School Leave: புரட்டி எடுக்கப்போகும் அதி கனமழை! ரெட் அலர்ட் காரணமாக நீலகிரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
நீலகிரி: நாளை நீலகிரி மாவட்டத்திற்று அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது. எனவே, மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருக்கிறது.
சிவப்பு எச்சரிக்கை எனில், 24 மணி நேரத்தில் 20 செ.மீக்கும் அதிகமான மழை பெய்யும். இந்த அளவு மழை நிலச்சரிவு, வெள்ளம், மரங்கள் சாய்வது, மின் கம்பங்கள் சரிவது என கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தலாம். எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமெடுத்திருக்கிறது. மழை காரணமாக கொங்கு மற்றும் தென் மாவட்டங்களில் நீர் நிலைகள் வேகமாக நிரம்பியுள்ளன. குறிப்பாக கடந்த ஜூன் 1ம் தேதி தொடங்கி இன்று வரை நீலகிரி மாவட்டத்தில் 60 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. இந்த காலத்தில் இயல்பாக 47 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பதிவாகி இருக்க வேண்டும். ஆனால், இயல்பை விட 27% அதிகமாக மழை இந்த மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.
அதேபோல கோயம்புத்தூரை பொறுத்தவரையில் இந்த காலத்தில் 41 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பதிவாகி இருக்க வேண்டும். ஆனால் 64 செ.மீ அளவுக்கு அதாவது இயல்பை விட 54 சதவீதம் அளவுக்கு மழை அதிகமாக பதிவாகியுள்ளது. இதேபோல தென்காசி மாவட்டத்தில் இயல்பை விட 109 சதவீதம் அளவக்கும், திருநெல்வேலி மாவட்டத்தில் இயல்பைவிட 329 சதவிகிதம் அளவுக்கு அதிகமாகும் மழை பதிவாகி இருக்கிறது.
இந்நிலையில்தான் நீலகிரி மாவட்டத்தில் நாளை ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாகவும் தென் இந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது அதன் காரணமாகவும் நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஒரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திண்டுக்கல், திருப்பூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மறுநாள் தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஆக.7ம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர், ராணிபேட்டை, திருப்பத்தூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஆக.8ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஆக.9ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஆக.10ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications