நீலகிரி மாவட்டத்தில் மாஸ்க் அணியாதவர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை... கலெக்டர் அதிரடி அறிவிப்பு!
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறைத் தண்டனை வழங்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் இன்னசன்ட் திவ்யா அதிரடியாக அறிவித்துள்ளார்.
பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் வரும் பொதுமக்களுக்கு ரூ.200 அபராதமும் விதிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா ஆட்டம் போட்டு வருகிறது தமிழ்நாட்டிலும் கொரோனா பரவல் 500-க்குள் இருந்த பாதிப்புகள் தற்போது 600-க்கும் மேல் சென்று விட்டது. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் அதிக பாதிப்புகள் தொடர்ந்து பதிவாகி வருகிறது.

கோவையின் அண்டை மாவட்டமான நீலகிரி மாவட்டத்திலும் கொரோனா அச்சறுத்தி வருகிறது. மலை வாசஸ்தலமான நீலகிரி மாவட்டம் புகழ்பெற சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. இங்குள்ள ஊட்டி(உதகமண்டலம்), குன்னூர், கோத்தகிரி, கூடலூர் என அனைத்து இடங்களும் சுற்றுலா பயணிகளின் சொர்க்கபுரியாக விளங்கி வருகிறது.
குறிப்பாக ஊட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகள் மாஸ்க் அணிதல் உள்ளிட்டட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறைத் தண்டனை வழங்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் இன்னசன்ட் திவ்யா அதிரடியாக அறிவித்துள்ளார்.
பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் வரும் பொதுமக்களுக்கு ரூ.200 அபராதமும் விதிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். பொது சுகாதார சட்டத்தின் கீழ் இந்த சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கலெக்டர் கூறியுளளார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications