"அந்த 3 கால் எங்கேடா?" கதறும் கோத்தகிரி.. யாரது? நாலாபக்கமும் பறந்த ஆபிசர்ஸ்.. நீலகிரியில் நிசப்தம்
நீலகிரி: நீலகிரியில் சிறுத்தையை கொன்றது யார் என்று தெரியவில்லை.. இதையடுத்து, வனத்துறையினர் குற்றவாளிகளை பிடிக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
நீலகிரியில் சமீப காலமாக வனவிலங்கு வேட்டைகள் அதிகத்து வருகின்றன.. 2 மாதங்களுக்கு முன்பு கூட, புலிகள் மர்மமான முறையில் இறந்திருந்தன.. அதுவும் 4 புலிக்குட்டிகள் துடிதுடித்தே இறந்துவிட்டன. இந்த குட்டிகளின் அம்மா, என்ன ஆயிற்று என்றே இதுவரை தெரியவில்லை..

கோத்தகிரி: இப்படிப்பட்ட சூழலில், கோத்தகிரி மேல்தட்டப்பள்ளம் பகுதியில், ஒரு தேயிலை தோட்டத்தில் சிறுத்தை இறந்து கிடந்திருக்கிறது.. வனத்துறையினர் நேரில் சென்று பார்த்தபோதுதான், சிறுத்தையை சுருக்கு வைத்து கொன்றிருக்கிறார்கள் என்பதும், அந்த சிறுத்தையின் 3 கால் பகுதிகளும் வெட்டப்பட்டிருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதையடுத்து, வனத்துறையினர், மாவட்ட வன அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, விசாரணையை கையில் எடுத்துள்ளனர்.. உயிரிழந்தது ஆண் சிறுத்தை என்கிறார்கள். அதனுடைய 3 கால்களும் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், சிறுத்தையின் கோரைப் பற்களை யாருமே எடுக்கவில்லை.. சிறுத்தைகளின் நகங்களுக்கு கள்ளச்சந்தையில் படுகிராக்கி உள்ளது..
கள்ளச்சந்தை: எனவே, கள்ளச்சந்தையில் நகங்களை அதிக விலைக்கு விற்கவே, கால்களை கொடூரமாக வெட்டி எடுத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறார்களாம் அதிகாரிகள்.. உயிரிழந்த சிறுத்தைக்கு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த பிரேத பரிசோதனை செய்து மாதிரிகளும் சேகரிக்கப்பட்டுள்ளன..
இப்போதைக்கு, மாவட்ட வன அலுவலர் கவுதம் தலைமையில் கோத்தகிரி மற்றும் கீழ் கோத்தகிரி வனச்சரகர்கள் தலைமையில் 3 தனிப் படைகள் அமைக்கப்பட்டு, சம்பவம் நடந்த பகுதிக்கு அருகே குடியிருப்புகளில் விசாரணை நடத்தி வருகின்றனர்.. விசாரணையை வலுப்படுத்துவதற்காக, ஈரோடு, கோவை மாவட்ட வனத்துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொள்ள பணியமர்த்தப்பட்டுள்ளனர்...
நீலகிரி: நீலகிரியை பொறுத்தவரை, இந்த நாட்டின் முதல் பல்லுயிர்ச்சூழல் மண்டலமாக யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட பகுதி என்ற பெருமையை கொண்ட மாவட்டமாகும்.. அழிவின் விளிம்பில் தவிக்கும் எத்தனையோ வகையான உயிரினங்களின் கடைசி புகலிடமாக, இந்த நீலகிரிதான் திகழ்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், இப்போதெல்லாம் இந்த வாயில்லா ஜீவன்களின் உயிர்கள் அநியாயமாக கொல்லப்பட்டு வருவது நீலகிரி மக்களை நிலைகுலைய வைத்து வருகிறது.
இப்படித்தான், 2 வருடத்துக்கு முன்பு ஒரு புலி மர்மமான முறையில் இறந்துகிடந்தது.. அதற்கு போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டபோதுதான், பசியில் இருந்த அந்த புலி பல நாட்களாக பட்டினியாக இருந்திருப்பது தெரியவந்தது..
புலி மரணம்: அதனால், சாப்பிட எதுவும் கிடைக்காததால், ரோட்டில் கிடந்த குப்பைகளை சாப்பிட்டுள்ளது.. அந்த குப்பைகளில், பொதுமக்கள் தூக்கி வீசிய துண்டு பிளேடுகள் இருந்திருக்கின்றன.. அது என்னவென்றே தெரியாமல் புலி சாப்பிட்டிருக்கிறது.
நாளடைவில், அந்த பிளேடு, புலியின் வயிற்றை கிழித்து, ரணமாக்கி, இறுதியில் இறந்தே விட்டது. இதையெல்லாம் கேள்விப்பட்டு, நீலகிரி மக்கள் ரொம்பவே அதிர்ச்சியுற்றார்கள்.. எனவேதான், இப்போது சிறுத்தையை கொன்று, 3 கால்களை வெட்டியெடுத்த, அந்த குற்றவாளிகளுக்கு கடும் தண்டனையை தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்கள் மலைமக்கள்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications