பிரதமர் மோடி கேட்ட ஒரு கேள்வி.. திணறிப்போனது AI.. அப்படி என்ன கேள்வி தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

பாரிஸ்: நேற்று பிரான்ஸில் நடைபெற்ற உலக செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்த மாநாட்டில் ஏஐ தொழில்நுட்பத்தால் இடது கையில் எழுதும் நபரின் புகைப்படத்தை உருவாக்க முடியவில்லை என பிரதமர் மோடி பேசியது பெரியளவில் ட்ரெண்டாகி வருகிறது.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் டெல்லியில் இருந்து பாரிஸ் சென்றார். அன்று இரவு பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான், அவருக்கு விருந்து அளித்தார். இதைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற 2வது நாள் செயற்கை நுண்ணறிவு மாநாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி இணை தலைமை ஏற்றார்.

World Narendra modi America

ஏஐ - மோடி சுட்டிக்காட்டிய விஷயம்

இந்த மாநாட்டில் ஏஐ தொழில்நுட்பம் குறித்துப் பேசிய பிரதமர் மோடி, சாதாரண விஷயத்தில் ஏஐ தொழில்நுட்பம் செய்யும் மிகப்பெரிய தவறை சுட்டிக்காட்டினார். அதாவது, ஏஐ தொழில்நுட்பத்திடம் நீங்கள் இடது கையில் யாராவது எழுதுவது போல புகைப்படம் கேட்டால், ஏஐ தொழில்நுட்பம் வலது கையால் ஒருவர் எழுதுவது போன்ற புகைப்படத்தையே பெரும்பாலும் தருகிறது எனக் கூறினார்.

பாரிஸ் ஏஐ உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கூறிய இந்த தகவல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. பிரதமர் மோடியின் இந்தக் கேள்வி சமூக வலைதளங்களிலும் ட்ரெண்ட் ஆகி வருகிறது. பலரும், Grok, ChatGPT போன்ற AI செயலிகளில் இந்தக் கேள்வியை கேட்டு தங்களுக்கு கிடைக்கும் படத்தை பதிவிட்டு வருகின்றனர்.

பிரதமர் மோடி பேச்சு

மேலும், இந்த மாநாட்டில் ஏ.ஐ தொடர்பாக பல்வேறு விஷயங்களைப் பேசினார் பிரதமர் மோடி. பிரதமர் மோடி பேசுகையில், "ஏஐ தொழில்நுட்பத்தின் ஆற்றல் அற்புதமானது. அதேநேரத்தில் இந்த தொழில்நுட்பத்தால் ஏற்படும் சவால்கள், எதிர்மறை விளைவுகள் குறித்தும் நாம் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.

நமது அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூகத்தை ஏஐ தொழில்நுட்பம் முழுமையாக மாற்றி அமைத்து வருகிறது. இந்த நூற்றாண்டில் மனிதகுலத்துக்கான கோடிங்கை ஏஐ எழுதி வருகிறது. ஏஐ தொழில்நுட்பம் அதிவேகமாக வளர்ச்சி அடைந்து பல்வேறு துறைகளில் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.

இந்த நேரத்தில் ஏஐ தொழில்நுட்பத்தை எவ்வாறு நிர்வகிப்பது, அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது, அவற்றால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சர்வதேச சமூகம் சிந்தித்து மனிதகுல நன்மைக்காக ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். அனைத்து நாடுகளுக்கும் ஏஐ தொழில்நுட்பத்தின் பலன்கள் கிடைக்க வேண்டும். இந்த தொழில்நுட்பத்தால் சுகாதாரம், கல்வி, வேளாண்மை உட்பட பல்வேறு துறைகளில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும்.

ஏஐ வாய்ப்புகளை முறையாகப் பயன்படுத்தினால் வறுமை ஒழிப்பு, சுகாதாரமான குடிநீர், அனைவருக்கும் மருத்துவ வசதி, தரமான கல்வி, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத எரிசக்தி என ஐ.நா சபை நிர்ணயித்துள்ள இலக்குகளை எளிதாகவும் விரைவாகவும் எட்ட முடியும். அதே நேரம் சைபர் பாதுகாப்பு, தவறான தகவல்களை பரப்புவது, டீஃப் பேக் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்தும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு பறிபோகாது

ஏஐ தொழில்நுட்ப வளர்ச்சியால் வேலைவாய்ப்புகள் பறிக்கப்படும் என்ற அச்சம் நிலவுகிறது. வரலாற்றை திரும்பி பார்த்தால் எந்தவொரு புதிய தொழில்நுட்பத்தாலும் வேலைவாய்ப்பு பறிபோகவில்லை என்பது தெளிவாகும். ஏஐ தொழில்நுட்பத்தால் வேலைவாய்ப்பு பறிபோகாது. புதிய வகை வேலைவாய்ப்புகள் உருவாகும். ஏஐ தொழில்நுட்பத்துக்கு ஏற்ப இளம் தலைமுறையினருக்கு திறன்சார் பயிற்சி வழங்க வேண்டும்.

சூரிய மின்சக்தி உற்பத்தி துறையில் இந்தியாவும் பிரான்ஸும் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றன. தற்போது ஏஐ தொழில்நுட்ப துறையிலும் இரு நாடுகளும் கைகோத்து உள்ளன. ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதிய சாதனைகளை படைக்க வேண்டும். உலக நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் ஏஐ தொழில்நுட்ப நிபுணர்கள் மிக அதிகமாக உள்ளனர்.

அடுத்த ஏஐ மாநாடு இந்தியாவில்

இந்தியாவில் பல்வேறு மொழிகள் பேசப்படுகின்றன. இந்த மொழிகளை ஏஐ தொழில்நுட்பத்தில் ஒன்றிணைத்து வருகிறோம். ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், ஆராய்ச்சி துறைகளில் ஏஐ தொழில்நுட்பத்தை அதிகமாக பயன்படுத்தி வருகிறோம். உலகத்தின் நன்மைக்காக எங்களது அனுபவம், நிபுணத்துவத்தை பகிர்ந்து கொள்ள எப்போதும் தயாராக இருக்கிறோம்.

இப்போது ஏஐ தொழில்நுட்ப யுகத்தின் தொடக்கத்தில் இருக்கிறோம். இந்த தொழில்நுட்பத்தால் மனிதர்களைவிட இயந்திரங்கள் புத்திசாலிகளாக மாறிவிடும் என்று சிலர் அஞ்சுகின்றனர். நம்முடைய எதிர்காலத்தை தீர்மானிக்கும் திறவுகோல் நம்மிடமே இருக்கிறது. இந்த பொறுப்புணர்வு நம்மை சரியான பாதையில் வழிநடத்தும். பாரிஸை தொடர்ந்து ஏஐ தொழில்நுட்பம் தொடர்பான அடுத்த சர்வதேச மாநாடு இந்தியாவில் நடத்தப்படும்." என பிரதமர் மோடி உரையாற்றினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+