பறிபோன 9 உயிர்.. குன்னூர் பஸ் விபத்துக்கு காரணம் இதுதான்! காவல்துறை சொன்ன ஷாக் தகவல்! முழுவிபரம்
நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடந்த சுற்றுலா பஸ் விபத்தில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த 9 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் தான் விபத்துக்கான காரணம் குறித்த திடுக்கிட வைக்கும் தகவல் போலீசாரின் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.
தொடர் விடுமுறை காரணமாக நீலகிரி மாவட்டத்துக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் தான் நேற்று இரவு குன்னூர் மேட்ப்பாளையம் மலைப்பாதையில் சுற்றுலா பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

மரப்பாலம் அருகே வளைவில் இந்த சுற்றுலா பஸ் திரும்பியபோது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. மேலும் கண்இமைக்கும் நொடியில் பஸ் சாலை தடுப்பு சுவரை இடித்து கொண்டு பள்ளத்துக்குள் பாய்ந்தது.
இந்த பஸ்சில் மொத்தம் 59 பேர் பயணித்த நிலையில் அவர் கூச்சலிட்டனர். இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள், தீயணைப்பு வீரர்கள் என அனைவரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். கயிறு கட்டி பேருந்தில் சிக்கியவர்களை மீட்டனர். அப்போது சம்பவ இடத்தில் 3 பேர் பலியானது தெரியவந்தது.
மேலும் 40க்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு 6 பேர் பலியாகினர். இதனால் பலி எண்ணிக்கை என்பது 9 ஆக அதிகரித்தது. மேலும் விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது தென்காசி மாவட்டம் கடையம் பகுதியை சேர்ந்தவர்கள் ஊட்டிக்கு சுற்றுலா வந்துவிட்டு சொந்த ஊர் திரும்பியபோது விபத்தில் சிக்கியது தெரியவந்தது. மேலும் விபத்தில் முப்புடாதி (வயது 67), முருகேசன் (வயது 65), இளங்கோ (64), தேவிகலா (வயது 42), கௌசல்யா (வயது 29), செல்வன், நிதின் உள்பட 9 பேர் உயிரிழந்தது தெரியவந்தது. மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது வருகி்றது.
இந்நிலையில் தான் விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் ஓட்டுநரின் அஜாக்கிரதையே விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு விபத்தில் 9 பேர் பலியான நிலையில், 43 பேர் படுகாயமடைந்துள்ளனர். 9 பேர் காயமின்றி தப்பினர் என கூறப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பாக சுற்றுலா பஸ் உரிமையாள், 2 ஓட்டுனர்கள், சுற்றுலா ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications