குன்னூர் -மேட்டுப்பாளையம் சாலையில் மண் சரிவு! 2 மணி நேரம் நடுவழியில் சிக்கித் தவித்த எல்.முருகன்!
நீலகிரி: குன்னூர் -மேட்டுப்பாளையம் இடையே உள்ள பர்லியார் என்ற இடத்தில் மண் சரிவு ஏற்பட்டதால் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக நடுவழியில் சிக்கித் தவித்தார்.
கடந்த 2 நாட்களாகவே கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்றிரவு முதல் பெய்த கனமழை காரணமாக குன்னூர் -மேட்டுப்பாளையம் இடையே உள்ள பர்லியாறு செக் போஸ்ட் அருகே மண் சரிவு ஏற்பட்டது. அதேபோல் குன்னூர் -மேட்டுப்பாளையம் சாலையில் ஆங்காங்கு மரங்களும் வேரோடு முறிந்து விழுந்தன. இதனால் போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டு 2 மணி நேரமாக ஸ்தம்பித்தது.

இந்தச் சூழலில் குன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கிச் சென்ற மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பர்லியாறு அருகே ஏற்பட்ட மண் சரிவு காரணமாக போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டார். சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மலைப்பாதையில் நடுவழியில் சிக்கித் தவித்தார். இது குறித்து தகவலறிந்து சென்ற காவல்துறையினர் மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் மண்ணை அள்ளி போக்குவரத்தை சீர் செய்தனர்.
இதுகுறித்து எல்.முருகன் தரப்பில் கூறுகையில், சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து இடையூறைத் தொடர்ந்து அதை சரி செய்யும் பணிகளை அமைச்சர் முருகன் மேற்பார்வையிட்டார், மக்களின் பயணம் இடையூறு இல்லாமல் இருப்பதை உறுதி செய்த பிறகு கிளம்பிச் சென்றார் என்று தெரிவித்துள்ளனர்.
விடுமுறை தினம் என்பதால் குன்னூர் -மேட்டுப்பாளையம் சாலையில் வழக்கத்தை விட கூடுதல் எண்ணிக்கையில் வாகனங்கள் அணி வகுத்து நின்றன. இதையடுத்து காவல்துறையினர் உதவியுடன் நெடுஞ்சாலைத்துறையினர் மண் சரிவை சரி செய்து போக்குவரத்தை சீர் செய்தனர். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நீலகிரி மக்களவைத் தொகுதியில் எல்.முருகன் போட்டியிடவுள்ளதால் அடிக்கடி நீலகிரிக்கு சுற்றுப்பயணம் சென்று வருகிறார்.
நீலகிரி மக்களவை தொகுதியில் ஆ.ராசாவை தோற்கடித்தே தீர வேண்டும் என்ற பாஜக மேலிடத்தின் அசைன்மெண்டை நிறைவேற்றும் வகையில் நீலகிரி தொகுதி முழுவதும் சலிக்காமல் சுற்றிச் சுழன்று வருகிறார் எல்.முருகன் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications