ஊட்டியில் உறைபனி.. மைனஸ் டிகிரியில் நீலகிரி.. இப்பவே உதறுது.. இது வேறயா.. திடீர்னு வந்த "இடி" தகவல்
ஊட்டி: நீலகிரியில் கடுமையான பனி கொட்டி வருகிறது.. உறைபனியில் ஊட்டி உறைந்து கொண்டிருக்கிறது.. இப்படியே போனால், மைனஸ் டிகிரியில் குளிர் வாட்டக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நீலகிரியை பொறுத்தவரை, நவம்பர் மாதமே குளிர் துவங்கிவிடும்.. நவம்பர் இறுதியில் ஆரம்பித்த குளிர், டிசம்பர் மாதமும் வலுவாகி, ஜனவரியில் அதிகரித்து மார்ச் முதல் வாரம் வரை தொடர்வது வாடிக்கையான ஒன்று.
உறைபனி: ஆனால், இந்த வருடம் வழக்கத்துக்கு மாறாக உறைபனி தாமதமாக தொடங்கியது.. காரணம், கடந்த வருடம் அதிக அளவு மழை நாட்கள் இருந்ததாலும், மற்றும் மேகமூட்டம் காரணமாகவும் உறைபனி தாமதமானது.. நவம்பர் மாத இறுதி அல்லது டிசம்பர் மாத தொடக்கத்தில்கூட உறைபனி குறைவாகவே இருந்தது.. ஆனால், டிசம்பர் மாதம் செல்ல செல்ல, பனியின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தபடியே உள்ளது.

இதனால் காலை நேரங்களில் அன்றாட பணிக்கு செல்வோர் உறைபனியால் காலதாமதமாக செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பனிப்பொழிவு கொட்டி வருவதால், இரவு நேரங்களில் பெய்யும் பனிப்பொழிவானது, காலை 8 மணி வரை நீடித்து வருகிறது..
வெறிச்சோடிய சாலைகள்: சாயங்கால நேரங்களில் சீக்கிரமாகவே சாலைகள் வெறிச்சோடி விடுகின்றன.. சிறுவர்கள், பெரியவர்கள் என அனைவருமே கடும் குளிரால் நடுநடுங்கும் சூழல் உள்ளது..
காலை 8 மணி வரையில், பனி விலகாமல், சாலைகளில் உறைபனி கொட்டி கிடப்பதால், சாலைகளில் வரும் வாகனங்களும், பனிமூட்டத்தில் தெளிவாக தெரிவதில்லை. புல்வெளிகளில் சாம்பல் நிறத்தில் பூத்து போயுள்ளன.. தார் ரோடுகளில் வெள்ளை கம்பளம் போர்த்தியது போல பனி படர்ந்து காணப்படுகிறது.. இரவு நேரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களிலும், பனி மூழ்கிவிடுகிறது. மலைக்காய்கறிகளும் உறைபனியில் மூழ்கிவிடுன்றன.
காலநிலை: மந்தமான கால நிலை காரணமாக, குன்னூர் - மேட்டுபாளையம் ரோட்டில், வாகன ஓட்டிகள், வண்டிகளில் லைட்டுகளை ஒளிர விட்டபடியே மெதுவாக ஓட்டிச் செல்கிறார்கள்.. உறைபனியால், மாவட்ட மக்கள் வீட்டுக்கு வெளியே தீ மூட்டி குளிர் காய்ந்து வருகிறார்கள். இந்த குளிரால், உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.. சுற்றுலா பயணிகள் தங்கும் இடங்களிலிருந்து வெளியே வராமல் முடங்கி கிடக்கிறார்கள்.
வருட துவக்கத்தின் முதல் நாளே வெப்பநிலை 4.3 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது.. தலைகுந்தா, அவலாஞ்சி, முக்கூர்த்தி, கேத்தி பள்ளத்தாக்கு உட்பட்ட பகுதிகளில் வெப்பநிலை பூஜ்ஜியத்தையும் எட்டியிருந்தது..
உறைபனி: இன்று அதிகாலை வெப்பநிலை, வெகுவாக குறைந்துவிட்டது.. ஊட்டி தாவரவியல் பூங்கா, ரேஸ்கோர்ஸ், ரோஜா பூங்கா, தலைகுந்தா, கேத்தி, லவ்டேல் பகுதிகளில் வெட்பநிலை 2.8 ஆக பதிவாகியிருக்கிறது.. இங்கெல்லாம் கடுமையான உறைபனி நிலவியது. உறைபனி தாமதமாக தொடங்கினாலும் அதன் தாக்கம் அதிகமாக இருப்பதாக நீலகிரி மக்கள் சொல்வார்கள்
தாவரங்கள் மற்றும் புல்வெளிகளும் தொடர்ந்து கருகி வருவதால், வனங்களில் பசுமை குறைந்து வனவிலங்குகள் இடம் பெயரவும் வாய்ப்புள்ளதாகவும் மாவட்ட மக்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள். உறைபனி குறித்து இந்திய மண் மற்றும் நீர்வளப்பாதுகாப்பு நிறுவன அதிகாரிகள் இதுகுறித்து முக்கிய அலர்ட் ஒன்றை விடுத்துள்ளனர்.
மைனஸ்: "கடல் மட்டத்திலிருந்து 2,000 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள தொட்டபெட்டா சிகரம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உறைபனியின் தாக்கம் அதிகம் காணப்படும்.. கூடலூர், பந்தலூர் பகுதிகளைவிட, ஊட்டி, குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் இந்த வருடம் கடுமையான உறைபனி நிலவும் வாய்ப்புள்ளது.. மேக மூட்டமின்றி தொடர்ந்து காணப்பட்டால் வெப்பநிலை மைனஸில் செல்லவும் வாய்ப்புள்ளது" என்றனர்.
இப்பவே குளிரில் நீலகிரி நடுங்கிவரும்நிலையில் மைனஸ் டிகிரிக்கு செல்லக்கூடும் என்று ஆய்வாளர்கள் சொல்லி உள்ளதால், மலைமக்கள் கதிகலங்கி போயிருக்கிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications