AI தொழில்நுட்பத்தால் வேலை இழப்பு ஏற்படாது! இயல்பு மட்டுமே மாறும்! பாரிஸ் மாநாட்டில் பிரதமர் மோடி உரை
பாரிஸ்: 3 நாள் பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடி அங்கு நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு தொழில் தொடர்பான உச்சி மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர், உலகின் தென்பகுதி மக்களுக்கும் ஏஐ தொழில்நுட்ப பலன்கள் சென்று சேர வேண்டும். ஏஐ தொழில் நுட்பத்தால் வேலையிழப்பு ஏற்படாது. அதன் இயல்பு மட்டுமே மாறும். ஏஐ எதிர்காலம் நல்லது என்பதை உறுதிப்படுத்த இந்தியா தனது அனுபவம் மற்றும் நிபுணத்துவத்தை பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளது என்று கூறினார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 2 நாள் செயற்கை நுண்ணறிவு உச்சி (ஏஐ) மாநாடு நேற்று தொடங்கியது. பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் நடத்தும் இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். அந்த வகையில் இமானுவேல் மேக்ரான் அழைப்பை ஏற்று, பிரதமர் மோடியும் பிரான்ஸ் நாட்டிற்கு சென்றார்.

3 நாள் பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, பாரிசில் இன்று நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு தொழில் தொடர்பான உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
மிக குறைந்த செலவில் 1.4 பில்லியனுக்கும் அதிகமான டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை இந்தியா வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது. ஏஐ வளர்ச்சி இந்தியா தனது அனுபவத்தையும் நிபுணத்துவத்தையும் பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளது. சுகாதாரம், கல்வி, விவசாயம் உள்ளிட்டவற்றை மேம்படுத்துவதன் மூலம் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்ற ஏஐ உதவும்
ஏஐ தொழில் நுட்பம் இதுவரை இல்லாத வகையில் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை அனைவரும் எளிதில் அணுகும் வகையில் பரவலாக்க வேண்டும். புதுவை நிர்வாகத்தை பற்றி நாம் ஆழமாக சிந்தித்து வெளிப்படையாக விவாதிக்க வேண்டும். பாதுகாப்பான முறையில் ஏஐ தொழில் நுட்பத்தை அனைவருக்கும் கொண்டு செல்ல வேண்டும்.
உலகின் தென்பகுதி மக்களுக்கும் ஏஐ தொழில்நுட்ப பலன்கள் சென்று சேர வேண்டும். ஏஐ தொழில் நுட்பத்தால் வேலையிழப்பு ஏற்படாது. அதன் இயல்பு மாறும். ஏஐ எதிர்காலம் நல்லது என்பதை உறுதிப்படுத்த இந்தியா தனது அனுபவம் மற்றும் நிபுணத்துவத்தை பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளது. ஏஐ தொழில் நுட்பம் மூலம் சுகாதாரம், கல்வி, விவசாயம் உள்ளிட்ட துறைகளில் புரட்சி ஏற்படுத்த முடியும். இவ்வாறு மோடி கூறினார்.
ஏஐ வளர்ச்சியில் அதிக உலக நிறுவனங்களை ஈடுபடுத்தவும், இந்தத் துறை அமெரிக்க-சீனப் போராக மாறுவதைத் தடுக்கவும் ஒரு முயற்சியாக பாரிசில் இந்த மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், சீன துணை பிரதமர் சாங் குவோகிங் உள்ளிட்ட சுமார் 100 நாடுகளின் தலைவர்களும், கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications