நொய்டா பண்ணை வீட்டில் பாலியல் தொழிலாளிகளை பலாத்காரம் செய்த 7 பேர் கைது
ஜாலியாக இருப்பதற்காக அழைத்துப்போன பாலியல் தொழிலாளர்கள் 3 பேர் 9 பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்துள்ளனர். கொடூர செயலை அந்த கும்பலைச் சேர்ந்த 7 போலீசர் கைது செய்தனர்.
நெய்டா: பணத்திற்காக உடலை விற்று பிழைக்கும் பாவப்பட்ட பெண்களான பாலியல் தொழிலாளிகளைக் கூட விட்டு வைக்காமல் ஏமாற்றி பலாத்காரம் செய்கின்றனர். நெய்டாவில் 9 பேர் கொண்ட கும்பல், 3 பாலியல் தொழிலாளிகளை பண்ணை வீட்டிற்கு அழைத்துப்போய் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த கொடூர செயலைச் செய்தவர்களில் 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பண்ணை வீட்டையும் சீல் வைத்துள்ளனர்.
செவ்வாய்கிழமை இரவு டெல்லி மெட்ரோ ஸ்டெசன் அருகே ஓலா கேப் வாகனத்தில் வந்த இரண்டு பேர் ஆளுக்கு 3000 ரூபாய் பேசி 3600 ரூபாய் அட்வான்ஸ் கொடுத்தனர். நொய்டாவில் உள்ள பண்ணை வீட்டிற்கு அழைத்துக்கொண்டு சென்றனர். அங்கே மேலும் ஏழு பேர் இருந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பாலியல் தொழிலாளிகள் அட்வான்ஸ் பணத்தை திரும்ப வாங்கிக்கொண்டு மீண்டும் தங்களைக் கொண்டு போய் டெல்லியில் விட்டு விடுமாறு கூறியுள்ளனர்.

ஆனால் ஒன்பது பேரும் அந்த 3 பெண் பாலியல் தொழிலாளிகளை பலவந்தமாக பலாத்காரம் செய்துள்ளனர். அதிகாலை வரை மாறி மாறி பலாத்காரம் செய்த அவர்கள், அதிகாலை 5 மணிக்கு கொண்டு போய் மெயின்ரோட்டில் விட்டு விட்டு சென்று விட்டனர். உடனே அந்த பெண்கள் அவசர போலீஸ் 100க்கு அழைத்து புகார் கொடுத்தனர் மேலும் எக்ஸ்பிரஸ்வே காவல் நிலையத்திற்கும் சென்று புகார் கொடுத்தனர்.
தங்களை பலவந்தமாக அனுபவித்து விட்டு மெயின் ரோட்டில் கொண்டு வந்து இறக்கி விட்டு விட்டதாகவும் தெரிவித்தனர். புகாரின் பேரில் கூட்டு பலாத்காரம், பலவந்த படுத்தி காயப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இதில் குற்றம்சாட்டப்பட்டுள்ள லவ்லேஸ் யாதவ் என்பவன் செக்யூரிட்டி கார்ட் ஆக பண்ணை வீட்டில் வேலை செய்கின்றான். ஒருவன் ஓலா கேப் டிரைவர். மற்ற குற்றவாளிகள் அகிலேஷ் யாதவ், போலா யாதவ், அர்ஜூன் யாதவ், ராஜேஸ் யாதவ், சதீஷ் பால், ராஜ்குமார் மயூரா, ஆகியோர் செய்யூரிட்டி வேலை செய்கின்றனர். முலாயம் சிங் என்பவன்தான் அந்த காரின் டிரைவர். அனைவரும் சேர்ந்து இந்த கூட்டு பலாத்காரத்தை செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதில் 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நொய்டா பண்ணை வீட்டையும் போலீசார் சீல் வைத்துள்ளனர்.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications