தொடர் மழையால் உதகையில் மண்சரிவு - வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கோரையாறு தரைப்பாலம்!
நீலகிரி: நீலகிரி மாவட்டம், உதகையில் இரவும் முழுவதும் கொட்டி தீர்த்த கன மழையால், மலைப்பாதையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் நீலகிரியில்தான் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கனமழை நீடித்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் உதகை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான தலைகுந்தா, எச்.பி.எஃப், பாலடா, கல்லட்டி மலைப்பாதை, நடுவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் நேற்று இரவு முதல் தொடர்ந்து இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. இதனால் பைக்கரா அணையிலிருந்து தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், கல்லட்டி மலைத் தொடர்களில் ஆங்காங்கே நீர்வீழ்ச்சி ஏற்பட்டு மழை நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

இதனிடையே உதகையிலிருந்து கல்லட்டி மலைப்பாதை வழியாக மைசூர் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ள 36 கொண்டை ஊசி வளைவு கொண்ட மலைப்பாதையில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் பாறைகளும், மரங்களும் சாலைகளில் விழுந்தன. இதனைத் தொடர்ந்து பயணிகளின் பாதுகாப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டு, ஜேசிபி இயந்திரங்களுடன் நெடுஞ்சாலை துறையினர் சாலையில் விழுந்துள்ள மண் மற்றும் மரங்களை அப்புறப்படுத்தினர்.
தொடர்ந்து இடைவிடாமல் மழை பெய்து வருவதால் உதகையில் கடும் குளிர் நிலவி வருகிறது. மழை காரணமாக, உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்களின் நடமாட்டம் குறைந்தே காணப்படுகிறது.
விழுப்புரம் தரைப்பாலம்
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஏனாதிமங்கலம் - மாரங்கியூர் இடையே இந்தாண்டு கட்டப்பட்ட கோரையாறு தரைப்பாலம் வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்துக்குட்பட்ட கோரையாற்றில் அதிக தண்ணீர் வந்ததால் ஏனாதிமங்கலம் -மாரங்கியூர் இணைப்பு தரைப்பாலம் இந்தாண்டு ரூபாய் 24 லட்சம் மதிப்பீடு தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், தொடர் மழை காரணமாக சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது அடுத்து தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் வருவது அதிகரித்துள்ளது. இதனால் ஏனாதிமங்கலம் மாரங்கியூர் இடையே அமைக்கப்பட்ட தரைப்பாலும் மீண்டும் கோரையாற்று வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டது.

இதன் காரணமாக, மாரங்கியூர், சேத்தூர், பையூர், கொங்கராயநல்லூர் ஆகிய நான்கு கிராமங்கள் துண்டிக்கப்பட்டன. இதனால் கிராம மக்கள் 10 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் த.மோகன் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார்.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications