மகளை கர்ப்பமாக்கிய தந்தை.. நீலகிரியை அதிர வைத்த பாலியல் உறவு.. ஊட்டி நீதிபதி சொன்ன தீர்ப்பை பாருங்க
ஊட்டி: பெற்ற மகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து, கர்ப்பமாக்கியிருக்கிறார் குடிகார தந்தை.. இது தொடர்பான வழக்கில் ஊட்டி நீதிமன்றம் பிறப்பித்திருக்கும் தண்டனையானது, பலராலும் வரவேற்பை பெற்று வருகிறது. தீர்ப்பின் விவரமும் தற்போது வெளியாகி உள்ளது.
நீலகிரி மாவட்டம், குன்னூர் பகுதியை சேர்ந்த இந்த நபர், ஒரு கூலி தொழிலாளி ஆவார்.. திருமணமாகி மனைவி, 2 பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள்.. இந்த தொழிலாளி குடிப்பழக்கம் உள்ளவர்..

தினமும் குடித்துவிட்டு, வீட்டுக்கு வந்து தகராறு செய்வாராம். இதனால் மனைவி எவ்வளவோ இவரை திருத்த முயன்றும் முடியாததால், ஒருகட்டத்தில் வெறுப்படைந்து இவரை பிரிந்து வீட்டைவிட்டே போய்விட்டார்.
பாதுகாப்பு: இதனால், 2 பெண் குழந்தைகளும் தந்தையின் பாதுகாப்பில் இருந்து வந்துள்ளனர்.. கடந்த 2022ம் வருடம், இவர்களது மூத்த பெண் 10ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.. அப்போதுதான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
ஒருநாள் 2வது குழந்தை ஸ்கூலுக்கு சென்ற நிலையில், பட்டப்பகலில் குடிபோதையில் வீட்டிற்கு வந்த அப்பா, தன்னுடைய முதல் மகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்... இதை பற்றி வெளியே சொன்னால் கொலையே செய்துவிடுவதாகவும் மிரட்டியிருக்கிறார். இதனால், பயந்துபோன சிறுமி, இதை பற்றி யாரிடமும் சொல்லாமல் இருந்திருக்கிறாள்.
பலாத்காரம்: தன்னை பற்றி யாரிடமும், மகள் எதுவும் சொல்லவில்லை என்பதுமே, அப்பாவுக்கு குஷியாகிவிட்டது. எனவே, இதையே தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, மறுபடியும் பலமுறை பலாத்காரம் செய்திருக்கிறார்.. இதனால், அந்த சிறுமி கர்ப்பமானார்... தான் கர்ப்பமான விஷயத்தைகூட தெரியாத அந்த சிறுமி, ஒருநாள் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.. உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டதால், உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
அப்போதுதான், டாக்டர்கள் பரிசோதனையின்போது, சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து மருத்துவமனையில் இருந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மகளிர் போலீசாரின் விசாரணையும் ஆரம்பமானது.. இறுதியில்தான், பெற்ற மகளை, அப்பாவே பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியது தெரிய வந்தது.. எனவே, போக்சோவின் கீழ் அப்பாவை போலீசார் கைது செய்தனர்.
ஊட்டி கோர்ட்: அந்த சம்பவம், நீலகிரி மாவட்டத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை அப்போது ஏற்படுத்தியிருந்தது.. இது தொடர்பான வழக்கும், ஊட்டியில் உள்ள மகளிர் விரைவு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் செந்தில்குமார் ஆஜராகியிருந்த நிலையில், தற்போது இந்த வழக்கில் தீர்ப்பு தரப்பட்டுள்ளது.
ஆயுள் தண்டனை: பெற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு, சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்ற நீதிபதி லிங்கம் நேற்றைய தினம் உத்தரவிட்டுள்ளார்.. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசிடம் இருந்து ரூ.10 லட்சம் இழப்பீடு பெற்று தர மாவட்ட நிர்வாகத்திற்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். கூலி தொழிலாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதை பலதரப்பினரும் வரவேற்று வருகிறார்கள்.
இப்படித்தான், கடந்த 2017ம் ஆண்டிலும் நீலகிரி மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடந்தது.. கூடலூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 44 வயது ஜவுளி வியாபாரிக்கு, மனைவியும், 14 வயது மகளும் உள்ளனர். ஒருநாள் மனைவி வெளியே சென்றபோது, மகளை பலாத்காரம் செய்துள்ளார் ஜவுளி வியாபாரி.. இதனால், பாதிக்கப்பட்ட சிறுமி புகார் தந்ததையடுத்து, ஜவுளி வியாபாரி போக்சோவில் கைதானார். இந்த வழக்கும் ஊட்டி மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது.
அபராத தொகை: இறுதியில், மகளை பலாத்காரம் செய்ததற்கு ஆயுள் தண்டனையும், மிரட்டல் விடுத்ததற்கு 2 ஆண்டு சிறையும், ரூ.10 லட்சம் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் கூடுதலாக 5 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்றும் நீதிபதி அருணாசலம் தீர்ப்பளித்திருந்தபோதும், இதுபோலவே பலரும் அந்த தீர்ப்பினை வரவேற்றிருந்தனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications