Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குன்னூரில் நுழைஞ்சதுமே.. உருகுதே மருகுதே..பனியில உருகுது ஊட்டி, குளிரில் நடுங்குது நீலகிரி: மழை வேற

Subscribe to Oneindia Tamil

ஊட்டி: ஒருபக்கம் மழை, மறுபக்கம் உறைபனி, இதற்கு நடுவில் கண்ணுக்கே தெரியாத தொற்று என 3 விதமான இயற்கையின் பாதிப்பில் சிக்கியிருக்கிறாள் மலையரசி.. இதனால், நீலகிரி மலைமாவட்ட மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகமெங்கும் தற்போது வடகிழக்கு பருவமழை பொழிந்து வரும்நிலையில், நேற்று முன்தினம் வானிலை மையம் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது.. அதன்படி, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, நிலவுவதால், தமிழகத்துக்கு நல்ல மழை கிடைக்கும் என்று கூறியிருந்தது.

Nilgiris Ooty, Coonoor People suffer due to heavy fog, rain and Heavy medical checkup in nilgiris checkposts

நீலகிரி: அத்துடன், 4ம்தேதி அதாவது இன்றைய தினம் நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்திருந்தது.. நாளை 5ம்தேதியும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அதன்படியே, நேற்று மாலையிலிருந்தே நீலகிரியின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டி வருகிறது. நேற்றிரவு பெய்த மழை, இன்று விடிகாலை வரை நீடித்தது.. நேற்று மாலை 5 மணியிலிருந்தே நல்ல மழை பெய்தது.. இரவு 8 மணிக்கும் மீண்டும் மழை பெய்ய துவங்கியது.. இதனால் ஊட்டி, குன்னூர் உள்ளிட்ட நகரங்களிலும் மழைப்பொழிவு காணப்படுவதுடன், ஊட்டியின் சில முக்கிய பகுதிகளிலும் மின்தடையும் அவ்வப்போது ஏற்பட்டுவிடுகிறது..!!

குன்னூர்: நீலகிரியை பொறுத்தவரை, நவம்பர் மாதமே குளிர் துவங்கிவிடும்.. நவம்பர் இறுதியில் ஆரம்பித்த குளிர், டிசம்பர் மாதமும் நீடித்த நிலையில், தற்போது உறைபனிக்குள் சிக்கியுள்ளது நீலகிரி.. கடுமையான குளிர் நிலவி வருகிறது. இதனால் காலை நேரங்களில் அன்றாட பணிக்கு செல்வோர் உறைபனியால் காலதாமதமாக செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

சாயங்கால நேரங்களில் சீக்கிரமாகவே சாலைகள் வெறிச்சோடி விடுகின்றன.. சிறுவர்கள், பெரியவர்கள் என அனைவருமே கடும் குளிரால் நடுநடுங்கும் சூழல் உள்ளது..

இந்த ஒரு வார காலமாக, உறைபனி அதிகமாக காணப்படுகிறது.. விடிகாலை 5 மணியிலிருந்து காலை 8 மணி வரையில், பனி விலகாமல், சாலைகளில் உறைபனி கொட்டி கிடக்கிறது.. இதனால், சாலைகளில் வரும் வாகனங்களும், பனிமூட்டத்தில் தெளிவாக தெரிவதில்லை. புல்வெளிகளில் சாம்பல் நிறத்தில் பூத்து போயுள்ளன.. தார் ரோடுகளில் வெள்ளை கம்பளம் போர்த்தியது போல பனி காணப்படுகிறது.. இரவு நேரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களிலும், பனி மூழ்கிவிடுகிறது. மலைக்காய்கறிகளும் உறைபனியில் மூழ்கிவிடுகிறது.

விடிய விடிய பனி: நீலகிரியின் நுழைவுவாயில் பகுதியான குன்னூரில், விடிய விடிய பனி கொட்டுகிறது.. இதனால், மந்தமான கால நிலை நிலவி கொண்டிருக்கிறது.. குன்னூர் - மேட்டுபாளையம் ரோட்டில், வாகன ஓட்டிகள், வண்டிகளில் லைட்டுகளை ஒளிர விட்டபடியே மெதுவாக ஓட்டிச் செல்கிறார்கள்.. இந்த குளிருக்கு நடுவேதான், நேற்று முன்தினம் சாரல் மழை பெய்தது.. நேற்றைய தினம் பலத்த மழை கொட்டி தீர்த்தது.. பனி, குளிர், சாரல் மழை போன்ற காரணங்களினால், ஆங்காங்கே போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது..

பனி, குளிர் காரணமாக, மாவட்ட மக்கள் வீட்டுக்கு வெளியே தீ மூட்டி குளிர் காய்ந்து வருகிறார்கள். இந்த குளிரால், உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.. சுற்றுலா பயணிகள் தங்கும் இடங்களிலிருந்து வெளியே வராமல் முடங்கி கிடக்கிறார்கள். காலை நேரங்களில் தங்கும் விடுதிகளில் தீ மூட்டி குளிர்காய்ந்து வருகின்றனர்.. இதனால், பூங்கா உள்ளிட்ட பல பகுதிகளில் இயற்கை காட்சிகளை காண முடியாமல் ஏமாற்றமடைந்துவிடுகிறார்கள்.

தொற்று: இதற்கு நடுவில் கொரோனா தொற்றும் நீலகிரியில் எட்டி பார்த்துள்ளது.. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களை ஒன்றிணைக்கும் மாவட்டமாக நீலகிரி திகழ்வதால், கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்திற்கு தினமும் கேரளா மற்றும் கர்நாடகாவில் இருந்து பஸ்கள், தனியார் வாகனங்கள் மூலம் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து போகிறார்கள்..

உணவு பொருட்கள்: இதைத்தவிர, கேரளா, கர்நாடகாவிற்கு, தமிழ்நாட்டில் இருந்து உணவுப் பொருட்களை ஏற்றிச்செல்லும் லாரிகளும், கனரக வாகனங்களும் வந்து போகின்றன.. கர்நாடகாவிலும், கேரளாவிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதையடுத்து, நீலகிரியிலும் மருத்துவ கண்காணிப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொற்று இல்லை என்று உறுதியாக தெரிந்தபிறகே, சம்பந்தப்பட்டவர்கள் தமிழக எல்லைக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

கீழ்நாடுகாணி, தாளூர், பாட்டவயல். பிதர்காடு, கக்கநள்ளா உள்ளிட்ட 5 சோதனை சாவடிகளிலும் சுகாதாரப் பணியாளர்கள் தீவிர பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர்..

இப்போதைக்கு நீலகிரியில் 5 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. அவர்களுக்கு சிகிச்சையும் நடந்து கொண்டிருக்கிறது. கேரளாவில் இப்போது ஜே.என்.1 வகை கொரோனா தொற்று பரவிவருவதால், நீலகிரி மாவட்டத்திலும், தொற்று ஏற்படாத வகையில் மிக தீவிரமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட கலெக்டர் அருணா மேற்கொண்டு வருகிறார்.

மலையரசி: ஆக, ஒருபக்கம் உறைபனி, மறுபக்கம் சாரல் மழை, இன்னொருபக்கம் கண்ணுக்கு தெரியாத தொற்று போன்ற இயற்கையின் பாதிப்பில் மலையழகி மாட்டிக் கொண்டிருக்கிறாள்.. எப்படியும் இந்த மாத இறுதிவரை உறைபனி நீடிக்கலாம் என்பதால், பிப்ரவரி மாத துவக்கத்திற்கு பிறகே, இந்த தீவிரத்திலிருந்து தன்னை அவள் மெல்ல விடுவித்து கொள்வாள் என்றும், மாவட்ட மக்களும் இயல்பு நிலைக்கு திரும்புவார்கள் என்றும் நம்பப்படுகிறது...!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+