசிகலாவின் முழு கட்டுப்பாட்டில் வந்தது.. எனினும், கடந்த 2017-ல் சசிகலா சிறை சென்றுவிட்டார்.
இப்படிப்பட்ட சூழலில் இந்த பங்களாவில் திருட்டு புகார்கள் கிளம்பின.. இதுதொடர்பாக போலீசாரும் விசாரணை நடத்தி, பங்களாவிலிருந்து 2 பொம்மைகள் மட்டுமே திருடு போனதாக எப்ஐஆர் தாக்கல் செய்தனர்..

கொலை
பிறகு அடுத்தடுத்து, ஜெ.வி.ன முன்னாள் கார் டிரைவரும், எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினருமான கனகராஜ், சயான், மனோஜ், உதயன் உட்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கேஸ் பதிவு செய்யப்பட்ட உடனேயே, அதாவது ஏப்ரல் 28-ம் தேதி முக்கிய குற்றவாளியான கனகராஜ் சேலத்தில் வாகன விபத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார்...

சர்ச்சை
அதேநாளில் கோவை - பாலக்காடு சாலையில் 2வது குற்றவாளியான சயான் தனது மனைவி குழந்தையுடன் காரில் சென்றபோது, வாகனம் மோதியதில் சயானின் மனைவி, குழந்தை ஆகியோர் உயிரிழந்தனர் இந்த சம்பவம் நடந்த அடுத்த ஒரே வாரத்தில் கொடநாடு கம்ப்யூட்டர் என்ஜினியர் தினேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்... இப்படி அடுத்தடுத்த 4 மரணங்கள் ஒரே வழக்கில் பெரும் சர்ச்சையையும் சந்தேகத்தையும், பரபரப்பையும் கூட்டியது.

வாக்குமூலம்
இறுதியில் சயான், மனோஜ் இருவரும் கைதானார்கள்.. போலீசாரிடமும், நீதிபதிகளிடமும், மீடியா முன்பும், சயான் ஒரு அதிர்ச்சி வாக்குமூலம் தந்தார்.. அதில், எடப்பாடி பழனிசாமி, மற்றும் எடப்பாடி பழனிசாமியின் நண்பரும் அதிமுக மாநில வர்த்தகர் அணி அமைப்பாளர் கூடலூர் பகுதியை சேர்ந்த மர வியாபாரி சஜீவன் ஆகியோரின் தூண்டுதலின் பேரில் கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்றதாக வாக்குமூலம் தெரிவித்தார்.. இதே வாக்குமூலத்தை மனோஜும் தெரிவித்தார்.

தாக்கல்
ஆனாலும், சயான், மனோஜ் குண்டர் சட்டத்தின் கீழ் கைதானார்கள்.. இந்த வழக்கு ஊட்டியில் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி சஞ்சய் பாபா முன்னிலையில் விசாரணை நடந்து வருகிறது.. இப்படிப்பட்ட சூழலில் கடந்த 13ம் தேதி கோத்தகிரி போலிஸார் சயானிடம் மறுபடியும் மறு விசாரணை நடத்த வேண்டும் என்று மனு தாக்கல் செய்தனர்...

கொள்ளை
இதற்கான அனுமதி கிடைத்ததையடுத்து, கடந்த 17ம் தேதி விசாரணை நடத்தப்பட்டது.. அப்போது, எடப்பாடி பழனிசாமி தூண்டுதலின் பெயரில் கொள்ளை சம்பவம் நடைபெற்றதாகவும், கொலை, கொள்ளை சம்பவம் நடந்த அன்று மர வியாபாரி சஜீவன் மற்றும் அவரது சகோதரர் சுனில் ஆகியோர் பல்வேறு வசதிகளைச் செய்து தந்ததாகவும் சயான் அதிர்ச்சி வாக்குமூலம் தந்திருந்தார்.

வாக்குமூலம்
இதேபோல, தனபால் என்பவரிடமும் விசாரணை நடத்தி, அவரிடமும் போலீசார் பல முக்கிய தகவல்களை வாக்குமூலமாக பெற்றனர். சயான் மற்றும் தனபால் ஆகியோர் அளித்த வாக்குமூலத்தை 60 பக்கம் கொண்ட அறிக்கையாக போலீசார் தயார் செய்து இன்று ஊட்டி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி சஞ்சய் பாபா முன்பு தாக்கல் செய்தனர்.
Recommended Video

விசாரணை
கொடநாடு கொலை - கொள்ளை சம்பவம் குறித்த மறு இன்று தாக்கல் செய்ய உள்ள நிலையில், அதிமுக புள்ளிகள் கதிகலங்கி கிடக்கிறார்கள்.. இன்றைய வழக்கு விசாரணையை முன்னிட்டு, ஊட்டி கோர்ட்டில் மொத்த மீடியாக்களும் குவிந்தனர். சயான், தனபாலிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது... பிறகு, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் உதகை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும், அரசு தரப்புக்கும் இடையே கடும் விவாதம் நடந்தது.. இதையடுத்து வழக்கின் விசாரணை செப்டம்பர் 2ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பரபரப்பு
இந்த வழக்கின் விசாரணையில் தன்னுடைய பெயரை சேர்த்துவிட்டார்கள் என்ற ஒரே காரணத்துக்காக எடப்பாடி பழனிசாமி கடந்த ஒருவாரமாகவே டென்ஷனில் உள்ளார்.. சட்டசபையை 3 நாள் தொடர்ந்து புறக்கணித்தார்.. அவையிலேயே எதிர்ப்பை பதிவை செய்தார்.. வெளிநடப்பு செய்தார்... தர்ணாவில் ஈடுபட்டார்.. தன்மீது வீண் பழி என்று திமுகவை குற்றஞ்சாட்டினார்.. ஆளுநரை சந்திக்க சென்றார்..
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications