Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உஷார்.. இன்ஸ்டாகிராம் விளம்பரத்தால் 2 லட்சம் போச்சு.. நம்பி ஏமாந்த நீலகிரி கல்லூரி மாணவர்

Subscribe to Oneindia Tamil

நீலகிரி: பண மோசடி சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் கல்லூரியில் படித்து வரும் இளைஞர் ஒருவர் இன்ஸ்டாகிராம் விளம்பரத்தை நம்பி சிறுக சிறுக 2 லட்சம் சேமித்து வந்த நிலையில், பணத்தை திருப்பி தராமல் அந்த தனியார் நிறுவனம் மோசடி செய்துள்ளது. இச்சம்பவத்தால் விரக்தியடைந்த மாணவர் தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில், ஆன்லைனால் மோசடி செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பங்குச் சந்தை, டிரேடிங், இரட்டிப்பு லாபம், குறைந்த முதலீடு அதிக லாபம் என தொடர்ந்து விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, இன்ஸ்டாகிராமில் இதுபோன்ற விளம்பரங்கள் அதிக அளவில் வருகின்றன.

nilgiris-college-student-cheated-out-of-rs-2-lakh-after-investing-on-instagram-ad

இன்றைய இளைஞர்கள் மத்தியில் சேமிக்க வேண்டும், முதலீடு செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால் படிக்கும்போதே முதலீடுகள் செய்யத் தொடங்குகின்றனர். பார்ட் டைம் வேலை செய்து அந்தப் பணத்தை முதலீடு செய்வது, பாக்கெட் மணியை சேமிப்பது என தங்களால் இயன்ற முறையில் சேமிப்புகளை சிறு வயது முதலே தொடங்குகின்றனர். ஒருபக்கம் இதுபோன்ற விழிப்புணர்வுகள் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், சமூக வலைதளங்களில் வரும் விளம்பரங்களை நம்பி புதிய புதிய செயலிகளில் முதலீடுகளை செய்து மோசடிக்கு ஆளாக்கப்படும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.

அஞ்சலக சேமிப்புத் திட்டங்கள், வங்கி சேமிப்புத் திட்டங்கள் பல இருந்தாலும் அதிக தொகை, இரட்டிப்புத் தொகைக்கு ஆசைப்பட்டு முன்பின் தெரியாத ஆன்லைன் செயலிகள் மூலம் முதலீடு செய்து ஏமாற்றப்படுகின்றனர். கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி ஏமாறுவது தொடர்கதையாகி வரும் நிலையில், நீலகிரி மாவட்டத்தில் கல்லூரியில் படித்து வரும் இளைஞர் ஒருவர் இன்ஸ்டாகிராம் விளம்பரத்தை நம்பி சிறுக சிறுக 2 லட்சம் சேமித்து வந்த நிலையில், பணத்தை திருப்பி தராமல் அந்த தனியார் நிறுவனம் மோசடி செய்துள்ளது. இச்சம்பவத்தால் விரக்தியடைந்த மாணவர் தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் 20 வயதான இளைஞர். இவர் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். படிக்கும்போதே தொழில் செய்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்துள்ளார். இதற்காக சமூக வலைதளங்களில், ஆன்லைனில் தொழில், வருமான வாய்ப்புகள் ஏதனும் உள்ளதா என தொடர்ந்து தேடி வந்துள்ளார்.

அப்போது, இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் விளம்பரம் ஒன்று வந்துள்ளது. அந்த விளம்பரத்தில் பணத்தை முதலீடு செய்தால் இருமடங்கு லாபம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நம்பிய மாணவர் ஆன்லைன் செயலி மூலம் பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக முதலீடு செய்து, கிட்டத்தட்ட ரூ.2 லட்சம் வரை முதலீடு செய்துள்ளார்.

ஒருகட்டத்தில் தான் முதலீடு செய்த தொகையை ஆன்லைன் நிறுவனத்திடம் திருப்பித் தரும்படி கேட்டுள்ளார். ஆனால், தொடர்ந்து பல்வேறு காரணங்களை கூறி முதலீட்டு தொகையை அந்நிறுவனம் திருப்பித் தராமலே இருந்துள்ளது. இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த மாணவர் கடந்த 2 நாட்களாக கல்லூரி விடுதி அறையிலேயே இருந்துள்ளார்.

மேலும், நண்பர்களிடம் கடனாக வாங்கிய பணத்தை திருப்பித் தர வேண்டும், ஒருபக்கம் முதலீடு செய்த தொகை மோசடி செய்யப்பட்டதால் மிகுந்த மன விரக்தியில் அந்த மாணவர் இருந்து வந்துள்ளார். ஒருகட்டத்தில் அந்த மாணவர் நேற்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைப் பாரத்த விடுதியில் இருந்த சக மாணவர்கள் அவரை மீட்டு ஊட்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

பின்னர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மாணவரை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இந்த மோசடி சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+