Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குலுங்கிய நீலகிரி.. கத்தியை சுழற்றிய டாஸ்மாக் திருடன் மணி.. சரமாரியாக சுட்ட போலீஸ்.. ஒரே பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

நீலகிரி: நீலகிரியில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி பிரபல கொள்ளையன் ஒருவரை கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டாஸ்மாக்கில் திருட முயன்ற நபரை போலீசார் சுட்டு பிடித்தனர்.

Police shoot and arrest a TASMAC smuggler in Nilgris today morning

நீலகிரி குந்தலாடி பகுதியில் டாஸ்மாக் கடையில் இந்த சம்பவம் நடந்து உள்ளது. அங்கு கொள்ளையடித்து மது பாட்டில்களை எடுத்து செல்ல முயன்ற மணி மீது போலீசார் அதிகாலையில் துப்பாக்கி சூடு நடத்தினர்.

கும்பலாக வந்த மணி மற்றும் கொள்ளையர்கள் குறித்து தகவல் கிடைக்கவே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். அங்கு கொள்ளையர்கள் போலீசாரை சரமாரியாக தாக்கி உள்ளனர். சில போலீசாரை அவர்கள் கத்தியால் வெட்டியதால், பதிலுக்கு போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்

இதில் காயம் அடைந்த மணி சிகிச்சைக்காக கூடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். துப்பாக்கி சூட்டில் காயங்களோடு தப்பியோடிய மற்றொரு கொள்ளையனை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர்.

போலீசார் - புதிய அதிரடி

ரவுடிகளை, கொள்ளையர்களை சூடுபிடிக்கும் புதிய வழக்கத்தை போலீசார் தமிழ்நாட்டில் கையில் எடுத்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் மட்டும் 3க்கும் மேற்பட்ட ரவுடிகளை போலீசார் சுட்டு பிடித்தனர்.

உதாரணமாக கடந்த பிப்ரவரி 22ம் தேதி தூத்துக்குடியில் வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. தூத்துக்குடி மாவட்டம் சிப்காட் அருகே இருக்கும் சோரீஸ்புரத்தில் இந்த சம்பவம் நடந்தது.

வழக்கறிஞர் முத்துக்குமாரை அவரின் நகை அடகுகடை முன்பு வைத்து மர்மநபர்கள் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். முன்பகை காரணமாக இந்த கொலை நடந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இந்த வழக்கறிஞர் முத்துக்குமார் கொலை வழக்கில் ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்டார். அதன்பின் ஒருவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார். கொலை வழக்கில் முக்கிய நபரான ரமேஷ் என்பவர் போலீசுக்கு டிமிக்கி கொடுத்து சுற்றி வந்தார். கடைசியில் அவரும் உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். மொத்தமாக இந்த வழக்கில் இதுவரை 5 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்து உள்ளனர்.

மேலும் வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த நிலையில்தான் முக்கிய குற்றவாளியான ஜெய்பிரகாஷை போலீசார் தேடி வந்தனர். வழக்கறிஞர் முத்துக்குமார் கொலையில் தேடப்பட்டு வந்தவர் ஜெயப்பிரகாஷ். இவர்தான் இந்த கொலைக்கு பின் இருந்தவர் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று முக்கிய குற்றவாளியான ஜெயப்பிரகாஷை போலீசார் கைது செய்ய முயலும் போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். காவல்துறையினரை தாக்கிவிட்டு ஜெயப்பிரகாஷ் தப்ப ஓட முயற்சி செய்த போது அவர் காலின் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி அவரை பிடித்தனர்.

அதேபோல் கோவையில் போலீசார் இதேபோல் துப்பாக்கி சூடு நடத்தினர். கோயம்புத்தூரை சேர்ந்த பிரபல ரவுடி சஞ்சய் ராஜா. இவர் கரட்டுமேடு பகுதியில் வசித்து வந்துள்ளார். ரவுடியான இவர் பல்வேறு கட்டப்பஞ்சாயத்து, தாக்குதல், கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளார். அங்கே இருக்கும் சில அரசியல் தலைகளின் தயவால் போலீசார் இவர் வளர்ந்த போதே அடக்கி ஒடுக்காமல் இருந்துள்ளனர். இந்தநிலையில்தான் துளிர்விட்டு போன சஞ்சய் தனது ரவுடித்தனத்தை பொதுமக்களிடமும் காட்ட தொடங்கி உள்ளார்.

கோவையில் ஆவாரம்பாளையம் பகுதியில் வசித்து வந்த இன்னொரு ரவுடி சத்யா என்னும் சத்யபாண்டி. இவரின் கேங்கிற்கும் சஞ்சய் கேங்கிற்கும் அடிக்கடி சண்டை வரும் என்று கூறப்படுகிறது. இந்த கேங் வார் முற்றவே இரண்டு தரப்பும் மாறி மாறி கடந்த 12ம் தேதி அடித்துக்கொண்டது. நடுரோட்டில் சத்யாவை சஞ்சய் வெட்டி கொலை செய்துள்ளார்.

அதோடு சத்யாவை துப்பாக்கியால் சுட்டு உள்ளார். அவரிடம் சீன துப்பாக்கிகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதை வைத்துதான் சஞ்சய் சரமாரியாக சுட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை செய்தனர்.

Police shoot and arrest a TASMAC smuggler in Nilgris today morning

இதையடுத்து கைது செய்யப்பட்ட சஞ்சயை போலீசார் சம்பவ இடங்களுக்கு அழைத்து சென்று விசாரணை செய்தனர். அதோடு அவரின் சீன துப்பாக்கிகளையும் வீட்டில் சென்று பறிமுதல் செய்தனர். துப்பாக்கியை வாங்கிவிட்டு திரும்பி வருகையில் சஞ்சய் தப்பி ஓட முயன்று உள்ளார். முக்கியமாக போலீசாரை அடித்து தள்ளிவிட்டு விலங்கோடு தப்பியோட முயன்று உள்ளார். இதையடுத்து போலீசார் அவரின் காலில் சுட்டு அவரை பிடித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+