கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் தோண்டித் துருவும் சிபிசிஐடி.. பூசாரி, 2 வங்கி ஊழியர்களிடம் விசாரணை!
நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சிபிசிஐடி போலீசார் முன்பாக, கோடநாடு எஸ்டேட் கோயில் பூசாரி விக்னேஷ், தனியார் வங்கி ஊழியர்கள் 2 பேர் ஆஜராகியுள்ளனர். கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் 3 பேரும் இன்று விசாரணைக்காக ஆஜராகியுள்ளனர்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் கடந்த 2017 ஏப்ரல் மாதம் கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இரவு காவலாளி ஓம் பகதூர் படுகொலை செய்யப்பட்டார். மேலும் எஸ்டேட் பங்களாவில் சில பொருட்கள் கொள்ளை போயின. இந்தச் சம்பவத்தில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்ட 11 பேர் ஈடுபட்டது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

அடுத்த சில நாட்களில் கார் ஓட்டுநர் கனகராஜ் சேலம் அருகே ஒரு சாலை விபத்தில் உயிரிழந்தார். இது விபத்து அல்ல, கொலை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இதைத்தொடர்ந்து, அதே ஆண்டு ஜூலை 3 ஆம் தேதி கொடநாடு பங்களாவில் சிசிடிவி ஆபரேட்டராக இருந்த தினேஷ் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அடுத்தடுத்த மரணங்கள் கோடநாடு வழக்கில் பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தின.
இது தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக சயான், வாளையார் மனோஜ் உள்ளிட்ட 19 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 500க்கும் மேற்பட்டவர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த வரிசையில், கொடநாடு எஸ்டேட்டில் பல ஆண்டுகளாக கோவில் பூசாரியாக இருந்து வரும் கோத்தகிரியை சேர்ந்த விக்னேஷ் என்ற நபருக்கு சிபிசிஐடி போலீஸ் சம்மன் அனுப்பிருந்தனர். அதன்படி கொடநாடு எஸ்டேட் கோவில் பூசாரி விக்னேஷ் இன்று கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.
இதே போல புதுச்சேரி மாநில வங்கி மேலாளருக்கும் போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். வங்கி மேலாளர் உள்ளிட்ட 2 பேர் கோவை காவலர் பயிற்சி மைதானத்தில் அமைந்துள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஆஜராகியுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்களின் வங்கி பரிவர்த்தனைகள் தொடர்பாக 26 வங்கிகளிடம் தகவல் கோரப்பட்ட நிலையில், சம்பவம் நடந்த காலத்தில் பணியில் இருந்த 2 வங்கு அலுவலர்கள் தற்போது விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர்.
இவர்களிடம் டிஎஸ்பி சந்திரசேகர் மற்றும் அண்ணாதுரை தலைமையிலான சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்துகொண்ட கணினி ஆபரேட்டர் தினேஷின் செல்போன் குறித்து அவரது தந்தையிடம் சிபிசிஐடி போலீசார் அண்மையில் விசாரணை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications