"மிக உறுதியாக உள்ளோம்!" கல்வி மற்றும் சுகாதாரம் குறித்து.. அமைச்சர் மா.சு கூறிய முக்கிய கருத்து
நீலகிரி: உதகையில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கொரோனா வேக்சின் பணிகள் தொடங்கி பல்வேறு விஷயங்கள் தொடர்பாகக் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
Recommended Video
தமிழ்நாடு மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தற்போது நீலகிரி மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார்.
இதனிடையே உதகையில் புதிதாகத் தொடங்கப்பட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பங்கேற்றார்.

வேக்சின் பணிகள்
மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ள மாணவ, மாணவியருக்கு அமைச்சர் வெண்மை மேலாடை வழங்கினார். அதன் பின்பு பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், "தமிழ்நாட்டில் முதல் தவணை கொரோனா தடுப்பூசி 99 சதவீதமும், இரண்டாம் தவணை கொரோனா வேக்சின் 77 சதவீதம் போடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் நோய் எதிர்ப்புச் சக்தி 88 சதவீதமாக இருந்து வருகிறது. தொடக்கத்தில் தடுப்பூசி போடுவதில் சுணக்கம் இருந்தது என்னவோ உண்மை தான்.

தமிழ்நாடு
அதேநேரம் கடந்த மே மாதத்துக்குப் பின்னர் வேக்சின் போடும் பணிகள் வேகம் எடுத்தது. தடுப்பூசி போடும் பணிக் கால தாமதமானதால், நோய் எதிர்ப்புச் சக்தி மக்களிடையே அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா வேக்சின் பணிகள் மக்கள் இயக்கமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாகத் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து கட்டுக்குள் இருந்து வருகிறது.

மாநில பட்டியல்
கல்வி மற்றும் சுகாதாரம் மாநில பட்டியலில் இருக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. அதற்கான நடவடிக்கை தொடர்ந்து நடந்து வருகிறது. கிராமப்புற மருத்துவ மாணவ, மாணவியருக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களுக்கான 534 மருத்துவ இடங்களில் பயிலும் மாணவ, மாணவியருக்கு அவர்களது மருத்துவ படிப்பிற்கான புத்தகங்கள் டேப்லெட் (மெபைல் கணினி) வழங்கும் நிகழ்ச்சி விரைவில் தமிழக முதல்வர் தலைமையில் நடைபெறும்.

மத்திய அரசுக்கு கடிதம்
தமிழகத்தில் காலதாமதத்தால் நிரப்பப்படாமல் உள்ள மத்திய அரசின் 24 இடங்கள் நிரப்புவது குறித்து துறைச் செயலர் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. இதற்கு உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசின் சார்பில் உறுதிமொழி சான்று தாக்கல் செய்தபின் அறிவிப்பு வரும்" என்று அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் க.ராமசந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
-
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications