பின்லேடன் மகன் போட்ட ஒரே ஒரு போஸ்ட்.. "உச்சக்கட்ட பதற்றம்.." அலறிய ஐரோப்பிய நாடுகள்! என்ன நடந்தது
பாரிஸ்: உலகின் மிக கொடிய பயங்கரவாதியாகக் கருதப்பட்ட ஒசாமா பின்லேடனின் மகன் உமர் பின்லேடன் பிரான்ஸ் நாட்டில் வசித்து வருகிறார். அவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட ஒரே ஒரு போஸ்ட்டால் ஒட்டுமொத்த பிரான்ஸ் நாட்டிலும் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து சில பல முக்கிய நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனுக்கு ஏகப்பட்ட குழந்தைகள் உள்ளனர். அவர்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்தில் வாழ்ந்து வருகிறார்கள்.

அப்படி பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்து வந்தவர் ஒசாமா பின்லேடனின் மகன் உமர் பின்லேடன். இவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட போஸ்ட்கள் சர்ச்சையானது. இதையடுத்து அவரை நாட்டை விட்டு வெளியேறுமாறு பிரான்ஸ் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
பின்லேடன் மகன்: பின்லேடனின் மகனான உமர் பின்லேடன் சவுதி அரேபியாவில் பிறந்தவர். தொடக்கத்தில் பல ஆண்டுகள் சவுதியிலேயே இருந்த உமர், பின்னர் சூடான் மற்றும் ஆப்கானிஸ்தானிலும் சில காலம் வாழ்ந்தார். 19 வயதில் தந்தையை விட்டுப் பிரிந்து வந்த உமர் பின்லேடன், அதன் பிறகும் பல நாடுகளில் வசித்து வந்தார். இறுதியாக அவர் 2016இல் வடக்கு பிரான்சில் நார்மண்டியில் குடியேறினார். இப்போது 43 வயதான உமர், பிரான்ஸ் நாட்டில் ஓவியராக வாழ்க்கை நடத்தி வருகிறார்.
இந்தச் சூழலில் தான் அவரை நாட்டை விட்டு வெளியேறச் சொல்லி பிரான்ஸ் அரசு உத்தரவிட்டுள்ளது. பிரான்சின் உள்துறை அமைச்சர் புருனோ ரீடெய்லியோ இதை உறுதி செய்துள்ளார்.
உத்தரவு: கடந்த 2023இல் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் வகையிலான சில கருத்துகளை உமர் பின்லேடன் பதிவிட்டிருந்த நிலையில், அதற்காகவே இப்போது அவரை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் புருனோ ரீடெய்லியோ தெரிவித்தார். தேசியப் பாதுகாப்பு நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதை நீதிமன்றங்களும் உறுதி செய்துள்ளதாகவும் புருனே கூறினார்.
மேலும், வரும் காலத்தில் எந்தவொரு காரணத்திற்காகவும் உமர் பின்லேடன் மீண்டும் பிரான்ஸ் வர அனுமதி இல்லை என்றும் அவர் மீண்டும் பிரான்ஸ் வருவதைத் தடுக்கும் உத்தரவில் கையெழுத்திட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கூடுதலாக அவர் வேறு எந்தவொரு தகவலையும் தெரிவிக்கவில்லை. அதேநேரம் உமர் பின்லேடன் தற்போது எங்கு இருக்கிறார் என்பது குறித்தும் தெளிவான தகவல்கள் இல்லை.
மனைவி யார்: உமர் பின்லேடன் பிரிட்டன் நாட்டை சேர்ந்த ஜேன் பெலிக்ஸ்-பிரவுன் என்பவரைக் கடந்த 2006ம் ஆண்டில் திருமணம் செய்து இருந்தார். இந்த ஜேன் பெலிக்ஸ் வயதில் உமரை விட சுமார் 24 வயது மூத்தவர். மேலும் உமரை திருமணம் செய்யும் போது ஜேன் பெலிக்ஸுக்கு 5 பேரக்குழந்தைகளும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
திருமணத்திற்குப் பிறகு ஜேன் பெலிக்ஸ் தனது பெயரை இஸ்லாமிய முறையில் ஜைனா முகமது என்று மாற்றிக் கொண்டார். திருமணத்திற்குப் பின்னர் உமர் பின்லேடன் இங்கிலாந்தில் வசிக்க முயன்றார். இருப்பினும் பிரிட்டன் அரசு அதற்கு அனுமதி தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஒசாமா பின்லேடன்: உலகின் மிகவும் கொடிய பயங்கரவாதியாக அறியப்பட்ட ஒசாமா பின்லேடனுக்கு 20+ குழந்தைகள் உள்ளனர். உலகையே உலுக்கிய அமெரிக்கா இரட்டை கோபுர தாக்குதலுக்கு மாஸ்டர் மைண்டாக இருந்தது இந்த ஒசாமா தான். அதன் பிறகு இவரைப் பல ஆண்டுகள் அமெரிக்க தேடி வந்த நிலையில், கடைசியில் கடந்த 2011ல் பாகிஸ்தானில் வைத்துக் கொல்லப்பட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications